தெய்வமே வந்துட்டீங்களா.. தொட்டபெட்டாவில் 4 கிமீ ஸ்தம்பித்த வாகனங்கள்.. கிட்ட போய் பார்த்தால்!
ஊட்டி: நீலகிரி மாவட்டம் உதகை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சுற்றுலா தலங்களில் வார விடுமுறையான நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். தொட்டபெட்டா செல்லும் சாலையில் ஏராளமான வாகனங்கள் சென்றதால் சுமார் 4 கி.மீ. தூரம் வாகனங்கள் அணிவகுத்து நின்றது.
சர்வதேச சுற்றுலா தலமான நீலகிரி மாவட்டத்திற்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். நேற்று வார விடுமுறை என்பதால் தமிழ்நாட்டின் பிற மாவட்டங்கள் மற்றும் கேரளா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தந்திருந்தார்கள்.

இதனிடையே பராமரிப்பு காரணமாக 2-வது முறையாக மூடப்பட்ட தொட்டபெட்டா மலைச்சிகரம் கடந்த சனிக்கிழமை முதல் மீண்டும் திறக்கப்பட்டது. இதையடுத்து நேற்று அங்கு சுற்றுலா பயணிகள் வருகை வழக்கத்தைவிட மிக அதிகமாக இருந்தது. அவர்கள் தொலைநோக்கி மூலம் ஊட்டி நகரம், கேத்தி பள்ளத்தாக்கு, கோவை, மேட்டுப்பாளையம் போன்ற இடங்களை கண்டு ரசித்தார்கள். அதோடு இயற்கை காட்சிகளை கண்டு களித்தனர். மேலும் இதமான கால நிலையை அனுபவித்தபடி, சுற்றுலா பயணிகள் செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தார்கள்.
மேகங்கள் தொட்டுச்செல்லும் தொட்டபெட்டா மலைச்சிகரத்திற்கு போன சுற்றுலா பயணிகள் அங்கிருந்து உடனே கிளம்ப மனம் இல்லாமல் உயரமான மலை மீது நின்று பள்ளத்தாக்குகளையும், நகர்புறங்களையும் கண்டு ரசித்தபடியே இருந்தனர் . தொட்டபெட்டா மலைச்சிகரத்தில் மேகமூட்டத்துடன் சாரல் மழை பெய்து கொண்டிருந்ததை மெய்மறந்த சுற்றுலா பயணிகளால் மிகப்பெரிய அளவில் வாகன நெரிசல் ஏற்பட்டது.

சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருந்ததால், தொட்டபெட்டா மலைச்சிகரம் செல்லும் சாலையில் 4 கி.மீ. தூரத்துக்கு சுற்றுலா வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் அந்த பகுதி முழுவதுமே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதை பற்றி சற்றும் கவலைப்படாத சுற்றுலா பயணிகள் காத்திருந்து காத்திருந்து தொட்டபெட்டா மலைச்சிகரத்திற்கு வருகை தந்தனர்.
தொட்டபெட்டா மட்டுமின்றி, கொடநாடு, குன்னூர், ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ஊட்டி படகு இல்லம் , பைன்பாரஸ்ட் , பைகரா, முதுமலை உள்பட பல்வறு சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் வருகை நேற்று மிக அதிகமாக அதிக அளவில் இருந்தது. அங்கு செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.












Click it and Unblock the Notifications