Heavy Rain: அடுத்த 3 மணி நேரம்.. அடித்து பெய்யப் போகும் கனமழை.. மதுரை, ராமநாதபுரம் என 13 மாவட்டங்களுக்கு அலர்ட்
சென்னை: தமிழகத்தில் இன்று மதுரை, விருதுநகரில் கனமழை (Heavy rain) வெளுத்து வாங்கியது. மாலை நேரத்திற்கு பிறகும் மழை தொடர்ந்தது. இந்த நிலையில் இன்று இரவு 10 மணி வரை தமிழகத்தில் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாகவே மழை பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. கடந்த இரு நாட்களாக தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் மற்றும் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இன்றும் மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மாலை நேரத்தில் கனமழை வெளுத்து வாங்கியது. இந்த நிலையில் இன்று இரவு 10 மணி வரை தமிழகத்தில் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

13 மாவட்டங்கள் என்னென்ன?
இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- தமிழகத்தில் இன்று இரவு 10 மணி வரை 13 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. குறிப்பாக மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, தூத்துக்குடி, நீலகிரி, அரியலூர், கடலூர், மயிலாடுதுறை, விழுப்புரம், கரூர், நாமக்கல் ஆகிய 13 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கனமழை காரணமாக ஒரு சில இடங்களில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்க வாய்ப்பு உள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி
முன்னதாக வானிலை மையம் வெளியிட்ட வானிலை அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், ராமநாதபுரம், சிவகங்கை, அரியலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை எங்கெல்லாம் கனமழை பெய்யும்
08-09-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தேனி, திண்டுக்கல், மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
09-09-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, தேனி, திண்டுக்கல், மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
13 ஆம் தேதி வரை மழை தான்
10-09-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. 11-09-2025 முதல் 13-09-2025 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையில் மழை பெய்ய வாய்ப்பு
சென்னையில் இன்று (07-09-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான /மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
சென்னையில் நாளை (08-09-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26* செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
பதிவான மழை அளவு (செமீ):
* செஞ்சி (விழுப்புரம்), திருப்புவனம் (சிவகங்கை) தலா 10,
* RSCL வல்லம் (விழுப்புரம்), மண்டலம் 02 மணலி நியூ டவுன் (சென்னை) தலா 9,
* ஆயிங்குடி (புதுக்கோட்டை), RSCL-3 ஆனந்தபுரம் (விழுப்புரம்) 7, செட்டிகுளம் (பெரம்பலூர்) 7. வத்தலை அணைக்கட்டு (திருச்சிராப்பள்ளி) தலா 7.
* கலசப்பாக்கம் (திருவண்ணாமலை) 6. ஏற்காடு (சேலம்) தலா 6.
* டேனிஷ்பேட்டை (சேலம்) 5. மானாமதுரை (சிவகங்கை) 5, RSCL-3 வளத்தி (விழுப்புரம்) 5. திண்டிவனம் (விழுப்புரம்) 5. புது வேட்டக்குடி (பெரம்பலூர்) 5. தாலுகா அலுவலகம் பந்தலூர் (நீலகிரி) 5. செந்துறை (அரியலூர்) மண்டலம் விம்கோ நகர் (சென்னை) தலா 5,
* மண்டலம் 01 கத்திவாக்கம் (சென்னை) 4, RSCL-2 நேமூர் (விழுப்புரம்) 4, RSCL-2 கஞ்சனூர் (விழுப்புரம்) 4. ஏற்காடு AWS (சேலம்) 4, தர்மபுரி PTO (தர்மபுரி) 4, பாடலூர் (பெரம்பலூர்) 4. தேவாலா (நீலகிரி) தலா 4,
* செட்டிகுளம் ARG (பெரம்பலூர்) 3, சேத்துப்பட்டு (திருவண்ணாமலை) 3, RSCL-3 செம்மேடு (விழுப்புரம்) 3, விருதுநகர் (விருதுநகர்) 3, மண்டலம் 02 மணலி புதுநகரம் (சென்னை) 3, கீழ்பென்னாத்தூர் (திருவண்ணாமலை) 3, தேவிமங்கலம் (திருச்சிராப்பள்ளி) 3, சோழவரம் (திருவள்ளூர்) 3. விண்ட் வொர்த் எஸ்டேட் (நீலகிரி) 3, சமயபுரம் (திருச்சிராப்பள்ளி) 3, RSCL-3 அவலூர்பேட்டை (விழுப்புரம்) 3, பயணியர் விடுதி சிவகங்கை (சிவகங்கை) 3, அறந்தாங்கி (புதுக்கோட்டை) 3. தாமரைப்பாக்கம் (திருவள்ளூர்) 3. பார்வூட் (நீலகிரி) 3, நாவலூர் கோட்டப்பட்டு (திருச்சிராப்பள்ளி) 3, காட்பாடி (வேலூர்) 3, வந்தவாசி (திருவண்ணாமலை) 3, காரைக்குடி (சிவகங்கை) 3, மண்டலம் 01 திருவொற்றியூர் (சென்னை) 3, தொழுதூர் (கடலூர்) 3. கரியகோவில் அணை (சேலம்) தலா 3 செமீ மழை பெய்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications