காற்று சுழன்று அடிக்க போகுது.. "சர்ஜ்" ஆகும் மழைக்காலம்.. வல்லுநர்கள் வெளியிட்ட வானிலை வார்னிங்!
சென்னை: தமிழ்நாட்டின் வானிலை எப்படி இருக்கும், மழைக்காலம் எப்படி இருக்கும் என்று சென்னை ரெயின்ஸ் அமைப்பு கணிப்பு வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை ரெயின்ஸ் அமைப்பு செய்துள்ள போஸ்டில், தமிழ்நாட்டில் மழைக்காலம் வேகம் எடுக்க வாய்ப்பு உள்ளது. இதனால் தமிழ்நாட்டின் மேற்கு பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இந்த பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்புகள் உள்ளன.

இங்கே காற்றின் வேகம் 70 கிமீ/ நேரம் என்ற அளவிற்கு கூட வீச வாய்ப்புகள் உள்ளன. funnel effect எனப்படும் குறுகிய பகுதிகள் இடையே வேகமாக வரும் காற்று காரணமாக காற்றின் வேகம் அதிகரிக்கும். சென்னையின் மேற்கு உள்ளிட்ட பகுதிகளில் இன்றும் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது, என்று சென்னை ரெயின்ஸ் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அவர்கள் வெளியிட்டு உள்ள வானிலை அறிவிப்பில், கிரிக்கெட்டில் பொதுவாக பவர்ப்ளே என்பது வலுவான எதிரணியின் பவுலிங்கிற்கு இடையே புகுந்து அதிரடியாக பேட்டிங் செய்ய உதவியாக இருக்கும். ரன் ரேட்டை உயர்த்துவதற்கு மட்டுமின்றி எதிரணியின் அதிரடி பவுலிங்கை காலி செய்யவும் காரணமாக இருக்கும். அதேபோல்தான் மழை காலத்திற்கும் பவர்ப்ளே தேவை.
முக்கியமாக சாதகமற்ற சூழ்நிலைக்கு இடையே மழையை கொடுக்க வானிலைக்கும் பவர்ப்ளே என்பது தேவை. அப்படி ஒரு சூழ்நிலைதான் இந்த 2023 மழை காலத்திற்காக உருவாக்கிக்கொண்டு இருக்கிறது. கேரளாவில் இந்த வருடம் தாமதமாக மழைக்காலம் தொடங்கியது. அதன்பின் கொஞ்சம் கொஞ்சமாக வேகம் எடுத்து மழை காலம் தீவிரம் அடைந்தது.
ராஜஸ்தானில் சில பகுதிகள், ஹரியானாவில் சில பகுதிகள் தவிர்த்து மற்ற இடங்களில் மழை நன்றாக பெய்து வருகிறது. இந்த இடங்களிலும் விரைவில் மழை பெய்யும். இந்திய கடலின் மேற்கு பகுதியில் திடீரென உயர் மட்டத்தில் மேடன்-ஜூலியன் அலைவு ஏற்படுகிறது. இதுதான் இந்த மழைக்காலத்தில் பவர்ப்ளே போல செயல்பட போகிறது. இந்த மாற்றம் காரணமாக அடுத்த 2 வாரங்களுக்கு நாடு முழுக்க பரவலாக மழை பெய்யும்.
மழைக்காலம் லேட்டாக தொடங்கியதால் ஏற்பட்ட மழை இழப்பை சரி செய்யும் விதமாக நாடு முழுக்க மழை பெய்யும். இன்னும் உறுதியாக சொல்ல முடியாது என்றாலும்.. இன்னும் மழைக்காலத்தின் 3/4 பகுதி முழுமையாக வர வேண்டும் என்ற நிலை இருந்தாலும் கூட.. இந்த காலகட்டம் மழைக்காலத்தின் ஆக்டிவ் சீசனாக மாறும் வாய்ப்புகள் உள்ளன. இந்த காலகட்டம் இந்த மழைக்காலத்தின் ஹைலைட் காலகட்டமாக மாறும் வாய்ப்புகள் உள்ளன. வங்கக்கடலில் நிலவும் மாற்றங்களும் கூட இந்த சூழ்நிலைக்கு தகுந்தபடியே இருக்கும். கடந்த காலங்களில் பெரும்பாலும் வட தமிழ்நாட்டின் அட்சரேகைக்கு மேலே பருவமழை காற்றழுத்த தாழ்வு பகுதி நகரும் போது அது இடியுடன் கூடிய மழையாக பெய்யும், இது பருவமழையை பொறுத்து ஓரிரு நாட்கள் நீடிக்கும்.
இதேபோல் வரும் நாட்களில்.. பெரும்பாலும் தமிழ்நாட்டில் சில பகுதிகளில் இதேபோல் மழை பெய்யும். முக்கியமாக வட தமிழ்நாட்டில் இதேபோல் மழை பெய்யும். முக்கியமாக மேற்கு காற்று காரணமாக மழை மேகங்கள் மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி செல்லும். இதனால் மழை சில மணி நேரங்கள் பெய்தாலும் மிகவும் வலுவாக இருக்கும்.
வார இறுதியில் தற்போதைய தாழ்வு பகுதியானது மேலும் மேற்கு நோக்கி நகர்ந்து அதன் வாழ்க்கைச் சுழற்சியின் முடிவை அடையத் தொடங்கும் போது தெற்கு விரிகுடாவில் மத்திய வெப்பமண்டல மட்டங்களில் புதிய சுழற்சியை உருவாக்குவதைக் வானிலை மாதிரிகள் நமக்கு காட்டுகின்றன. இந்த சுழற்சி காரணமாக சென்னை மற்றும் வட தமிழ்நாட்டில் கடந்த வாரம் ஏற்பட்டது போலவே மழை பெய்யும் வாய்ப்புகள் உள்ளன. பருவமழை பவர்பிளேயை முழுமையாகப் பயன்படுத்துவதற்கு முன்பு, தமிழ்நாட்டின் சில பகுதிகளுக்கு ஓரிரு நாட்களுக்கு மழை பெய்யும் வாய்ப்பை இது வழங்குகிறது.
ஜூலை 1 வார இறுதியை அடையும் முன் நல்ல மழை பெய்யும். காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டில் குறைந்தது 2 மாவட்டங்களிலாவது 250 மிமீ மழை பெய்து டார்கெட்டை அடையும் வாய்ப்புகள் உள்ளன என்று சென்னை ரெயின்ஸ் வானிலை மையம் கூறியுள்ளது.
-
குடை எடுங்க.. ஜூன் 4ல் தென்மேற்கு பருவமழை கன்பார்ம்! தமிழகத்தின் 16 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை -
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications