இது வேற லெவல்.. நெல்லை கலெக்டர் எடுத்த துணிச்சல் முடிவு.. கைமேல் கிடைத்த பலன்.. குவிந்த பாராட்டு
திருநெல்வேலி: நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் எடுத்த முடிவு ஒன்று காரணமாக கடும் வெள்ளத்திற்கு இடையிலும் பல்வேறு பிரசவங்கள் பாதுகாப்பான முறையில் நடந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த வார தொடக்கத்தில் தென் தமிழ்நாட்டில் மிக கனமழை பெய்தது. வடகிழக்கு பருவமழை தூத்துக்குடியில் இயல்பை விட 68%மும், திருநெல்வேலியில் 135%மும், கன்னியாகுமரியில் 103%மும், தென்காசியில் 80%மும் கூடுதலாக பதிவாகியுள்ளது. பல இடங்களில் கனமழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டது. தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்கள் வரலாறு காணாத வெள்ளத்தில் மூழ்கின.

நெல்லை ஆட்சியர் முடிவு; இந்த நிலையில்தான் நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் எடுத்த முடிவு ஒன்று மக்கள் இடையே பெரிய அளவில் வரவேற்புகளை பெற்றுள்ளது.
அவர் வெளியிட்ட அறிவிப்பில், திருநெல்வேலி மாவட்டத்தில் அடுத்த 30 நாட்களில் மகப்பேறு தேதி உள்ள 696 கர்ப்பிணிகளை தொடர்பு கொண்டு மருத்துவமனையில் சேர்க்க 17.12.2023 காலை (வெள்ளம் ஏற்பட்ட அன்று காலை) முதல் அறிவுறுத்தப்பட்டு 6pm வரை அடுத்த 7 நாட்களில் மகப்பேறு தேதி உள்ள 24 தாய்மார்கள் முன்னெச்சரிக்கையாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று அறிவித்துள்ளார்.
கடும் புயல் வெள்ளத்திற்கு இடையே.. இந்த விஷயம் பற்றி யோசித்தது.. கர்ப்பிணிகள் பற்றி யோசித்தது பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. ஆட்சியின் இந்த யோசனைக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
வரவேற்பு - பலன்: நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் எடுத்த இந்த முடிவு காரணமாக கடும் வெள்ளத்திற்கு இடையிலும் பல்வேறு பிரசவங்கள் பாதுகாப்பான முறையில் நடந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் அதிகனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 696 கர்ப்பிணிகளை அறிவுறுத்தியதில், 142 பேர் மருத்துவமனைகளில் சேர்ந்து கடந்த 2 நாட்களில் 91 பிரசவங்கள் நடைபெற்றுள்ளன.
பிரசவ எண்ணிக்கை விவரங்கள்: ஆரம்ப சுகாதார நிலையம் 14, அரசு மருத்துவமனை 13, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை 21, தனியார் மருத்துவமனை 43 பிரசவங்கள் நடந்துள்ளன. ஆட்சியர் எடுத்த துரிதமான நடவடிக்கையே இந்த பிரசவங்களுக்கு காரணம்.
ஆய்வு செய்தார்; அதி கனமழையால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் இன்று நேரில் சென்று வெள்ளப் பாதிப்புகளை ஆய்வு செய்து, பொதுமக்களுக்கு ஆறுதல் கூறி, நிவாரண உதவிகளை வழங்கி, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை விரைந்து முடித்திட உத்தரவிட்டார்.
தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பெய்த அதிகனமழையின் காரணமாக ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளப் பாதிப்புகளை எதிர்கொள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் உத்தரவின்படி, வெள்ள பாதிப்புகளை சீர் செய்திடவும், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளவும், மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் நியமிக்கப்பட்டு, அவர்களுடன் இணைந்து நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கண்காணிப்பு அலுவலர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பணி மேற்கொண்டு வருகின்றனர்.
கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தூத்துக்குடி மாவட்டத்திற்கு கூடுதலாக அமைச்சர்கள் மற்றும் இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்பேரில் நியமிக்கப்பட்டு, அவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து மீட்புப் பணிகளை மேற்கொள்ளுதல், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்குதல், மக்களுக்கு வேண்டிய மருத்துவ உதவிகளை வழங்குதல் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் 19.12.2023 அன்று பிரதமர் மோடியை சந்தித்து, தென் மாவட்டங்களில் வரலாறு காணாத வகையில் 100 ஆண்டுகள் இல்லாத கனமழை பெய்ததால் ஏற்பட்ட பாதிப்புகளை விளக்கி, இதனை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்றும், பேரிடர் நிவாரண நிதியிலிருந்து 2000 கோடி ரூபாயை அவசர நிவாரண நிதியாக வாழ்வாதார உதவிக்காகவும், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களின் தற்காலிக சீரமைப்புப் பணிகளுக்காகவும் வழங்கிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டு கோரிக்கை மனு அளித்தார் குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications