24 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு.. வெயிலும் கொளுத்த போகுது.. வானிலை மையம் அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் இன்று திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் லேசான மழை பெய்து வரும் நிலையில், வரும் 24 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் வெப்பநிலையை பொறுத்தவரை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்றும், சென்னையில் 34 -35 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகும் என்றும் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வெயில் சுட்டெரித்து வருகிறது. அவ்வப்போது ஒருசில இடங்களில் லேசான மழை பெய்தாலும், அதற்கெல்லாம் சேர்த்து வைத்து வெயில் கொளுத்தி எடுத்து வருகிறது. வெளியில் சென்றாலே வியர்த்து கொட்டி வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னையிலும் தற்போது வெயில் சுட்டெரித்து வருகிறது. நேற்று தமிழகத்தில் 4 இடங்களில் வெயில் சதமடித்தது.

Rain Weather

24 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு

மே மாத வெயில் போல, அனலை கக்கும் வெயிலால் மக்கள் தகித்து வருகிறார்கள். இதற்கிடையே தான் நேற்று தமிழகத்தில் தென் மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், விருதுநகர், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்தது. தென்காசி மாவட்டத்தில் நேற்று மாலை நேரத்தில் திடீரென மழை பெய்தது. இந்த நிலையில் வரும் 24 ஆம் தேதி வரை தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- தமிழகத்தில் இன்று முதல் வரும் 24 ஆம் தேதி வரை ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வெப்பநிலையை பொறுத்தவரை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயர வாய்ப்பு உள்ளது. தலைநகர் சென்னையை பொறுத்தவரை அதிகபட்ச வெப்பநிலை 34 -35 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஒரு வாரத்திற்கான மழை அப்டேட்

ஒரு வாரத்திற்கான வானிலை அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- "தென்னிந்திய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு சுழற்சி பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதனால் இன்று முதல் 22 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

23 ஆம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 24 ஆம் தேதி தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு

அதிகபட்ச வெப்பநிலை மாறுதலின் போக்கு: 18-03-2025 முதல் 22-03-2025 வரை: தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடானது 18-03-2025 முதல் 20-03-2025 வரை: தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் இயல்பை விட 2-3° செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.

சென்னையில் கிளைமேட் எப்படி?

* சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பின் படி, இன்றுவானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

* சென்னையில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
* மீனவர்களுக்கான எச்சரிக்கை: எச்சரிக்கை ஏதுமில்லை.

பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):

சாம்ராஜ் எஸ்டேட் (நீலகிரி) 5, சின்கோனா (கோயம்புத்தூர்), தாலுகா அலுவலகம் பந்தலூர் (நீலகிரி) தலா 4, வால்பாறை PTO (கோயம்புத்தூர்), ராஜபாளையம் (விருதுநகர்), தேவாலா (நீலகிரி), வூட் பிரையர் எஸ்டேட் (நீலகிரி), கோத்தகிரி (நீலகிரி), உபாசி TRF AWS (நீலகிரி), வெம்பக்கோட்டை (விருதுநகர்) தலா 3, விண்ட் வொர்த் எஸ்டேட் (நீலகிரி), கேத்தி (நீலகிரி), செருமுள்ளி (நீலகிரி), பொள்ளாச்சி (கோயம்புத்தூர்), கிளன்மார்கன் (நீலகிரி), குந்தா பாலம் (நீலகிரி), சிவகாசி (விருதுநகர்), கின்னக்கோரை (நீலகிரி) தலா 2,

வெப்பநிலை நிலவரம்:

* அதிகபட்ச வெப்பநிலை :- கரூர் பரமத்தி: 38.5° செல்சியஸ்
குறைந்தபட்ச வெப்பநிலை (சமவெளிப்பகுதிகளில்):- கரூர் பரமத்தி: 21.0° செல்சியஸ்
* கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 1-3° செல்சியஸ் உயர்ந்துள்ளது. ஏனைய தமிழக பகுதிகளிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் அதிகபட்ச வெப்பநிலையில் பொதுவாக பெரிய மாற்றம் ஏதுமில்லை.

* தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை பெரும்பாலான இடங்களில் பொதுவாக இயல்பை ஒட்டி இருந்தது. அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் இயல்பை விட 2-3 ° செல்சியஸ் அதிகமாக இருந்தது.
* தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 35 39° செல்சியஸ் மற்றும் தமிழக கடலோரப்பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 32 35° செல்சியஸ் பதிவாகியுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+