டிட்வா புயல் வந்துவிட்டது.. கரையை தொட்டது தாழ்வு மண்டலம்.. தமிழ்நாடு வெதர்மேன் முக்கிய வார்னிங்!
சென்னை: கரையை கடந்து வருகிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்து உள்ளார். சில மணிநேரங்களில் முற்றிலுமாக கரையைக் கடந்துவிடும் என்று தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.
சென்னையைச் சுற்றியுள்ள மாவட்டங்களைக் கடந்து செல்கிறது, ஒட்டுமொத்த தமிழ்நாட்டிலும் இன்று மழை பெய்ய வாய்ப்பு என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் தெரிவித்துள்ளார்.
சென்னைக்கு 100 கி.மீ தூரத்தில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம். மணிக்கு 3 கி.மீ வேகத்தில் தெற்கு தென்மேற்கு திசையில் மெதுவாக நகர்கிறது. அடுத்த 6 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுக்குறையக்கூடும் என்று இன்னொரு பக்கம் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

டிட்வா புயல்
டிட்வா புயல், காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவிழந்து, தற்போது பகுதி அளவில் நிலப்பகுதிக்குள் நகர்ந்துள்ளது. இதன் விளைவாக, சென்னை, குறிப்பாக காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு பகுதியில் இடியுடன் கூடிய கனமழை கொட்டித் தீர்க்கிறது. அதிகாலை 2.30 மணி வரை காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு பகுதியில் சிறப்பான மழை பதிவானது. நீண்ட நாட்களாக மழையை எதிர்பார்த்த தென் சென்னைக்கும் தற்போது மழை கிடைக்கிறது.
காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இன்னும் சில மணிநேரத்தில் முழுமையாக உள்மாவட்டங்களுக்குள் நுழையும். இதன் நகர்வால் திருவண்ணாமலை, கடலூர், புதுச்சேரி, விழுப்புரம், சேலம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் மழை பெறும். கோவை, மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மத்திய, தென் மாவட்டங்களிலும் மழை மேகங்கள் பரவி வருகின்றன.
கடந்த இரு நாட்களாக மழை வாய்ப்பை இழந்த செங்கல்பட்டு, தாம்பரம், கிழக்கு கடற்கரைச் சாலை (ECR), பழைய மகாபலிபுரம் சாலை (OMR) பகுதிகளிலும் தற்போது தாராளமாக மழை பெய்கிறது. டிட்வா காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தால் இன்று தமிழ்நாடு முழுவதும் நல்ல மழைப்பொழிவைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது., என்று தமிழ்நாடு வெதர்மேன் தனது எச்சரிக்கையில் கூறியுள்ளார்.
சென்னை கனமழை
இதனால் இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்யும். டிட்வா புயல் ஏற்கனவே காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவிழந்த நிலையில் இன்று இரவு நெல்லூர் அருகே நிலப்பகுதியைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறுகிறது.
நேற்று இரவு சென்னையில், அரும்பாக்கம், கோயம்பேடு, காசிமேடு , ராயப்பேட்டை, கிண்டி, வடபழனி ,திருவொற்றியூர் , எண்ணூர், தேனாம்பேட்டை, அண்ணா சாலை, மெரினா கடற்கரை, சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், ஆகிய பகுதிகளில் இரவு மழை பெய்தது. அதிகாலையில் 1-2 மணி நேரம் விடாமல் மழை பெய்தது. ஆனாலும் அங்கு தண்ணீர் வேகமாக வடிந்துள்ளது.
இப்போது காலை 9 மணியில் இருந்து மீண்டும் விடாமல் மழை பெய்து வருகிறது. இன்று தமிழகத்தின் பெரும்பாலான இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இராமநாதபுரம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், கடலூர் மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழையும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விழுப்புரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை மாவட்டங்களில் சில இடங்களிலும் கனமழை பெய்து வருகிறது.
-
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட்












Click it and Unblock the Notifications