Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உள்ளாடைகளை அகற்றி மேஜையில் வைக்க சொன்னார்கள்! கதறி அழுதோம்! நீட் தேர்வில் நடந்த கொடுமை: மாணவி பேட்டி

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: நீட் தேர்வுக்கு வந்த மாணவியின் உள்ளாடையை கழட்ட சொல்லி துன்புறுத்திய சம்பவம் கேரள மாநிலத்தில் சமீபத்தில் அரங்கேறியிருந்த நிலையில், தேர்வு முடித்து உள்ளாடையை மீண்டும் அணிந்து செல்வதற்கு கூட தேர்வு நடத்துபவர்கள் அனுமதிக்கவில்லையென்று 17 வயது மாணவி ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார். தேர்வின்போது ஏற்பட்ட மன உளைச்சலை பற்றி அவர் விரிவாக பேட்டியளித்துள்ளார்.

Recommended Video

    Neet Exam எழுத வேண்டும்ன்னா...Bra-வை கழட்டி வச்சுட்டு வாங்க ! | Kerala Neet Exam Controversy |*India

    நாடு முழுவதும் கடந்த ஜுலை 17ம் தேதி நீட் தேர்வு நடைபெற்றது. இத்தேர்வின் போது கேரளாவில் ஒரு குறிப்பிட்ட தேர்வு மையத்தில் மாணவிகள் தங்களின் உள்ளாடையை கழற்றிவிட்டு மேலாடையை மட்டும் அணிந்து வந்தாலே தேர்வெழுத அனுமதிக்கப்படுவார்கள் என வற்புறுத்தப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.

    சோதனை

    சோதனை

    இந்நிலையில் இது தொடர்பாக இந்திய தண்டனை சட்டங்கள் 354 ( பெண்ணின் மாண்பை சிதைக்கும் வகையில் வற்புறுத்துவது) 509 ( பெண்ணின் மாண்பை சிதைக்கும் வகையில் செயல்படுவது) ஆகியன பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் கொல்லம் மாவட்டம் அய்யூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்வி நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தில் நடந்ததாகத் தெரிகிறது.

    மாணவி பேட்டி

    மாணவி பேட்டி

    இந்த மையத்தில் தேர்வின்போது தான் எதிர்கொண்ட நெருக்கடி குறித்து மாணவி ஒருவர் பேட்டியளித்துள்ளார். மாணவி கூறியதாவது, "தேர்வு எழுதுவதற்கு முன்பு எங்களை ஸ்கேன் செய்ய வேண்டும் என்று கூறினார்கள். இது இயல்பானதுதான் என நாங்கள் நினைத்துக்கொண்டோம். பின்னர் அவர்கள் எங்களை இரண்டு வரிசைகளாக பிரித்தனர்.

    உள்ளாடை

    உள்ளாடை

    அதாவது யாருடைய உள்ளாடைகளில் மெட்டல் ஹூக் பொருத்தப்பட்டுள்ளதோ அந்த மாணவிகள் ஒரு வரிசையிலும், அவ்வாறு பொறுத்தப்படாத உள்ளாடைகளை அணிந்து வந்த மாணவிகள் மறு வரிசையிலும் நிறுத்தப்பட்டனர். அப்போதுதான் நாங்கள் குழம்பினோம். பின்னர் என்னிடம் வந்து உங்களது உள்ளாடையில் மெட்டல் ஹூக் பொருத்தப்பட்டுள்ளதா என்று கேட்டனர். நான் ஆமாம் என்றதும் அந்த உள்ளாடையை (பிராவை) கழட்டி டேபிள் மீது வைக்க சொன்னார்கள்.

    மெட்டல் ஹூக்

    மெட்டல் ஹூக்

    நானும் அவ்வாறு செய்தேன். அங்கு குவியலாக இதுபோன்ற உள்ளாடைகள் இருந்தன. இது மீண்டும் எங்களுக்கு கிடைக்குமா என்றுகூட தெரியாது. பின்னர் தேர்வறைக்குள் சென்றோம். அங்கு மாணவ, மாணவியர் இருபாலரும் தேர்வு எழுத காத்திருந்தனர். இந்த சூழல் எங்களுக்கு மிகவும் சங்கடமாக இருந்தது. எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை எனவே எங்களது முடியை கோண்டு மார்பகங்களை மறைக்க வேண்டியதாயிருந்து." என மாணவி பேட்டியில் கூறியுள்ளார்.

    மீண்டும் அணிய மறுப்பு

    மீண்டும் அணிய மறுப்பு

    மேலும், "தேர்வு முடித்து வந்த பின்னர் எங்களது உள்ளாடைகளை கண்டுபிடிப்பது மிகவும் சிரமமாக இருந்தது. குவியலாக இருந்த உள்ளாடைகளில் மாணவிகள் தங்களுக்கானதை கண்டுபிடிக்க மிகவும் போராடினர். அவ்வாறு கண்டுபிடித்து எடுக்கப்பட்ட உள்ளாடைகளை மீண்டும் அணிந்துகொள்ள போதுமான இடவசதிகூட அங்கு இருக்கவில்லை. இதனால் மன உளைச்சல் அடைந்த மாணவி ஒருவர் அழுதுவிட்டார்.

    மன உளைச்சல்

    மன உளைச்சல்

    ஆனால் அங்கிருந்த பாதுகாப்பு ஊழியர்கள் எங்களை விரட்டுவதிலேயே குறியாக இருந்தனர். உங்களது பிரா கிடைத்துவிட்டால் எடுத்துகொண்டு இடத்தை காலி செய்யுங்கள். அதை அணிய வேண்டும் என்கிற அவசியமில்லை என்றும் கூறினர். ஆனால் மாணவிகள் பலர் அதை அணிந்துக்கொண்டு செல்வதற்காக காத்திருந்தனர். அதற்கு போதுமான இட வசதியும் இல்லை. ஒரேயொரு அறை மட்டுமே இருந்தது. அதுவும் வெளிச்சம் ஏதும் இல்லாமல் இருட்டாக இருந்தது. இது எங்கள் அனைவரையும் மோசமான மன உளைச்சலுக்கு உள்ளாக்கியுள்ளது." என மாணவி தனது பேட்டியில் கூறினார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+