திண்டுக்கல்லை அலறவிட்ட பேய் மழை! மாவட்டம் முழுவதும் 4 மணிநேரம் கொட்டி தீர்த்தது- 39.2 செமீ மழை!

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: திண்டுக்கல் நகரில் இன்று காலை 8.30 மணி முதல் 4 மணி நேரத்தில் 9 செமீ மழை கொட்டித் தீர்த்தது. கொடைக்கானலில் 4 மணிநேரத்துக்கும் அதிகமாக கனமழை பெய்தது. திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் 4 மணி நேரத்தில் மொத்தம் 39.2 செமீ மழை பதிவானது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக ஓரிரு இடங்களில் மழை பெய்து வந்தது. இன்று அதிகாலை லேசான மழை தொடங்கியது. பின்னர் காலை 8.30 மணி முதல் கனமழை கொட்டித் தீர்த்தது. சுமார் 4 மணிநேரம் இந்த கனமழை நீடித்தது. இதனால் திண்டுக்கல் நகரின் மையமான வெள்ளை விநாயகர் கோவில் பகுதியில் சாலைகளில் பெருமளவு தண்ணீர் தேங்கி நின்றது. இதேபோல திண்டுக்கல் ஆர்.எம். காலனியிலும் சாலைகளில் முழங்கால் அளவுக்கு மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

 Heavy Rain lashes Dindigul District and Received 39.2 cm rainfall within 4 hours.

திண்டுக்கல் நகரில் மட்டும் இன்று காலை 8.30 மணி முதலான 4 மணிநேரத்தில் 9 செ.மீ. மழை பதிவானது. திண்டுக்கல் மாவட்டத்தில் ஒட்டன்சத்திரம், வேடசந்தூர், கொடைக்கானல், வத்தலகுண்டு உள்ளிட்ட பகுதிகளிலும் மழை இடைவிடாமல் கொட்டியது. வேடசந்தூர் சுற்று வட்டாரங்களில் சீரான மழை தொடர்ந்து கொண்டிருக்கிறது. திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் 4 மணிநேரத்தில் மொத்தம் 39.2 செமீ மழை பதிவானது.

திண்டுக்கல் மாவட்டத்தில், திண்டுக்கல் நகரம் 9.18 செமீ; காமாட்சிபுரம் 1.7 செமீ; பழனி 9.3 செமீ; வேடசந்தூர் 3.1 செமீ; கொடைக்கானல் 2.6 செமீ மழை பதிவானது.

இதனால் திண்டுக்கல் மாவட்டத்தில் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தின் காலையில் கனமழை கொட்டியதால் பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்களுக்கு செல்வோர் கடுமையாக அவதிக்குள்ளாகினர். சில பள்ளிகள் மட்டும் உடனடியாக விடுமுறையை அறிவித்தன. கொட்டும் மழையிலும் இயங்கிய பள்ளிகளும் மாணவர்களை வீட்டுக்கு அழைத்து செல்ல பெற்றோருக்கு அறிவுறுத்தல் விடுத்தன. தற்போது திண்டுக்கல்லில் மீண்டும் மழை பெய்து வருகிறது.

தேனி, கம்பம், கூடலூர் பகுதிகளிலும் கனமழை கொட்டி வருகிறது. ராமேஸ்வரம் மற்றும் பாம்பனிலும் இன்று கனமழை வெளுத்து வாங்கியது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+