மக்களே அலர்ட்! சென்னையில் 2 நாட்களுக்கு டமால் டுமீல் தான்.. இன்று 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
டெல்லி: தமிழகத்தில் வரும் 5ம் தேதி வரை 6 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேபோல் சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில வாரங்களவே பரவலாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னையில் பகல் நேரத்தில் வெப்பத்தின் தாக்கம் சற்று அதிகமாக இருப்பதும் மாலை நேரத்தில் திடீரென மழை பெய்தும் வருகிறது. இதேபோல் தென் மாவட்டங்களிலும் அவ்வப்போது லேசான மழை பெய்து வருகிறது. குறிப்பாக இன்று காலை முதல் தென்காசி மாவட்டத்தில் லேசான மழை பெய்தது.

இந்த நிலையில், தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 6 நாட்களுக்கு அதாவது நாளை முதல் வரும் 5 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இன்று கனமழை : இதனால் இன்று (29.09.2023) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இதேபோல் நாளை (30.09.2023) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை மறுநாள் முதல் 5ம் தேதி வரை (01.10.2023 முதல் 05.10.2023 வரை) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையில் எப்படி?: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. அதிகப்பட்ச வெப்பநிலை 35- 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25- 26 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்க வாய்ப்பு இருக்கிறது.
தமிழக கடலோரப்பகுதிகள்: 29.09.2023 மற்றும் 30.09.2023: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 02.10.2023: தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
வங்கக்கடல் பகுதிகள்: 29.09.2023: தெற்கு வங்கக்கடல் பகுதிகள், மத்தியகிழக்கு, வடகிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
30.09.2023: தெற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய-வடக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 01.10.2023: வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
இலங்கை கடலோரப்பகுதிகள், தெற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகள் மற்றும் வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 02.10.2023: வடமேற்கு வங்கக்கடல், இலங்கை கடலோரப்பகுதிகள், தெற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
03.10.2023: வடமேற்கு வங்கக்கடல் பகுதிகள், இலங்கை கடலோரப்பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு-மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
அரபிக்கடல் பகுதிகள்: 29.09.2023 மற்றும் 30.09.2023: கர்நாடக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் லட்சதீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்.
மழை அளவு: கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): கட்டப்பாக்கம் KVK ARG (காஞ்சிபுரம்), சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்) தலா 5, வால்பாறை PTO (கோயம்புத்தூர்), இந்துஸ்தான் பல்கலைக்கழகம் ARG (செங்கல்பட்டு), சோழிங்கநல்லூர் (சென்னை), கொடிவேரி (ஈரோடு), விஐடி சென்னை AWS (செங்கல்பட்டு) தலா 4 செமீ.
திருச்சி விமான நிலையம், சோலையார் (கோயம்புத்தூர்), குன்றத்தூர் (காஞ்சிபுரம்), சத்யபாமா பல்கலைக்கழகம் ARG (செங்கல்பட்டு), பென்னாகரம் (தர்மபுரி), பந்தலூர் தாலுகா அலுவலகம் (நீலகிரி), சித்தார் (கன்னியாகுமரி), சின்கோனா (கோயம்புத்தூர்), தஞ்சாவூர் PTO, கிருஷ்ணகிரி, ஸ்ரீபெரும்புதூர் (காஞ்சிபுரம்), ராயக்கோட்டை (கிருஷ்ணகிரி), தேக்கடி (தேனி), விராலிமலை (புதுக்கோட்டை), நாகப்பட்டினம், பெரியார் (தேனி), தஞ்சை பாபநாசம் (தஞ்சாவூர்), வால்பாறை PAP (கோயம்புத்தூர்), பெருங்குடி (சென்னை), NIOT பள்ளிக்கரணை ARG (சென்னை) தலா 3 செ.மீ.
வொர்த் எஸ்டேட் செரிமுள்ளி (நீலகிரி), தேவாலா (நீலகிரி). மாம்பழத்துறையாறு (கன்னியாகுமரி), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), தஞ்சாவூர், ஒகேனக்கல் (தர்மபுரி), பாலமோர் (கன்னியாகுமரி), பள்ளிப்பட்டு (திருவள்ளூர்), வல்லம் (தஞ்சாவூர்), திற்பரப்பு (கன்னியாகுமரி), திருத்தணி PTO (திருவள்ளூர்), அணைகெடங்கு (கன்னியாகுமரி), அய்யம்பேட்டை (தஞ்சாவூர்), சோழிங்கநல்லூர் (சென்னை), குருந்தன்கோடு (கன்னியாகுமரி), தக்கலை (கன்னியாகுமரி), நலுமுக்கு (திருநெல்வேலி), கந்தர்வகோட்டை (புதுக்கோட்டை),

வடபுதுப்பட்டு (திருப்பத்தூர்), அம்மாபேட்டை (ஈரோடு), பணப்பாக்கம் (ராணிப்பேட்டை), காவேரிப்பாக்கம் (ராணிப்பேட்டை), செம்பரம்பாக்கம் ARG (காஞ்சிபுரம்), சூரலக்கோடு (கன்னியாகுமரி), பேச்சிப்பாறை (கன்னியாகுமரி), புள்ளம்பாடி (திருச்சி), மயிலாடி (கன்னியாகுமரி). கன்னியாகுமரி, செம்பரபாக்கம் (திருவள்ளூர்), கொளச்சல், (கன்னியாகுமரி), குழித்துறை (கன்னியாகுமரி), மேற்கு தாம்பரம் ARG (செங்கல்பட்டு) தலா 2 செ.மீ.
கோழிப்போர்விளை (கன்னியாகுமரி), சென்னை விமான நிலையம், ஆலந்தூர் (சென்னை), ஊத்து (திருநெல்வேலி), புழல் ARG (திருவள்ளூர்), சிறுவாணி அடிவாரம் (கோயம்புத்தூர்), பவானிசாகர் (ஈரோடு), அம்முண்டி (வேலூர்), பூதப்பாண்டி (கன்னியாகுமரி), திருத்தணி (திருவள்ளூர்), முள்ளங்கினாவிளை (கன்னியாகுமரி), திருப்பதிசாரம் AWS (கன்னியாகுமரி), இரணியல் (கன்னியாகுமரி), திருச்சி டவுன் (திருச்சி), துவாக்குடி Imti (திருச்சி), காட்பாடி (வேலூர்), களியல் (கன்னியாகுமரி), கொட்டாரம் (கன்னியாகுமரி), குண்டர் அணை (தென்காசி), வாலாஜா (ராணிப்பேட்டை), பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி), தென்காசி,
அழகரை எஸ்டேட் (நீலகிரி), திருச்சிராப்பள்ளி சந்திப்பு, காஞ்சிபுரம், நந்தியாறு (திருச்சி), சிவலோகம் (கன்னியாகுமரி), அடையாமடை (கன்னியாகுமரி), காக்காச்சி (திருநெல்வேலி), விரிஞ்சிபுரம் AWS (வேலூர்), சத்தியமங்கலம் (ஈரோடு), குன்னூர் (நீலகிரி), நீடாமங்கலம் (திருவாரூர்), குண்டேரிப்பள்ளம் (ஈரோடு), கன்னிமார் (கன்னியாகுமரி), முக்கடல் அணை (கன்னியாகுமரி), முதுகுளத்தூர் (ராமநாதபுரம்), திருவையாறு (தஞ்சாவூர்), புத்தன் அணை (கன்னியாகுமரி), ஆய்க்குடி (தென்காசி), குருங்குளம் (தஞ்சாவூர்), பெரிய அணைக்கட்டு (தஞ்சாவூர்), வம்பன் Kvk Aws (புதுக்கோட்டை), நாகர்கோவில் (கன்னியாகுமரி), பொன்மலை (திருச்சி), ஆவடி (திருவள்ளூர்), திருப்பத்தூர், ஆனைமலை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), எடப்பாடி (சேலம்), தாம்பரம் (செங்கல்பட்டு), பர்லியார் (நீலகிரி) தலா 1 செ.மீ மழை பெய்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications