1 இன்ச் கூட.. அசையாமல் அப்படியே நிற்கும் டிட்வா புயல்.. சென்னையில் விடாமல் மழை பெய்வது ஏன்? காரணம்
சென்னை: டிட்வா புயல் வலிமை இழந்து ஆழ்ந்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ளது. ஆனால் இந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நகராமல் தமிழகக் கடலோரத்தில் அசையாமல் நிற்கிறது. முக்கியமாக வங்கக்கடலில் சென்னைக்கு அருகே நிற்பதால் இந்த தாழ்வு மண்டலம் கடுமையான மழையை கொடுக்கிறது.
சென்னை மற்றும் அதன் கரையோரப் பகுதிகளில் கனமழை விடாமல் பெய்து வருகிறது. இந்த தாழ்வு மண்டல அமைப்பின் மெதுவான நகர்வால், வலுவான மழை மேகங்கள் மீண்டும் மீண்டும் நகரை நோக்கி வருகிறது, இதுவே அதிகாலை முதல் தொடர் மழையைக் கொண்டுவந்ததாக வானிலை ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். அதாவது தாழ்வு மண்டலம் அருகிலேயே இருந்தபடி .. மழை மேகங்களை சென்னையை நோக்கி நகர்த்தி வருகிறது.

ஆட்டம் காட்டும் டிட்வா புயல்
இந்த டிட்வா புயல் தாழ்வு மண்டலமாக மாறி இருந்தாலும் மழை குறைந்தபாடில்லை. இந்த தாழ்வு மண்டல அமைப்போடு தொடர்புடைய மேகக்கூட்டங்கள் கணிசமாக வலுப்பெற்றுள்ளன. கடற்பரப்பில் மேகங்கள் நீண்ட நேரம் நீடித்து நிற்கிறது. இது போன்ற மேகங்கள் அதிக உயரத்தில் இருக்கின்றன. அசையாமல் இவை அப்படியே நிற்பது ஒழுங்கமைக்கப்பட்ட காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தின் அறிகுறி. இது பொதுவாக அதிக மழையை கொடுக்கும். அப்படித்தான் தற்போது இம்மேகங்கள் தொடர்ந்து ஈரப்பதத்தை நிலப்பரப்பிற்கு கொண்டுவர, சென்னையின் பல பகுதிகளில் மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது..
இந்த புயல் சென்னையில் இருந்து 150 கிமீ தூரத்தில் உள்ளது. ஆனால் வறண்ட காற்று காரணமாக புயல் வலிமை இழந்துவிட்டது. கடுமையான வறண்ட காற்று காரணமாக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாமல் புயல் வலிமை இழந்துவிட்டது. ஆனாலும் டெல்டாவிற்கு.. அதாவது நாகப்பட்டினத்திற்கு 180 கிமீ தூரத்தில் இருப்பதால் டெல்டாவில் மழையை கடுமையாக கொடுத்து வருகிறது. இந்த புயல் காரணமாக டெல்டாவில்தான் கனமழை பெய்து வருகிறது.
நேற்று சென்னையில் பெரிதாக மழை பெய்யாத நிலையில் அதிகாலையில் இருந்து சென்னையிலும் கனமழை பெய்து வருகிறது.
மழை விவரம்
நேற்று இரவு சென்னையில், அரும்பாக்கம், கோயம்பேடு, காசிமேடு , ராயப்பேட்டை, கிண்டி, வடபழனி, திருவொற்றியூர் , எண்ணூர், தேனாம்பேட்டை, அண்ணா சாலை, மெரினா கடற்கரை, சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், ஆகிய பகுதிகளில் இரவு மழை பெய்தது. அதிகாலையில் 1-2 மணி நேரம் விடாமல் மழை பெய்தது. ஆனாலும் அங்கு தண்ணீர் வேகமாக வடிந்துள்ளது.
இப்போது காலை 9 மணியில் இருந்து மீண்டும் விடாமல் மழை பெய்து வருகிறது. இன்று தமிழகத்தின் பெரும்பாலான இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இராமநாதபுரம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், கடலூர் மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழையும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விழுப்புரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை மாவட்டங்களில் சில இடங்களிலும் கனமழை பெய்து வருகிறது.
நாளையும் சென்னையில் மழை தொடரும். அதேபோல் நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications