மழை போயிடுச்சுன்னு நினைக்காதீங்க! இன்னும் ஒரு வாரத்திற்கு இருக்கு! சென்னையில் பெய்யுமா? வானிலை மையம்
சென்னை: தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னையை பொறுத்தவரை இன்றும், நாளையும் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும், தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு வெப்பநிலையும் 2 முதல் 3 டிகிரி வரை உயர வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் அவ்வப்போது மழை பெய்து வருவதனால் மக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்த நிலையில் இன்னும் ஒரு வாரத்துக்கு மழை தொடரும் என்றும், அதே நேரத்தில் வெயிலும் 2 - 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க கூடும் என்று தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள ஒரு வாரத்திற்கான அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

காற்றுடன் மழைக்கு வாய்ப்பு
தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதனால் இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 19 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையில் 2 நாட்களுக்கு
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை இன்று (17-04-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:
அதிகபட்ச வெப்பநிலை மாறுதலின் போக்கு: இன்று முதல் 19-04-2025 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2-3° செல்சியஸ் வரை உயரக்கூடும்.
20-04-2025 மற்றும் 21-04-2025: தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலையில் பொதுவாக பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு.
இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு: இன்று மற்றும் 18-04-2025 தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். 19-04-2025 முதல் 21-04-2025 வரை: தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் குறைந்துள்ளது. ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பொதுவாக பெரிய மாற்றம் ஏதுமில்லை. தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக இயல்பை ஒட்டியும் - குறைவாகவும் இருந்தது. ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருந்தது.
வடதமிழக உள்மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 33-38° செல்சியஸ், தென்தமிழக உள்மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 37-39° செல்சியஸ், தமிழக கடலோரப்பகுதிகள் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 32-35° செல்சியஸ், மலைப் பகுதிகளில் 23-29° செல்சியஸ் பதிவாகியுள்ளது.
மழை அளவு (செமீ)
வடதமிழக கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. மண்டலம் 14 மேடவாக்கம் (சென்னை) 16 செமீ, மண்டலம் 11 வளசரவாக்கம் -1 (சென்னை), மண்டலம் 10 சாலிகிராமம் (சென்னை) தலா 11 செமீ, மண்டலம் 11நெற்குன்றம் (சென்னை), கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர்) தலா 10 செமீ, மண்டலம் 02 மணலி (சென்னை), பொன்னேரி (திருவள்ளூர்) தலா 9 செமீ,
மண்டலம் 05 பாரிஸ் (சென்னை), மண்டலம் 02 மணலி -2 (சென்னை), மண்டலம் பள்ளிக்கரணை-1 (சென்னை) தலா 8 செமீ, மண்டலம் 13 ராஜா அண்ணாமலைநகர் (சென்னை), அண்ணா பல்கலைக்கழகம் ARG (சென்னை), மண்டலம் 11 வளசரவாக்கம் (சென்னை), அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை), மண்டலம் 09 நுங்கம்பாக்கம் (சென்னை), மண்டலம் பள்ளிக்கரணை-1 (சென்னை) தலா 7 செமீ,
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
எம்ஜிஆர் நகர் (சென்னை), மண்டலம் 04 தண்டையார்பேட்டை (சென்னை), மண்டலம் 05 சென்னை சென்ட்ரல் (சென்னை), ஸ்ரீவில்லிபுத்தூர் (விருதுநகர்), புழல் ARG (திருவள்ளூர்), ஆலந்தூர் (சென்னை), சென்னை விமானநிலையம் (சென்னை), மண்டலம் 01 திருவொற்றியூர் (சென்னை), மண்டலம் 11 மதுரவாயல் (சென்னை), சென்னை ஆட்சியர் அலுவலகம் (சென்னை), எண்ணூர் AWS (திருவள்ளூர்), தாம்பரம் (செங்கல்பட்டு), தரமணி ARG (சென்னை), தென்பரநாடு (திருச்சிராப்பள்ளி) தலா 3 செமீ மழை பெய்துள்ளது.
மண்டலம் 03 மாதவரம் (சென்னை), திருக்காட்டுப்பள்ளி (தஞ்சாவூர்), மண்டலம் 08 அண்ணாநகர் மேற்கு (சென்னை), மண்டலம் 13 வேளச்சேரி (சென்னை), CD மருத்துவமனை தண்டையார்பேட்டை (சென்னை), துவாக்குடி IMTI (திருச்சிராப்பள்ளி), மீனம்பாக்கம் AWS (சென்னை), கல்லிக்குடி (மதுரை), கல்லணை (தஞ்சாவூர்), வெம்பக்கோட்டை (விருதுநகர்), மடத்துக்குளம் (திருப்பூர்), கொரட்டூர் (திருவள்ளூர்), மணல்மேடு (மயிலாடுதுறை), பெரம்பலூர் AWS (பெரம்பலூர்) தலா 2,
எமரால்டு (நீலகிரி), வத்திராயிருப்பு (விருதுநகர்), அஞ்சட்டி (கிருஷ்ணகிரி), மணல்மேடு ARG (மயிலாடுதுறை), செம்பரம்பாக்கம் ARG (திருவள்ளூர்), தேவாலா (நீலகிரி), செம்பரம்பாக்கம்-
REV (திருவள்ளூர்), பெரம்பலூர் (பெரம்பலூர்), வால்பாறை PTO (கோயம்புத்தூர்), குன்றத்தூர் (காஞ்சிபுரம்), மகாபலிபுரம் AWS (செங்கல்பட்டு), மண்டலம் 06 கொளத்தூர் (சென்னை), கீரனூர் (புதுக்கோட்டை), சிவகாசி (விருதுநகர்), அவலாஞ்சி (நீலகிரி), சிங்கம்புணரி (சிவகங்கை), வில்லிவாக்கம் ARG (திருவள்ளூர்), குடிமியான்மலை (புதுக்கோட்டை), பூந்தமல்லி (திருவள்ளூர்), கொப்பம்பட்டி (திருச்சிராப்பள்ளி), வூட் பிரையர் எஸ்டேட் (நீலகிரி), கொளப்பாக்கம் ARG (செங்கல்பட்டு), பூந்தமல்லி ARG (திருவள்ளூர்), செருமுள்ளி (நீலகிரி), மண்டலம் 07 கொரட்டூர் (சென்னை) தலா 1.
தமிழக கடலோரப்பகுதிகள், வங்கக்கடல் பகுதிகள் & அரபிக்கடல் பகுதிகள்: 17-04-2025 முதல் 21-04-2025 வரை: எச்சரிக்கை ஏதுமில்லை. மேலும் விவரங்களுக்கு: mausam.imd.gov.in/chennai இணையதளத்தை காணவும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications