மழையும் இருக்கு.. பனியும் இருக்கு.. அடுத்த ஒரு வாரத்துக்கு கிளைமேட் இப்படித்தான்.. வானிலை அப்டேட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தென் தமிழகம், டெல்டா மாவடங்களில் வரும் 14 ஆம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும், தமிழகம், புதுவையில் அதிகாலையில் லேசான பனிமூட்டம் காணப்படும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும் எனவும், சென்னையை பொறுத்தவரை இன்று வானம் மேகமூட்டத்துடனும், காலையில் லேசான பனி மூட்டம் நிலவக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் டிட்வா புயல் காரணமாக கடந்த டிசம்பர் 3 ஆம் தேதி வரை பரவலாக மழை பெய்தது. அதன்பிறகு தென் தமிழகம் மற்றும் தென் கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்தது. ஒரு சில இடங்களில் கனமழையும் ஏனைய இடங்களில் மிதமான மழையுமே பெய்து வந்தது.

Rain Chennai

தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தற்போது இரண்டு நாட்களாக தமிழகம் முழுக்க பரவலாக வெயில் அடித்து வருகிறது. இந்த நிலையில் வரும் 14 ஆம் தேதி வரை தென் தமிழகம், டெல்டா மாவடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள வானிலை அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

இன்று தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

நாளை தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

18 ஆம் தேதி வரை மழைக்கு சான்ஸ்

வரும் 15 ஆம் தேதி கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும். வரும் 16 ஆம் தேதி கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

17 ஆம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 18 ஆம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

குறைந்தபட்ச வெப்பநிலை:

இன்று முதல் 14 ஆம் தேதி வரை தமிழகத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 2° செல்சியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும். இன்று மற்றும் நாளை தமிழகத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட குறைவாக இருக்கக்கூடும்.

சென்னையில் இன்று கிளைமேட்

சென்னையில் இன்று (13-12-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29" செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

தமிழக கடலோரப்பகுதிகள்: இன்று முதல் 15-12-2025 வரை தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+