Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னையில் காலையிலே விடாத மழை.. இன்று 7 மாவட்டங்களில் கனமழை வெளுக்க போகுது.. வானிலை அலர்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் இன்று அதிகாலை முதலே பல்வேறு இடங்களில் மழை கொட்ட ஆரம்பித்துள்ளது. இந்த நிலையில் சென்னையில் இன்று கனமழை பெய்யக்கூடும் என மஞ்சள் அலர்ட் எச்சரிக்கையை வானிலை மையம் விடுத்துள்ளது. இதேபோல் செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக மஞ்சள் நிற எச்சரிக்கையை வானிலை மையம் அறிவித்துள்ளது.

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாக தமிழகத்தில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியுள்ளது. தற்போது சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.

Rain Chennai

சென்னையில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

வடகிழக்கு பருவமழை தமிழகத்தை விட்டு விலகிய நிலையில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியுள்ளது. நேற்று முதலே சென்னையில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய தொடங்கியது. இந்த நிலையில் இன்றும் சென்னையில் அதிகாலையிலேயே பல்வேறு இடங்களில் மழை பெய்ய தொடங்கியது. புறநகர் பகுதிகளிலும் மழை பெய்தது.

தாம்பரம், வண்டலூர், எழும்பூர், புரசைவாக்கம், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம் என காலையிலேயே விட்டு விட்டு மழை பெய்தது. இந்த நிலையில் சென்னையில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. இது தொடர்பாக வானிலை மையம் கூறியிருப்பதாவது:-

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி

கிழக்கு திசை வளிமண்டல அலை (Easterly waves) நிலவுகிறது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கா பகுதிகளிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் பதுவையிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நாளை 25 ஆம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

குறைந்தபட்ச வெப்பநிலை

26-01-2026: உள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 27-01-2026 முதல் 29-01-2026 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில்

இன்று 24-01-2026: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு. எனினும் ஓரிரு இடங்களில் சற்று குறையக்கூடும்.

சென்னையில் இன்று கிளைமேட்

சென்னையில் இன்று (24-01-2026) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான முதல் கன மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 28 செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

தமிழக கடலோரப்பகுதிகள்: 24-01-2026 மற்றும் 25-01-2026: தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

26-01-2026: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் குறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 27-01-2026: எச்சரிக்கை ஏதுமில்லை.

வங்கக்கடல் பகுதிகள்:

24-01-2026: தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய ன்மேற்கு மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் குறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 25-01-2026: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் குறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 @ 36 T மீட்டர் வேகத்திலம் இடையிள ப 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். என்று கூறப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+