வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்! அடுத்த 2 மணி நேரம் உஷார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 2 மணி நேரத்திற்கு 9 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் மஞ்சள் அலர்ட் விடுத்திருக்கிறது.

அதாவது வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, நாமக்கல், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது.

Tamil Nadu chennai rain

மஞ்சள், ஆரஞ்சு அலர்ட் விளக்கம்: 64.5 மி.மீ முதல் 115. 5 மி.மீ வரை மழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்டால், மஞ்சள் அலர்ட் விடுக்கப்படும். இதுவே, ஒரு நாளில் 115.6 முதல் 204.4 மிமீ வரையிலான மழைப்பொழிவுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்படும். 24 மணி நேரத்தில் 204.5 மிமீக்கு அதிகமாக மழை பெய்யும் போது ரெட் அலர்ட் விடுக்கப்படுகிறது.

முன்னதாக இன்று மதியம் விடுக்கப்பட்ட வானிலை அறிவிப்பில், கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை நிலவரம், வடதமிழக கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது.

பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்)

மண்டலம் 14 மேடவாக்கம் (சென்னை) 16, மண்டலம் 11 வளசரவாக்கம் -1 (சென்னை), மண்டலம் 10 சாலிகிராமம் (சென்னை) தலா 11, மண்டலம் 11நெற்குன்றம் (சென்னை), கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர்) தலா 10.

மண்டலம் 02 மணலி (சென்னை), பொன்னேரி (திருவள்ளூர்) தலா 9, மண்டலம் 05 பாரிஸ் (சென்னை), மண்டலம் 02 மணலி -2 (சென்னை), மண்டலம் பள்ளிக்கரணை-1 (சென்னை) தலா 8.

மண்டலம் 13 ராஜா அண்ணாமலைநகர் (சென்னை), அண்ணா பல்கலைக்கழகம் ARG (சென்னை), மண்டலம் 11 வளசரவாக்கம் (சென்னை), அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை), மண்டலம் 09 நுங்கம்பாக்கம் (சென்னை), மண்டலம் பள்ளிக்கரணை-1 (சென்னை) தலா 7.

மண்டலம் 14 மேடவாக்கம்-2 (சென்னை), செங்குன்றம் (திருவள்ளூர்), சோழவரம் (திருவள்ளூர்), சென்னை (N) AWS (சென்னை), மண்டலம் 05 பேசின்ப்ரிட்ஜ் (சென்னை), மண்டலம் 14 நாராயனபுரம் ஏரி (சென்னை) தலா 6.

YMCA நந்தனம் ARG (சென்னை), மண்டலம் 02 மணலி-3 (சென்னை), மண்டலம் 14 மடிப்பாக்கம் (சென்னை), மண்டலம் 01 கத்திவாக்கம் (சென்னை), சென்னை நுங்கம்பாக்கம் (சென்னை) மண்டலம் அம்மிஞ்சிக்கரை (சென்னை) மண்டலம் 13 அடையாறு (சென்னை) தலா 5.

மண்டலம் 03 புழல் (சென்னை), கீழ்கோத்தகிரி எஸ்டேட் (நீலகிரி), மண்டலம் 10 வடபழநி (சென்னை), அயனாவரம் தாலுகா அலுவலகம் (சென்னை), பெரம்பூர் (சென்னை), டிஜிபி அலுவலகம் (சென்னை), VIT சென்னை AWS (செங்கல்பட்டு) தலா 4.

எம்ஜிஆர் நகர் (சென்னை), மண்டலம் 04 தண்டையார்பேட்டை (சென்னை), மண்டலம் 05 சென்னை சென்ட்ரல் (சென்னை), ஸ்ரீவில்லிபுத்தூர் (விருதுநகர்), புழல் ARG (திருவள்ளூர்), ஆலந்தூர் (சென்னை), சென்னை விமானநிலையம் (சென்னை), மண்டலம் 01 திருவொற்றியூர் (சென்னை), மண்டலம் 11 மதுரவாயல் (சென்னை), சென்னை ஆட்சியர் அலுவலகம் (சென்னை), எண்ணூர் AWS (திருவள்ளூர்), தாம்பரம் (செங்கல்பட்டு), தரமணி ARG (சென்னை), தென்பரநாடு (திருச்சிராப்பள்ளி) தலா 3.

