Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அடுத்த 2 மணி நேரம்.. நெல்லை + குமரி மாவட்டம் தான் டார்கெட்.. இடி, மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் அடுத்த இரண்டு மணி நேரத்தில் நெல்லை மற்றும் குமரி மாவட்டங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக வெயில் குறைந்து காணப்பட்டது. தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டியது. தென்காசி, குமரி, நெல்லை மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. நேற்று குமரியில் அதிகபட்சமாக 8 செமீ மழை பெய்தது. மதுரை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழை பெய்தது.

Rain Weather Kumari

அடுத்த 2 மணி நேர அப்டேட்

இந்த நிலையில் தமிழத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் அதாவது இன்று இரவு 7 மணி வரை நெல்லை மற்றும் குமரி மாவட்டங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. முன்னதாக வானிலை மையம் கூறுகையில், வரும் 14 ஆம் தேதி வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி வரை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறியுள்ளது.

அடுத்த ஒரு வாரத்திற்கான அப்டேட்

இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று (07-04-2025) காலை 08.30 மணி அளவில் தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது நாளை (08-04-2025), வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளிலும், அதற்கடுத்த 48 மணி நேரத்தில், வடக்கு திசையில் நகர்ந்து, மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளிலும் நிலவக்கூடும்.

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளிலிருந்து, தென்மேற்கு வங்கக்கடல் வழியாக தென்தமிழகம் வரை ஒரு வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று 7 ஆம் தேதி தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. 09-04-2025 முதல் 13-04-2025 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.


அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:

* அதிகபட்ச வெப்பநிலை மாறுதலின் போக்கு: 07-04-2025 முதல் 11-04-2025 வரை: தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-3° செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும்.
* இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு: 07-04-2025 முதல் 10-04-2025 வரை: தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
* 07-04-2025 மற்றும் 08-03-2025 அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில் தமிழகத்தில் ஓரிரு பகுதிகளில் அசெளகரியம் ஏற்படலாம்.

சென்னையில் எப்படி?

* சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று (07-04-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

* சென்னையில் நாளை (08-04-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

* தமிழக கடலோரப்பகுதிகள்: 07-04-2025 முதல் 09-04-2025 வரை: எச்சரிக்கை ஏதுமில்லை. 10-04-2025 மற்றும் 11-04-2025: தென் தமிழக கடலோரப்பகுதிகள், குமரிக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

* வங்கக்கடல் பகுதிகள்: 07-04-2025: அந்தமான் கடல் பகுதிகள், தென்கிழக்கு வங்கக்கடலின் வடக்கு பகுதிகள், அதனை ஒட்டிய தென்மேற்கு மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

* 08-04-2025: தெற்கு வங்கக்கடலின் வடக்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடலின் தெற்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 09-04-2025 முதல் 11-04-2025: எச்சரிக்கை ஏதுமில்லை.
* அரபிக்கடல் பகுதிகள்: எச்சரிக்கை ஏதுமில்லை. மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மழை அளவு:

* பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி), புத்தன் அணை (கன்னியாகுமரி, எழுமலை (மதுரை) தலா 8 செமீ மழை பெய்துள்ளது. கல்லிக்குடி (மதுரை), அரவக்குறிச்சி (கரூர்) தலா 7 செமீ. காரியாப்பட்டி (விருதுநகர்), உசிலம்பட்டி (மதுரை), எருமைப்பட்டி (நாமக்கல்), சண்முகாநதி (தேனி) தலா 6 செமீ.

* அடையாமடை (கன்னியாகுமரி), ஒட்டன்சத்திரம் (திண்டுக்கல்), மதுரை விமானநிலையம் (மதுரை), சுருளக்கோடு (கன்னியாகுமரி), கிருஷ்ணராயபுரம் (கரூர்), பொதுப்பணித்துறை மக்கினம்பட்டி (கோயம்புத்தூர்), மாயனூர் (கரூர்), சோழவந்தான் (மதுரை), அரண்மனைப்புதூர் (தேனி), எடப்பாடி (சேலம்), பெரியகுளம் (தேனி), ஆனைப்பாளையம் (கரூர்), சிவகாசி (விருதுநகர்), உத்தமபாளையம் (தேனி), கோவிலங்குளம் (விருதுநகர்), அருப்புக்கோட்டை KVK AWS (விருதுநகர்) தலா 5 செமீ,

* திண்டுக்கல் (திண்டுக்கல்), ஸ்ரீவில்லிபுத்தூர் (விருதுநகர்), விருதுநகர் (விருதுநகர்), பொள்ளாச்சி (கோயம்புத்தூர்), பெரியபட்டி (மதுரை), நத்தம் AWS (திண்டுக்கல்), பொன்னையார் அணை (திருச்சிராப்பள்ளி), பேரையூர் (மதுரை), பழனி (திண்டுக்கல்), ஆண்டிபட்டி (மதுரை) தலா 4 செமீ,

* நிலக்கோட்டை (திண்டுக்கல்), வாடிப்பட்டி (மதுரை), கல்லந்திரி (மதுரை), திருமங்கலம் (மதுரை), தென்பரநாடு (திருச்சிராப்பள்ளி), மதுரை நகரம் (மதுரை), மதுரை வடக்கு (மதுரை), அவினாசி (திருப்பூர்), சாத்தூர் (விருதுநகர்), க.பரமத்தி (கரூர்), நத்தம் (திண்டுக்கல்) தலா 3 செமீ.

வெப்பநிலை நிலவரம்:

* அதிகபட்ச வெப்பநிலை:- வேலூர்: 38.7° செல்சியஸ்
* குறைந்தபட்ச வெப்பநிலை (சமவெளிப்பகுதிகளில்):- கரூர் பரமத்தி: 17.0° செல்சியஸ்
* கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-3° செல்சியஸ் உயர்ந்துள்ளது. ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றம் ஏதுமில்லை.

* தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் இயல்பை விட 2° செல்சியஸ் அதிகமாக இருந்தது. ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டி இருந்தது.

* தமிழக உள்மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 35-39° செல்சியஸ், தமிழக கடலோரப்பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 34-36° செல்சியஸ், மலைப் பகுதிகளில் 20-30° செல்சியஸ் பதிவாகியுள்ளது.
* 24 மணிநேரவெப்பநிலைமாறுதல்: (அதிகபட்சவெப்பநிலை) மிக அதிகரித்துள்ளது (1°செல்சியஸ் அல்லது அதற்கு அதிகம்). இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+