வாட்டி எடுக்கும் வெப்பநிலை.. டெல்லி, குஜராத்துக்கு வெயிலுக்கான மஞ்சள்+ரெட் அலர்ட் விடுப்பு
டெல்லி: வட இந்திய மாநிலங்களில் கோடை வெயில் கொளுத்த தொடங்கியிருக்கிறது. இந்நிலையில் இன்று டெல்லி மற்றும் குஜராத்துக்கு கடும் வெயிலுக்கான மஞ்சள் மற்றும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது.
டெல்லி, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் ஒடிஷா என 5 மாநிலங்களில் 21 நகரங்களில் வெப்பநிலை 42 டிகிரி செல்சியஸை (107 டிகிரி பாரன்ஹீட்) கடந்திருக்கிறது. இந்த நகரங்களில் வெயில் தொடர்ந்து அதிகரிக்கும் என்றும் வானிலை மையம் எச்சரித்திருக்கிறது.

டெல்லியை பொறுத்தவரை, கடந்த சனிக்கிழமையே இந்திய வானிலை ஆய்வு மையம் வெயிலுக்கான மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த எச்சரிக்க இன்று வரை மொத்தம் மூன்று நாட்களுக்கு தொடரும் என்றும் கூறியிருந்தது. அதிகபட்ச வெப்பநிலை 40-42°C மற்றும் குறைந்தபட்சம் 21-23°C ஆக இருக்கும் என்றும் காலை நேரங்களில் கிழக்கு திசையிலிருந்து மணிக்கு 10-12 கிமீ வேகத்தில் காற்று வீசும் என்றும் மதியம், காற்று வேகம் குறைந்து மணிக்கு 4-6 கிமீ என இருக்கும் என்றும், பிற்பகல் மற்றும் இரவில் தென்கிழக்கு திசையிலிருந்து 10 கிமீ வரை காற்று வீசும் என்றும் வானிலை மையம் கூறியிருக்கிறது.
மறுபுறம் குஜாராத்தை பொறுத்தவரை, அதிகபட்ச வெயிலுக்கான ரெட் அலர்ட்டும் நாளை மற்றும் நாள மறுநாள் ஆரஞ்சு அலர்ட்டும் விடுக்கப்பட்டிருக்கிறது. சவுராஷ்டிரா மற்றும் கச்ச் பகுதிகளில் ஏப்ரல் 6 மற்றும் 7-ல் கடும் வெப்ப அலை நிலவ வாய்ப்பு உள்ளது. ராஜஸ்தானுக்கு ஏப்ரல் 7 மற்றும் 8க்கான ஆரஞ்சு அலர்ட், ஏப்ரல் 9 மற்றும் 10ம் தேதிகளில் மஞ்சள் அலர்ட்டும் விடுக்கப்பட்டிருக்கிறது. ஏப்ரல் 6 முதல் 10 வரை வெப்ப அலை வீசும் என்றும், ஏப்ரல் 7 முதல் 9 வரை அதி கடும் வெப்பம் இருக்கலாம் என்றும் எச்சரிக்கப்பட்டிருக்கிறது. இந்த மாநிலங்கள் தவிர,
1. ஹிமாச்சல பிரதேசம்
2. ஹரியானா
3. பஞ்சாப்
4. மேற்கு உத்தரப்பிரதேசம்
5. மத்திய பிரதேசம்
ஆகிய மாநிலங்களுக்கும் வெப்ப அலைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. அதாவது, ஹிமாச்சல பிரதேசத்தில் இன்று சில பகுதிகளில் வெப்ப அலை வீசும். ஹரியானாவில் 10ம் தேதி வரையும், பஞ்சாப்பில் 10ம் தேதி வரையிலும், மேற்கு உத்தரப்பிரதேசத்தில் 9ம் தேதி வரையிலும், மத்திய பிரதேசத்தில் 10 வரையிலும் வெப்ப அலைக்கான வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
-
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை












Click it and Unblock the Notifications