திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கேரளாவில் களைகட்டும் ஓணம் பண்டிகை.. அத்தப்பூ கோலம், 64 வகை உணவு சமைத்து உற்சாக கொண்டாட்டம்!

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: கேரளாவில் ஓணம் பண்டிகை களைகட்ட தொடங்கியுள்ளது. மாநிலம் முழுவதும் மக்கள் அத்தப்பூ கோலமிட்டும், 64 வகையான உணவுகளை சமைத்தும் கடவுள் வழிபாடு செய்து உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.

கேரளாவில் மிக முக்கிய பண்டிகையான ஓணம் பண்டிகை கடந்த மாதம் 30 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 8 தேதி வரை விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு பண்டிகை மிகவும் பிரசித்தி பெற்றதாக உள்ள நிலையில் கேரளாவில் 10 நாட்கள் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகை மாநிலம் முழுவதும் விமரிசையாக கொண்டாடப்படும்.

நல்லரசு செய்த அரசனை 'வஞ்சகத்தால்' வீழ்த்தினாலும் மக்களிடம் புகழ் மறையாது.. ஸ்டாலின் ஓணம் வாழ்த்துநல்லரசு செய்த அரசனை 'வஞ்சகத்தால்' வீழ்த்தினாலும் மக்களிடம் புகழ் மறையாது.. ஸ்டாலின் ஓணம் வாழ்த்து

10 நாட்கள்

10 நாட்கள்

தமிழ்நாட்டில் பொங்கல் தமிழர் பண்டிகையாக கொண்டாடப்படுவதுபோல், கேரளாவில் ஓணம் பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்படும். 10 நாட்கள் கொண்டாடப்படும் இந்த பண்டிகை கேரளாவில் மலையாளம் மொழி பேசும் மக்களால் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆவணி மாதம் தொடங்கும் அஸ்தம் நட்சத்திரதின் முதல் நாளில் இருந்து திருவோணம் நட்சத்திரம் வரையிலான 10 நாட்கள் ஓணம் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்படும்.

 ஓணம் பண்டிகை

ஓணம் பண்டிகை


அதன்படி முதல் நாளில் இருந்து 10-வது நாள் வரை வீடுகளில் மக்கள் அத்தப்பூக்களால் கோலமிடுவர். இதேபோல் கடவுளை வரவேற்கும் விதமாக தினமும் புத்தாடை அணிந்து, விதவிதமான உணவு பொருட்களை சமைத்து உற்றார் உறவினர்களுக்கு கொடுத்து மகிழ்வர். மேலும் 10 நாட்களும் மக்கள் பல்வேறு நிகழ்ச்சிகளும் நடத்தி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடுவர். அதன்படி, கேரளாவில் நடப்பு ஆண்டுக்கான ஓணம் பண்டிகை ஆகஸ்ட் 30 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 8 தேதி வரை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

பள்ளி, கல்லூரிகளில்

பள்ளி, கல்லூரிகளில்

கொரோனாவால் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு கேரள மாநிலம் முழுவதும் ஓணம் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. வீட்டு வாசலில் அத்தப்பூ கோலம் இடும் பெண்கள் கேரளாவின் பாரம்பரிய சேலையும் அணிந்து பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இதேபோல் பல்வேறு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளிலும் ஓணம் பண்டிகையையொட்டி சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

64 வகை உணவுகள்

64 வகை உணவுகள்

தற்போது கேரளா அரசும் ஓணம் பண்டிகையை விமரிசையாக கொண்டாடும் வகையில் பல்வேறு முக்கிய நகரங்களில், இடங்களில் வண்ண வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா உள்பட பல இடங்களில் கோவில்களும் வண்ண விளக்குகளால் வெளிச்சம் வீசி வருகின்றன. மக்களும் வீடுகளில் அத்தப்பூ கோலமிட்டும், 64 வகையான உணவுகளை சமைத்து இறைவனுக்கு படைத்து பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.

English summary
Onam festival has started in Kerala. All over the state people are celebrating with enthusiasm by making Attapoo Golam and cooking 64 types of food and worshiping the deity.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X