சென்னை, திருவள்ளூருக்கு அலர்ட்.. மழைக்கு வாய்ப்பு! மக்களே உஷார்
சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இந்நிலையில் இன்று சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தமிழ்நாட்டில் இன்றைய தேதி வரை பருவமழை இயல்பை விட 26% அளவுக்கு மழை அதிமாக பெய்திருக்கிறது. இயல்பான நிலையில் 185.5 மி.மீ. மழை பொழியும் நிலையில் இன்று வரை 233.5 மிமீ மழை பொழிந்துள்ளது. சென்னையில் வடகிழக்கு பருவமழை இன்று வரை இயல்பைவிட 18% கூடுதலாக பெய்துள்ளது. இயல்பான நிலையில் 300.7 மி.மீ. மழை பொழியும் நிலையில் இன்று வரை 354.7 மி.மீ. மழை பொழிந்துள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.
இந்நிலையில் இன்று சென்னை, திருவள்ளூரில் மழைக்கு வாய்ப்பு என தெரிவித்திருக்கிறது. முன்னதாக சென்னை வானிலை மையம் விடுத்துள்ள அறிக்கையில், "கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்றும் நாளையும் (நவ.2-3) தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நவ.4ம் தேதி வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நவ.5 மற்றும் 6ம் தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நவ.7ம் தேதி வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நவ.8ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:
இன்றும் நாளையும் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-4* செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்

இன்று (02-11-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35 செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27" செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை (03-11-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications