இறுதி சடங்கு கூட செய்யவில்லை.. உதவுங்கள்.. கேரளாவில் நரபலி தரப்பட்ட தமிழ்ப்பெண்ணின் குடும்பம் கதறல்
திருவனந்தபுரம்: கேரளாவில் இரு பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த சிலையில், உயிரிழந்த இருவரில் ஒருவர் தமிழ்நாட்டை சேர்ந்த பத்மா என்பது அதிர்ச்சியை உருவாக்கியிருந்தது.
இந்நிலையில் உயிரிழந்த பத்மாவின் மகன் கேரளாவில் தனது தாயின் உடலை பெற சென்றிருக்கும் நிலையில் அம்மாநில அரசு தனக்கு எவ்வித உதவியும் செய்யவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த கொலை வழக்கில் உரிய நீதி கிடைக்க வேண்டும் எனவும் மகன் செல்வராஜ் வலியுறுத்தியுள்ளார்.

நரபலி
கேரளாவில் கடந்த மூன்று வாரத்திற்கு முன்னர் பத்தினம்திட்டா காவல்துறையினருக்கு ஒரு புகார் வந்துள்ளது. அதில் லாட்டரி விற்பனை செய்து வந்த தமிழ்நாட்டை சேர்ந்த பத்மா என்பவர் காணாமல் போனதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதில் கவனிக்கத்தக்க வேண்டிய அம்சம் என்னவெனில், இதற்கு முன்னர் கடந்த ஜூன் மாதம் இதே போல லாட்டரி விற்பனை செய்து வந்த பெண் ஒருவர் காணாமல் போயுள்ளதாக புகார் வந்திருந்தது. எனவே இந்த வழக்கை காவல்துறையினர் தீவிரமாக விசாரிக்கத் தொடங்கினர்.

கைது
விசாரணையில் பத்மாவிடம் கடைசியாக பேசியது முகமது ஷபி என்பது தெரிய வந்தது. இதனையடுத்து அவரை கைது செய்தது விசாரிக்கையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. அதாவது பத்தினம்திட்டாவின் திருவல்லாவை சேர்ந்த பகவல் சிங் அவரது மனைவி லைலா இருவரும் பணக்காரர்களாக வேண்டும் என தன்னிடம் வந்ததாகவும், இதற்கு நரபலி கொடுத்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று கூறி இரண்டு பெண்களை கடத்தி நான்தான் நரபலி கொடுத்தேன் என்று ஷமி ஒப்புக்கொண்டுள்ளார். இதனையடுத்து பகவல் சிங் மற்றும் லைலாவையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

வழக்கு விசாரணை
இந்த வழக்கு விசாரணை பல உண்மைகள் வெளிவந்தன. இந்நிலையில், பத்மாவின் மகன் செல்வராஜ் தனது தாயின் உடலை பெற கேரளா சென்றுள்ளார். ஆனால் அவருக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து ஏஎன்ஐ செய்தி ஊடகத்திற்கு பேட்டியளித்த அவர், "நாங்கள் கேரளா வந்து மிகவும் கஷ்டப்படுகிறோம். இந்த விவகாரத்தில் எங்களுக்கு யாரும் உதவவில்லை. இந்த வழக்கை நடத்த என்னிடம் பணம் இல்லை.

உதவி இல்லை
தற்போதுவரை ரூ.60,000 செலவழித்துள்ளேன். என்னிடம் மேற்கொண்டு செலவழிக்க பணம் இல்லை. அம்மாவுக்கு இறுதி சடங்கு செய்ய கூட என்னிடம் பணம் இல்லை. எனது வேலையையும் இழந்திருக்கிறேன். இந்த விவகாரம் தொடர்பாக கேரள முதலமைச்சரை இரண்டுமுறை சந்தித்திருக்கிறேன். ஆனால் வழக்கை அவர் பெரியதாக எடுத்துக்கொள்ளவில்லை. அதிகாரிகளும் எங்களுக்கு உதவவில்லை. டிஎன்ஏ பரிசோதனை அம்மாவின் உடலை உறுதி செய்ய வேண்டும்" என்று செல்வராஜ் தனது பேட்டியில் கூறியுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications