சென்னையில் திடீரென விட்டு விளாசிய கனமழை.. நைட்டும் தொடரும்.. 19 மாவட்டங்களுக்கு வார்னிங்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கும் நிலையில், இரவு 7 மணி வரை 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. நெல்லை, தென்காசி, விருதுநகர், கோவை, செங்கல்பட்டு மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. கோவை, நீலகிரி, தென் மாவட்டங்கள் மற்றும் சென்னையில் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வருகிறது. கோவை மற்றும் நீலகிரியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நெல்லை, தென்காசி மாவட்டங்களிலும் மாலை மற்றும் இரவு நேரங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

Sudden heavy downpour in Chennai rain to continue into the night warning issued for 19 districts - IMD

குற்றாலம் அருவிகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. நேற்று இரவும் தென்காசி மற்றும் நெல்லை மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் மிதமானது முதல் கனமழை கொட்டியது. இன்றும் காலையில் இருந்தே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்நிலையில் சென்னையில் இன்று மாலை 3.30 மணியளவில் பல்வேறு இடங்களில் மழை கொட்டியது. சென்னை தி நகர், வடபழனி, நுங்கம்பாக்கம், சேத்துப்பட்டு உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்தது.

இந்நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, கோவை, தேனி, திண்டுக்கல், நீலகிரி, நெல்லை, தென்காசி, குமரி, விருதுநகர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட 19 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் கூறியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+