அடுத்த ஒரு வாரத்துக்கு கோடை மழை தொடரும்.. இன்று 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம்
சென்னை: கோவை, நீலகிரி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி உள்பட தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் நேற்று பகல் நேரங்களில் வெயில் கொளுத்தி எடுத்தது. மதியத்திற்கு பிறகு தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை வெளுத்து வாங்கியது. கோவை, நாமக்கல், திருச்சி, நீலகிரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று கனமழை பெய்தது. இந்த நிலையில் இன்று முதல் அடுத்த ஒரு வாரத்திற்கு தமிழகத்தில் மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை மையம் கூறியிருப்பதாவது:-

5 மாவட்டங்கள் டார்கெட்
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக நீலகிரி, கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை 16 ஆம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், தர்மபுரி, சேலம் மற்றும் நாமக்கல், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
17, 18ஆம் தேதிகளில்..
17-05-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, சேலம், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
18-05-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
21 ஆம் தேதி வரை
* 19-05-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
* 20-05-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
* 21-05-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை
அதிகபட்ச வெப்பநிலை மாறுதலின் போக்கு: 15-05-2025: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பொதுவாக பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. 16-05-2025 முதல் 19-05-2025 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பொதுவாக பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. எனினும் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2-3° செல்சியஸ் குறையக்கூடும்.
வெப்ப அளவின் வேறுபாடு:
* 15-05-2025 மற்றும் 16-05-2025: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்
* 15-05-2025: அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம்.
சென்னையில் கிளைமேட் எப்படி
* சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை, இன்று (15-05-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37-38* செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
* சென்னையில் நாளை (16-05-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
* தமிழக கடலோரப்பகுதிகள்: 15-05-2025 முதல் 19-05-2025 வரை: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் குறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
* வங்கக்கடல் பகுதிகள்: 15-05-2025 மற்றும் 16-05-2025: தென்மேற்கு வங்கக்கடலில் ஒருசில பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 45 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும், அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் குறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 17-05-2025: தென்மேற்கு வங்கக்கடலில் ஒருசில பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 45 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 18-05-2025 மற்றும்19-05-2025 : எச்சரிக்கை ஏதுமில்லை.
பதிவான மழை அளவு செமீ:
* திருச்செங்கோடு (நாமக்கல்), ஒகேனக்கல் (தர்மபுரி) தலா 9,
* அரூர் (தர்மபுரி), அன்னவாசல் (புதுக்கோட்டை) தலா 7.
* காரைக்கால் (காரைக்கால்) 6,
* காரைக்கால் AWS (காரைக்கால்), சேந்தமங்கலம் (நாமக்கல்), இதூப்பூர் (புதுக்கோட்டை). புதுக்கோட்டை (புதுக்கோட்டை), கோவில்பட்டி (திருச்சிராப்பள்ளி), சங்கரி துர்க்கம் (சேலம்). மேட்டுப்பாளையம் (கோயம்புத்தூர்) தலா 5,
* தண்டராம்பேட்டை (திருவண்ணாமலை), RSCL-3 அவலூர்பேட்டை (விழுப்புரம்). சோலையார் (கோயம்புத்தூர்), ஆலங்குடி (புதுக்கோட்டை). நாமக்கல் AWS (நாமக்கல்), ஓசூர் (கிருஷ்ணகிரி), சமயபுரம் திருச்சிராப்பள்ளி), கரூர் (கரூர்), மணப்பாறை (திருச்சிராப்பள்ளி) தலா 4.
* கல்லந்திரி (மதுரை), துவாக்குடி IMTI (திருச்சிராப்பள்ளி), கோத்தகிரி (நீலகிரி), வஊத்தங்கரை (கிருஷ்ணகிரி), தேவகோட்டை (சிவகங்கை), மாரண்டஹள்ளி (தர்மபுரி), திருச்சிராப்பள்ளி விமானநிலையம் (திருச்சிராப்பள்ளி), குடிமியான்மலை (புதுக்கோட்டை), பாப்பிரெட்டிப்பட்டி (தர்மபுரி), மொடக்குறிச்சி (ஈரோடு). குளித்தலை (கரூர்), மயிலாடுதுறை (மயிலாடுதுறை). பாம்பார் அணை (கிருஷ்ணகிரி), கடம்பூர் (தூத்துக்குடி), தொண்டி (ராமநாதபுரம்). சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்), மணியாச்சி (தூத்துக்குடி), பஞ்சப்பட்டி (கரூர்). தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி), கெலவரப்பள்ளி அணை (கிருஷ்ணகிரி), விராலிமலை (புதுக்கோட்டை) தலா 3 செமீ மழை பெய்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications