சென்னையில் நிலைமையே வேற.. நாளை காலை வரை கவனமாக இருக்கனும்! வெதர்மேன் கொடுத்த அப்டேட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்திருக்கிறது. இந்நிலையில் சென்னையில் நாளை காலை முதல் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியிருக்கிறார்.

இது குறித்து அவர் தனது x பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, "இன்று முதல் நாளை வரை, அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, இயல்புக்கு மாறாக வங்கக்கடல் நோக்கி இழுக்கப்படும். இதனால் நாம் மழைப்பொழிவின் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறோம்.

Chennai

'அர்னாப்' புயல் வலுவடைந்து வருவதால், அரபிக்கடலில் உள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி, வட தமிழகக் கடற்கரைக்கு அப்பால், வங்காள விரிகுடா திசையை நோக்கி நாளைக்குள் நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக கடலூர் தொடங்கி சென்னை வரை.. கிழக்கு திசையிலிருந்து காற்று வீசும். அதே சமயம், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மற்றும் தேனி போன்ற தென் மாவட்டங்களிலும் மேற்கு திசையிலிருந்து காற்று வீசும்.

அதிக மழை வாய்ப்புள்ள பகுதிகள்

விழுப்புரம் முதல் நீலகிரி வரையிலான மத்திய உட்புற மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக கள்ளக்குறிச்சி, தர்மபுரி, சேலம், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, நாமக்கல், திண்டுக்கல், கரூர், திருச்சி, மதுரை, புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும்.

டெல்டா மண்டலம் மற்றும் அதனை ஒட்டியுள்ள திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கும்பகோணம், அரியலூர், பெரம்பலூர், கடலூர், புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை ஆகிய பகுதிகளிலும் பலத்த மழை பெய்யும்.

தென் தமிழகம்

தென் தமிழகத்தைப் பொறுத்தவரை, கன்னியாகுமரி, நெல்லை, தேனி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில், மேற்குத் திசையிலிருந்து வீசும் காற்றினால் கூடுதல் மழைப்பொழிவு கிடைக்க வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் (KTCC)

வட தமிழகத்தில், சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் (KTCC), ராணிப்பேட்டை மற்றும் வேலூர் ஆகிய இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு, இன்று முதல் நாளை காலை வரை மழை கிடைப்பதற்கான கடைசி வாய்ப்பு இதுதான்.

கணினி வழி வானிலை மாதிரிகள், சென்னையில் பெரிய அளவிலான மழையைக் காட்டவில்லை என்றாலும், கடந்த காலங்களில் இத்தகைய காற்றுச் சூழல் சென்னையில் மழையைக் கொண்டு வந்துள்ளது.

நாளை காலைக்குள் சென்னையில் எவ்வளவு மழை பதிவாகிறது என்று பார்ப்போம். இரவு முதல் காலை வரையிலான நேரங்களில் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

கொடைக்கானல் மற்றும் குன்னூர் பகுதிகளில் இன்று கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். கிழக்கு திசையிலிருந்து வீசும் காற்று காரணமாக கனமழை பொழியக்கூடும்" என பதிவிட்டிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+