அடுத்த 3 மணி நேரம் விடாது! சென்னை டூ குமரி வரை.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட்
சென்னை: தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு, டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் மழை விடாமல் வெளுத்து வாங்கும் என சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. தஞ்சை, திருவாரூர், நாகை, நெல்லை, தென்காசி, குமரி உள்பட 22 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை வெளுத்து வாங்கும் என சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. சென்னையிலும் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் கூறியிருந்தது.
தமிழகத்தில் இன்று பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்தது. குறிப்பாக தலைநகர் சென்னையில் இன்று காலை 11 மணியளவில் நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், எழும்பூர், சேத்துப்பட்டு, சூளைமேடு பகுதிகளில் மழை பெய்தது. பின்னர் மாலை 4 மணியளவில் அம்பத்தூர், ஆவடி உள்ளிட்ட பகுதிகளில் லேசான மழை பெய்தது.

22 மாவட்டங்களுக்கு அலர்ட்
தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. டெல்டா மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள மாவட்டங்களில் இன்று ஒரு சில இடங்களில் லேசானது முதல் கனமழை பெய்தது. இந்த நிலையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை முதல் குமரி வரை 22 மாவட்டங்களில் மழை விடாமல் வெளுத்து வாங்கும் என்று சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. வானிலை அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
இரவு 7 மணி வரை
"தமிழகத்தில் இன்று இரவு 7 மணி வரை டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை வெளுத்து வாங்கும். அதாவது நெல்லை, தென்காசி, குமரி, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 7 மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இதேபோன்று தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், தேனி, கோவை, நீலகிரி, புதுக்கோட்டை, சிவகங்கை, சென்னை, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை ஆகிய 15 மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.
கனமழை பெய்யும் மாவட்டங்கள்
முன்னதாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக கோவை மற்றும் நெல்லை மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, தென்காசி, குமரி, மதுரை, திண்டுக்கல், திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தர்மபுரி, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
18 ஆம் தேதி வரை கனமழை தொடரும்
18-10-2025: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், மதுரை, இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையில் இன்று மழை கொட்டும்
* சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
* சென்னையில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மழை அளவு செமீ:
* மேட்டூர் (சேலம்), மணப்பாறை ARG (திருச்சிராப்பள்ளி, ஆனைப்பாளையம் (கரூர்) தலா 8,
* குறிஞ்சிப்பாடி (கடலூர்), பண்ருட்டி (கடலூர்), திருச்சுழி (விருதுநகர்) திருமயம் (புதுக்கோட்டை), அரியலூர் PTO (அரியலூர்), தாலுகா அலுவலகம் அரியலூர் (அரியார்). அன்னவாசல் (புதுக்கோட்டை), ராசிபுரம் (நாமக்கல்), ஆலங்குடி (புதுக்கோட்டை) தலா 7.
* கோவில்பட்டி (திருச்சிராப்பள்ளி), இதாப்பூர் (புதுக்கோட்டை), சென்னிமலை (ஈரோடு). அரியலூர் AWs (அரியலூர்) திண்டுக்கல் (இண்டுக்கல்), அரிமளம் (புதுக்கோட்டை), குடிமியான்மலை (புதுக்கோட்டை). பொன்னையார் அணை (திருச்சிராப்பள்ளி), அரண்மனைப்புதூர் (தேனி), கொடவாசல் தலா 6.
* (திருவாரூர்), SRC குடிதாங்கி (சுடதூர்), தொழுதூர் (கடலூர்), திருவாரூர் AWS (திருவாரூர்). மேட்டுப்பாளையம் (கோயம்புத்தூர்), பெருந்துறை (ஈரோடு), விருதுநகர் (விருதுநகர்), மிமிசல் (புதுக்கோட்டை), சந்தியூர் KVK AWS (சேலம்), நெய்வாசல் தென்பாதி (தஞ்சாவூர்), ஊத்துக்குளி (திருப்பூர்),அழகரை எஸ்டேட் (நீலகிரி), பெலாந்துறை (கடலூர்) தலா 5 செமீ மழை பெய்துள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை
12-10-2025: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பொதுவாக பெரிய மாற்றம் ஏதுமில்லை. 13-10-2025 முதல் 16-10-2025 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2∙3* செல்சியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications