சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

25 டூ 28 இடங்களில் போட்டி.. நாங்க மட்டுமல்ல, நீங்களும் சூரியன்தான்.. விசிக, மதிமுகவுக்கு திமுக செக்!

Google Oneindia Tamil News

Recommended Video

    நீங்களும் எங்க சின்னத்திலேயே போட்டியிடுங்க... திமுக கொடுத்த ஷாக்- வீடியோ

    சென்னை: லோக்சபா தேர்தலில் திமுக 25 முதல் 28 இடங்களில் போட்டியிட திட்டமிட்டுள்ளதாம்.

    காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி உள்பட பத்து தொகுதிகளை தூக்கிக் கொடுத்து விட்டது திமுக. தற்போது 30 இடங்கள் மீதம் உள்ளன. இதில் 25 அல்லது 28 இடங்கள் வரை தானே போட்டியிட திமுக முடிவு செய்துள்ளதாம்.

    அப்படியானால் விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக கதி என்ன என்று நீங்கள் கலங்கிப் போய் கேட்பது நன்றாகவே காதில் விழுகிறது. இங்குதான் ஒரு சின்ன "அரித்மேட்டிக்" காத்திருக்கிறது. கணக்கைப் பார்க்கலாமா...!

    ஜெயலலிதா பார்முலா

    ஜெயலலிதா பார்முலா

    அதாவது விடுதலைச் சிறுத்தைகள், மதிமுகவுக்கு வழங்கும் இடங்களில் அவர்களை உதயசூரியன் சின்னத்தில் நிற்க வைக்க முடிவு செய்துள்ளதாம் திமுக தலைமை. தீர ஆலோசித்து எடுக்கப்பட்ட முடிவாம் இது.

    ஏற்றாக வேண்டும்

    ஏற்றாக வேண்டும்

    இதை விடுதலைச் சிறுத்தைகளும், மதிமுகவும் ஏற்பார்களா என்று தெரியவில்லை. கண்டிப்பாக திருமாவளவன் ஏற்பாரா என்பது சந்தேகம்தான். ஆனால் வைகோ ஏற்கக் கூடிய வாய்ப்புகள் உள்ளன. அவர் உதயசூரியனை மறுக்க வாய்ப்பில்லை.

    திமுகவுக்கு கவலை இல்லை

    திமுகவுக்கு கவலை இல்லை

    ஆனால் இதைப் பற்றி திமுக கவலைப்படவில்லையாம். ஏற்றாலும் சரி, ஏற்காவிட்டாலும் சரி இதுதான் ஆபர் என்று முடிவில் இருக்கிறதாம் திமுக. ஏற்பார்கள் என்ற நம்பிக்கையும் திமுகவுக்கு உள்ளதாம்.

    இடதுசாரிகள் முஸ்லீம் லீக்

    இடதுசாரிகள் முஸ்லீம் லீக்

    இவர்கள் தவிர இடதுசாரிகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகியோர் அவர்களது சின்னங்களில் போட்டியிடுவார்களாம். அவர்களுக்குரிய தொகுதிகளையும் கூட ஸ்டாலின் ஏற்கனவே டிக் அடித்து விட்டதாக சொல்கிறார்கள்.

    English summary
    Sources say that DMK may contest in 25 to 28 seats and has decided to field VCK and MDMK candidates in Rising Sun symbol.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X