சிறுத்தைகள் “நோ பிராப்ளம்”.. விலைவாசி, வேலையின்மை பற்றி கவலைப்படுங்க மோடி - சீறிய ராகுல் காந்தி
திருவனந்தபுரம்: சிறுத்தைகளை திறந்துவிடுவதை பற்றி தனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றும், அத்தியாவசிய பொருட்கள் விலையேற்றம் மற்றும் வேலையின்மை விகிதம் ஆகியவற்றின்மீதும் பிரதமர் நரேந்திர மோடி கவலைப்பட வேண்டும் என்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் 72ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை வேற்றுமையில் ஒற்றுமை என்ற பெயரில் 15 நாட்களுக்கு பாரதிய ஜனதா கட்சி கொண்டாடி வருகிறது. அக்டோபர் 2ஆம் தேதி வரை 15 நாட்களும் பாஜக கொண்டாடுகிறது.
இதில் நாடெங்கும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஒரே இந்தியா மகத்தான இந்தியா என்ற பிரச்சாரத்தில் பாஜக தொண்டர்கள் ஈடுபட திட்டமிட்டுள்ளார்கள். அத்துடன் பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்ல நமோ ஆப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குவிந்த வாழ்த்து
இன்று பிறந்தநாள் கொண்டாடிய அவருக்கு குடியரசுத் தலைவர், மாநில முதலமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள், பாரதிய ஜனதா கட்சி மூத்த தலைவர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், உலக தலைவர்கள் பலர் சமூக வலைதளங்களின் மூலமாக வாழ்த்து தெரிவித்துள்ளனர். அத்துடன் சினிமா, விளையாட்டு பிரபலங்களும் மோடியை வாழ்த்தியுள்ளனர்.

சிறுத்தைகள்
பிரதமர் நரேந்திர மோடி தனது பிறந்தநாளான இன்று காலை மத்திய பிரதேசம் மாநிலம் சென்றார். அங்கு ஆப்பிரிக்காவின் நமீபியா நாட்டில் இருந்து அழைத்து வரப்பட்ட 8 சிறுத்தைகளில் 3 சிறுத்தைகளை குனோ தேசிய பூங்காவில் திறந்து விட்டார். சீட்டா வகை சிறுத்தைகள் இந்தியாவில் அழிந்து வரும் நிலையில் அந்த இனத்தை சேர்ந்த சிறுத்தைகளை மோடி திறந்துவிட்டுள்ளார்.

ராகுல் காந்தி பேச்சு
இந்த நிலையில் கேரளாவில் ஒற்றுமை யாத்திரையின்போது பேசிய காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, "மதம், மொழி ரீதியாக நாட்டை உடைக்க பிரிக்கிறார்கள். இந்த யாத்திரை ஒற்றுமையாக்குவதற்கு நான் பேசுவதற்கு முன் இங்கு அருமையான நடன நிகழ்ச்சி நடைபெற்றது. 3 தொழிலதிபர்கள் எப்படி நாட்டின் பொருளாதாரத்தை கையில் வைத்திருக்கிறார்கள் என்பதை இந்த நடன நிகழ்ச்சியில் காட்டினார்கள்.

வேலையின்மை
சிறுத்தைகளை இங்கு கொண்டு வந்து திறந்துவிடுவதை பற்றி எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. அதேபோல் அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் மற்றும் வேலையின்மை விகிதம் சரிவு ஆகியவற்றின் மீதும் பிரதமர் நரேந்திர மோடி கவலைப்பட வேண்டும்." என்று தெரிவித்துள்ளார்.
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக












Click it and Unblock the Notifications