கன்னியாகுமரியில் ஒரு நாள் தங்க ரூ.100 மட்டும் தான்.. மத்திய அரசின் சூப்பர் விடுதி.. இத்தனை வசதிகளா?
கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் ஒரு நபருக்கு ஒரு நாள் தங்க Rs.100 மட்டும் தான்.. மத்திய அரசின் சூப்பர் விடுதி பற்றி உங்களுக்கு தெரியுமா? கன்னியாகுமரியில் பார்க்க வேண்டிய சுற்றுலா தளங்கள் குறித்தும் இந்த செய்தியில் பாருங்கள்.
மத்திய அரசால் தூய்மையாக பராமரிக்கப்பட்டு வரும் விவேகானந்தா கேந்திரா தான் அது. இங்கு தங்குபவர்களுக்கு சுற்றுலா தளங்களுக்கு செல்ல இலவச பஸ் வசதி, வளாகத்திலேயே சைவ உணவு விடுதி, ஹாட் வாட்டர், மருந்தகம், வங்கி போன்ற வசதிகள் உண்டு.

முக்கியமாக சன் ரைஸ் பார்க்கும் வசதியுடன் கடற்கரையை ஒட்டியே அமைந்துள்ளது இந்த விடுதி. இங்கு ஏசி காட்டேஜ், ஏசி ரூம்கள் உண்டு. 5பேர் கொண்ட குடும்பம் ஏசியில் தங்க ஒரு நாளைக்கு இங்கு 1600 ரூபாய் தான். 3 பேருக்கு NON AC 300 ரூபாய் மட்டுமே. இங்கு தங்க ஆன்லைன் ரிசர்வேஷன் மட்டுமே உண்டு. நேரில் சென்றால் புக்கிங் செய்ய மாட்டார்கள்.
நீங்கள் செல்வதற்கு 3 நாட்களில் முதல் நாளிலிருந்து 60 நாட்களுக்கு முன்பு புக் செய்ய வேண்டும். கன்னியாகுமரிக்கு குடும்பத்தினருடன் சென்று தூய்மையான அதே சமயம் விலை குறைவான தங்கும் வசதி இதுதான்.
புக்கிங் செய்ய இணையதள முகவரி: https://yatra.vrmvk.org
Email : [email protected]
Phone: 04652246250
இந்தியாவின் தொடக்கம் என்றும், இந்தியாவின் கடைசி பகுதி என்றும் கன்னியாகுமரியை அழைக்கலாம். கடல், மழை, அருவி என மூன்றுமே உள்ள அற்புமான பகுதி தான் கன்னியாகுமரி மாவட்டம். மலையாளம் கலந்த தமிழ், கலாச்சாரம், உணவு முறை என வித்தியாசமான மாவட்டம்க கன்னியாகுமரி. மற்ற மாவட்டங்கள் எல்லாம் தலைநகரின் பெயரிலேயே அமைந்திருக்க இங்கு மட்டும் நாகர்கோவில் பெயரில் இல்லாமல் கன்னியாகுமரியின் பெயரில் மாவட்டம் அமைந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏராளமான சுற்றுலா தளங்கள் உள்ளன. அவற்றில் சிலவற்றை பார்ப்போம்.
சுற்றுலா தளம் ஒன்று: சூர்யோதம் கன்னியாகுமரியில் ஏக பிரபலம். சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் கடலுக்குள் அமைந்திருக்கும் விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலைக்கு சுற்றுலா பயணிகள் சென்று வரும் படகு போக்குவரத்து வசதிதான் தனிச்சிறப்பு. இதற்காக சாதாரண கட்டணம், சிறப்பு நுழைவு கட்டணம் என இரு வகை கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. சாதாரண கட்டணம் ரூ.75 ஆகவும், சிறப்பு நுழைவு கட்டணம் ரூ.300 ஆகவும் வசூலிக்கப்படுகிறது.
சுற்றுலா தளம் இரண்டு: கன்னியாகுமரியிலிருந்து 32 கி.மீ., தொலைவிலும் அமைந்துள்ள லெமூர் பீச் மிகவும் பிரபலம்.. இங்குள்ள நீலக்கடலும் நீண்ட மணல் பரப்பைக் கொண்ட கடற்கரையும் பார்க்க இரண்டு கண்கள் போதாது. கடற்கரை மணல் பரப்பு மிக அழகாகவும் தூய்மையாகவும் காணப்படும்.
கன்னியாகுமரியில் ஒரு நபருக்கு ஒரு நாள் தங்க Rs.100 மட்டும் தான்...
— 𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁 (@FilmFoodFunFact) August 14, 2023
மத்திய அரசால் தூய்மையாக பராமரிக்கப்பட்டு வரும் விவேகானந்தா கேந்திரா தான் அது. இங்கு தங்குபவர்களுக்கு சுற்றுலா தளங்களுக்கு செல்ல இலவச பஸ் வசதி, வளாகத்திலேயே சைவ உணவு விடுதி, ஹாட் வாட்டர், மருந்தகம், வங்கி pic.twitter.com/NdGp8Jaqxx
சுற்றுலா தளம் மூன்று : நாகர்கோவிலில் இருந்து சுமார் 32 கி.மீ., தொலைவில் அடந்த வனப்பகுதியில் அமைந்துள்ள காளிகேசம் நதியும் ஒரு காளி கோவிலும் உள்ளூர் மக்களுக்கு மிகவும் பிடித்த பகுதி. இந்த ஆற்றில் குளித்து மகிழவும், இங்குள்ள குளுமையான காலநிலையை அனுபவிக்க பலரும் வருவார்கள். நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் இருந்து காளிகேசத்திற்கு நேரடி பேருந்து மூலம் செல்ல முடியும் என்றாலும் சொந்த வாகனத்தில் செல்வது சிறப்பானது என்று உள்ளூர்வாசிகள் கூறுகிறார்கள்.
சுற்றுலா தளம் நான்கு: கன்னியாகுமரியில் இருந்து அஞ்சுகிராமம் செல்லும் சாலையில் சுமார் 6 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது வட்டக்கோட்டை உள்ளூர் மக்களின் பிரதானமான ரிலாக்ஸ் செய்யும் இடம். இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். இந்தகோட்டையும் பூங்காவும் கடற்கரைக்கு வரும் மக்களுக்கு அற்புதமான அனுபவமாக இருக்கும்.












Click it and Unblock the Notifications