அடுத்த 1 மணி நேரம்.. இடி, மின்னலுடன் விடாமல் கொட்டப் போகும் மழை.. தமிழகம் முழுக்க 18 மாவட்டங்களுக்கு அலர்ட்!
சென்னை: தமிழகத்தில் இன்று இரவு மழை வெளுத்து வாங்க வாய்ப்பு உள்ளதாகவும், அடுத்த 1 மணி நேரத்தில் 18 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக மதுரை, ராமநாதபுரம், திருச்சி, விருதுநகர், கடலூர், சேலம், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்தது. குறிப்பாக திருச்சி, மதுரை, சிவகங்கை மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் திருப்பூர், ஈரோடு, கோவை உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழை பெய்தது. இன்று இரவு திருச்சியில் பரவலாக மழை பெய்தது. மலைக்கோட்டை, சத்திரம் பேருந்து நிலையம், மார்கெட் பகுதிகளில் மழை பெய்தது.

அடுத்த 1 மணி நேரம் விடாது
இந்த நிலையில் இரவிலும் மழை விடாமல் கொட்ட வாய்ப்பு இருப்பதாகவும், அடுத்த 1 மணி நேரத்தில் மட்டும் தமிழகம் முழுக்க 18 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. இது தொடர்பாக வானிலை மையம் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் அடுத்த 1 மணி நேரத்தில் அதாவது இரவு 10 மணி வரை, "மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, விருதுநகர், கடலூர், தர்மபுரி, ஈரோடு, கள்ளக்குறிச்சி, கரூர், நாமக்கல், பெரம்பலூர், சேலம், திருப்பூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய 18 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யும்" என்று கூறப்பட்டுள்ளது.
அடுத்த ஒரு வார அப்டேட்
முன்னதாக வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று 06-09-2025: வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், அரியலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் காரைக்கால் பருதிகளிலும் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
07-09-2025: வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய வேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கூடலூர், மயிலாடுதுறை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை பகுதிகளிலும் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. மற்றும் காரைக்கால்
கனமழை வெளுத்து வாங்கும்
08-09-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
09-09-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராணிபேட்டை, வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
10-09-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சேலம், நாமக்கல், மதுரை, திருச்சி, ராணிபேட்டை, வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. 11-09-2025 மற்றும் 12-09-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையில் 2 நாட்களுக்கு எப்படி?
சென்னையில் இன்று (06-09-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
சென்னையில் நாளை (07-09-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசி.. பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மழை அளவு செமீ:
* மகாபலிபுரம் (செங்கல்பட்டு) 5,
* கும்பகோணம் (தஞ்சாவூர்), கொள்ளிடம் (மயிலாடுதுறை). மணல்மேடு (மயிலாடுதுறை). திருக்கழுக்குன்றம் (செங்கல்பட்டு), தாலுகா அலுவலகம் பந்தலூர் (நீலகிரி), விண்ட் வொர்த் எஸ்டேட் (நீலகிரி), சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்) தலா 4,
* மகாபலிபுரம் AWS (செங்கல்பட்டு), சீர்காழி (மயிலாடுதுறை), ஸ்ரீமுஷ்ணம் (கடலூர்), கீழ் அணைக்கட்டு (தஞ்சாவூர்), மயிலாடுதுறை (மயிலாடுதுறை), பார்வூட் (நீலகிரி), தேவாலா (நீலகிரி), தேவகோட்டை (சிவகங்கை), பனப்பாக்கம் (ராணிப்பேட்டை), வேப்பந்தட்டை (பெரம்பலூர்), செம்பனார்கோயில் பொதுப்பணித்துறை (மயிலாடுதுறை) தலா 3,
* அரியலூர் PTO (அரியலூர்), தாலுகா அலுவலகம் அரியலூர் அரியலூர்), பெலாந்துறை (கடலூர்), மயிலாடுதுறை AWS (மயிலாடுதுறை), விருத்தாசலம் ARG (கடலூர்), பயணியர் விடுதி சிவகங்கை (சிவகங்கை), மணல்மேடு ARG (மயிலாடுதுறை). அறந்தாங்கி (புதுக்கோட்டை), விருதாச்சலம் (கடலூர்), கூடலூர் பஜார் (நீலகிரி), மேல் கூடலூர் (நீலகிரி), செருமுள்ளி (நீலகிரி), சின்கோனா (கோயம்புத்தூர்), வால்பாறை PAP (கோயம்புத்தூர்). கொடைக்கானல் படகு குழாம் (திண்டுக்கல்), கே.எம்.கோயில் (கடலூர்) தலா 2 செமீ மழை பெய்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications