சென்னை உட்பட தமிழ்நாட்டின் 6 மாவட்டங்களில் இன்று நொறுக்கப்போகும் கனமழை.. வானிலை மையம் அலர்ட்!
சென்னை: தமிழ்நாட்டில் இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம் மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே பகுதிகளில் நிலவியது. இது மேற்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, போர்ட் ப்ளேயரிலிருந்து (அந்தமான் தீவுகள்) மேற்கு-தென்மேற்கே சுமார் 440 கிலோ மீட்டர் தொலைவிலும், விசாகபட்டினத்திலிருந்து தென்கிழக்கே 970 கிலோ மீட்டர் தொலைவிலும்,சென்னையிலிருந்து கிழக்கு-தென்கிழக்கே 970 கிலோ மீட்டர் தொலைவிலும், காக்கிநாடாவிலிருந்து தென்கிழக்கே 990 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.

வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழ்நாட்டில் இன்று தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என கணித்துள்ளது. அதன்படி சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களிலும், ராணிப்பேட்டை, விழுப்புரம் மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும், சென்னை, திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் நாளை மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் நாளை கனமழை பெய்யக்கூடும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
28-10-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
29-10-2025 முதல் 31-10-2025 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மத்திய மேற்கு மற்றும் வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகம் வரை சூறைக்காற்று வீசக்கூடும் என்பதாலும், தென்மேற்கு, தென்கிழக்கு மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 80 கிலோ மீட்டர் வேகம் வரை சூறைக்காற்று வீசக்கூடும் என்பதாலும் மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.
சென்னையை பொறுத்தவரை இன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான/ கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 29-30° செல்சியஸை ஒட்டியும். குறைந்தபட்ச வெப்பநிலை 24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.












Click it and Unblock the Notifications