வயது 36.. வயநாட்டில் பிரியங்காவுக்கு எதிராக கவுன்சிலரை வேட்பாளராக்கிய பாஜக! யார் இந்த நவ்யா ஹரிதாஸ்?
திருவனந்தபுரம்: கேரளா மாநிலம் வயநாடு லோக்சபா தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தியை எதிர்த்து பாஜக சார்பில் நவ்யா ஹரிதாஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். 36 வயது நிரம்பிய இவர் கோழிக்கோடு மாநகராட்சி கவுன்சிலராக உள்ள நிலையில் நவ்யா ஹரிதாஸ் யார்? பின்னணி என்ன? என்பது பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் ராகுல் காந்தி 2 தொகுதிகளில் போட்டியிட்டார். உத்தர பிரதேச மாநிலத்தில் தனது தாய் சோனியா காந்தி எம்பியாக இருந்த ரேபரேலி மற்றும் வயநாடு தொகுதிகளில் அவர் போட்டியிட்டார். இதில் 2 தொகுதிகளிலும் ராகுல் காந்தி வெற்றி பெற்றார்.

அதன்பிறகு ரேபரேலி எம்பி பதவியை தக்க வைத்து கொண்ட ராகுல் காந்தி, வயநாடு எம்பி பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து வயநாடு லோக்சபா தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தான் ஜார்கண்ட் சட்டசபை தேர்தலுடன் சேர்த்து வயநாடு லோக்சபா தொகுதிக்கு இடைத்தேர்தல் என்பது அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 13ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அதன்பிறகு நவம்பர் 23ம் தேதி ஓட்டு எண்ணி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
வயநாடு லோக்சபா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தியின் தங்கை பிரியங்கா காந்தி போட்டியிட உள்ளார். விரைவில் அவர் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்.
அதேபோல் கேரளாவை ஆளும் இடதுசாரிகளின் கூட்டணி (எல்டிஃஎப்) சார்பில் சத்யன் மேகேரி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். பாஜக சார்பில் நடிகை குஷ்பு வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி இருந்தன. நடிகையாக குஷ்பு புகழ்பெற்றவர் என்பதால் அவரை பிரியங்கா காந்திக்கு எதிராக களமிறக்க பாஜக திட்டமிட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தான் இன்று பாஜக வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். வயநாடு தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தியை எதிர்த்து பாஜக சார்பில் நவ்யா ஹரிதாஸ் என்பவர் வேட்பாளராக போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் நவ்யா ஹரிதாஸ் யார்? அவரது பின்னணி என்ன? என்பது பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதாவது பிரியங்கா காந்திக்கு எதிராக பாஜக களமிறக்கி உள்ள நவ்யா ஹரிதாஸ்க்கு தற்போது 36 வயது ஆகிறது. இவர் காலிகட் பல்கலைக்கழகத்தின் கேஎம்சிடி இன்ஜினியரிங் கல்லூரியில் பிடெக் பிரிவில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிப்பை கடந்த 2007 ம் ஆண்டில் முடித்துள்ளார். பாஜகவில் கேரளா மாநில பொதுச்செயலாளராக செயல்பட்டு வருகிறார். அதுமட்டுமின்றி கோழிக்கோடு மாநகராட்சி கவுன்சிலராக 2வது முறையாக உள்ளார்.
நவ்யா ஹரிதாஸ் மீது தற்போது வரை எந்த கிரிமினல் வழக்கும் இல்லை. அவருக்கு மொத்தம் ரூ.1.29 கோடிக்கு சொத்து உள்ளதாக ஏடிஆர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு அவருக்கு மொத்தம் 1.64 லட்சத்துக்கு கடன் உள்ளது. கேரளாவில் பாஜக கட்சியில் வளர்ந்து வரும் பெண் தலைவராக நவ்யா ஹரிதாஸ் அறியப்படும் நிலையில் அவர் வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தியை எதிர்த்து களமிறங்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications