கோவை டூ குமரி வரை.. தமிழகத்தில் 17 மாவட்டங்களில் கனமழை கொட்டப்போகுது.. சென்னையிலும் மழை இருக்கு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் இன்றும் நாளையும் கோவை, நீலகிரி, திருப்பூர், நெல்லை, தூத்துக்குடி, தஞ்சை என 17 மாவட்டங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னையிலும் இன்று மற்றும் நாளை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் நேற்று பல்வேறு இடங்களில் லேசானது முதல் கனமழை வரை கொட்டியது. நெல்லையில் திசையன்விளையில் திடீரென கனமழை கொட்டியது. குறைந்த நேரத்தில் அதிக மழை பெய்ததால், அங்குள்ள தாழ்வான பகுதிகளில் தண்ணீர் குளம்போல் தேங்கியது. இதேபோன்று இன்று காலையில் சென்னையிலும் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்தது. தென்காசி மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் நேற்று லேசான மழை பெய்தது.

Rain weather Chennai

அடுத்த ஒரு வாரத்திற்கு கிளைமேட் எப்படி

இந்த நிலையில் இன்று தமிழகத்தில் 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருந்த அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் தெற்கு கேரள பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

* இதன்படி, இன்று தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் என மொத்தம் 17 மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
* அதாவது நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் ஆகிய 17 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

வெள்ளிக்கிழமை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு

* நாளை 4 ஆம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் என 17 மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
* அதாவது நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சனி, ஞாயிறுகளில் எப்படி

* வரும் 5 ஆம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் என மொத்தம் 9 மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். * அதாவது கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, தேனி, திண்டுக்கல், தென்காசி, கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

* வரும் 6 ஆம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
* வரும் 7 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை

* இன்று முதல் 5 ஆம் தேதி வரை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2 - 3° செல்சியஸ் குறையக்கூடும். வட உள் தமிழகத்தின் ஒருசில இடங்களில் 2° செல்சியஸ் வரை உயரக்கூடும்.

* இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு: 03-04-2025 மற்றும் 05-04-2025: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக இயல்பை ஒட்டி-இயல்பை விட சற்று குறைவாக இருக்கக்கூடும். 06-04-2025 மற்றும் 07-04-2025: தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3° செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.

சென்னையில் 2 நாட்களுக்கு எப்படி இருக்கும்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

சென்னையில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது அதிகபட்ச வெப்பநிலை 33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். மீனவர்களுக்கான எச்சரிக்கை: எச்சரிக்கை ஏதுமில்லை.

கடந்த 24 மணி நேர மழை அளவு

* சிவகிரி (தென்காசி) 11, தொண்டி (ராமநாதபுரம்), திருமங்கலம் (மதுரை) தலா 9, மதுரை விமானநிலையம் (மதுரை) 7, கோவிலங்குளம் (விருதுநகர்), சிவகங்கை (சிவகங்கை) தலா 6, அருப்புக்கோட்டை KVK AWS (விருதுநகர்), சோழவந்தான் (மதுரை), ஊத்து (திருநெல்வேலி), கொடைக்கானல் படகு குழாம் (திண்டுக்கல்) தலா 5, நாலுமுக்கு (திருநெல்வேலி), ராஜபாளையம் (விருதுநகர்), மண்டலம் 14 மடிப்பாக்கம் (சென்னை), பயணியர் விடுதி சிவகங்கை (சிவகங்கை), திருவாடானை (ராமநாதபுரம்) தலா 4,

* அரவக்குறிச்சி (கரூர்), காக்காச்சி (திருநெல்வேலி), RSCL வல்லம் (விழுப்புரம்), பொன்னையார் அணை (திருச்சிராப்பள்ளி), கருப்பாநதி அணை (தென்காசி), ஆண்டிபட்டி (தேனி), கீழ்கோத்தகிரி எஸ்டேட் (நீலகிரி), வானூர் (விழுப்புரம்), ஆண்டிபட்டி (மதுரை), செய்யூர் ARG (செங்கல்பட்டு), அதிராமப்பட்டினம் (தஞ்சாவூர்), வைகை அணை (தேனி), மாஞ்சோலை (திருநெல்வேலி), சென்னை விமானநிலையம் (சென்னை), இடையப்பட்டி (மதுரை), பிளவக்கல் பெரியாறு அணை (விருதுநகர்) தலா 3,

RSCL-2 கோலியனூர் (விழுப்புரம்), திருமயம் (புதுக்கோட்டை), சாத்தான்குளம் (தூத்துக்குடி), அரண்மனைப்புதூர் (தேனி), RSCL-2 வளவனூர் (விழுப்புரம்), நிலக்கோட்டை (திண்டுக்கல்), சாத்தியார் (மதுரை), வத்திராயிருப்பு (விருதுநகர்), கொடைக்கானல் (திண்டுக்கல்) தலா 2 செமீ மழை பெய்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+