மண்டலம் 03 மாதவரம் (சென்னை), திருக்காட்டுப்பள்ளி (தஞ்சாவூர்), மண்டலம் 08 அண்ணாநகர் மேற்கு (சென்னை), மண்டலம் 13 வேளச்சேரி (சென்னை), CD மருத்துவமனை தண்டையார்பேட்டை (சென்னை), துவாக்குடி IMTI (திருச்சிராப்பள்ளி), மீனம்பாக்கம் AWS (சென்னை), கல்லிக்குடி (மதுரை), கல்லணை (தஞ்சாவூர்), வெம்பக்கோட்டை (விருதுநகர்), மடத்துக்குளம் (திருப்பூர்), கொரட்டூர் (திருவள்ளூர்), மணல்மேடு (மயிலாடுதுறை), பெரம்பலூர் AWS (பெரம்பலூர்) தலா 2.

எமரால்டு (நீலகிரி), வத்திராயிருப்பு (விருதுநகர்), அஞ்சட்டி (கிருஷ்ணகிரி), மணல்மேடு ARG (மயிலாடுதுறை), செம்பரம்பாக்கம் ARG (திருவள்ளூர்), தேவாலா (நீலகிரி), செம்பரம்பாக்கம்-REV (திருவள்ளூர்), பெரம்பலூர் (பெரம்பலூர்), வால்பாறை PTO (கோயம்புத்தூர்), குன்றத்தூர் (காஞ்சிபுரம்), மகாபலிபுரம் AWS (செங்கல்பட்டு), மண்டலம் 06 கொளத்தூர் (சென்னை), கீரனூர் (புதுக்கோட்டை), சிவகாசி (விருதுநகர்), அவலாஞ்சி (நீலகிரி), சிங்கம்புணரி (சிவகங்கை), வில்லிவாக்கம் ARG (திருவள்ளூர்), குடிமியான்மலை (புதுக்கோட்டை), பூந்தமல்லி (திருவள்ளூர்), கொப்பம்பட்டி (திருச்சிராப்பள்ளி), வூட் பிரையர் எஸ்டேட் (நீலகிரி), கொளப்பாக்கம் ARG (செங்கல்பட்டு), பூந்தமல்லி ARG (திருவள்ளூர்), செருமுள்ளி (நீலகிரி), மண்டலம் 07 கொரட்டூர் (சென்னை) தலா 1.

வெப்பநிலை நிலவரம்

அதிகபட்ச வெப்பநிலையை பொறுத்த வரை மதுரை விமான நிலையத்தில் 38.8° செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை (சமவெளிப்பகுதிகளில்) கரூர் பரமத்தியில் 21.0° செல்சியஸ் வெயில் பதிவாகியிருக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் குறைந்துள்ளது. ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பொதுவாக பெரிய மாற்றம் ஏதுமில்லை.

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக இயல்பை ஒட்டியும் - குறைவாகவும் இருந்தது. ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருந்தது.

வடதமிழக உள்மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 33-38° செல்சியஸ், தென்தமிழக உள்மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 37-39° செல்சியஸ், தமிழக கடலோரப்பகுதிகள் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 32-35° செல்சியஸ், மலைப் பகுதிகளில் 23-29° செல்சியஸ் பதிவாகியுள்ளது.

அடுத்த 7 தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு:

தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. எனவே இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

19-04-2025 முதல் 23-04-2025 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:

அதிகபட்ச வெப்பநிலை மாறுதலின் போக்கை பொறுத்த வரை, 17-04-2025 முதல் 19-04-2025 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2-3° செல்சியஸ் வரை உயரக்கூடும். 20-04-2025 மற்றும் 21-04-2025: தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலையில் பொதுவாக பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு.

இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவு:

17-04-2025 மற்றும் 18-04-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். 19-04-2025 முதல் 21-04-2025 வரை: தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான முன்னறிவிப்பு:

இன்று (17-04-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

நாளை (18-04-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

தமிழக கடலோரப்பகுதிகள், வங்கக்கடல் பகுதிகள் & அரபிக்கடல் பகுதிகளில் 17-04-2025 முதல் 21-04-2025 வரை எச்சரிக்கை ஏதுமில்லை" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+