Bypass rider Didva: டிட்வா புயலின் மழை ரூட் இதுதான்! சென்னைக்கு எப்போது வரும்? வெதர்மேன் கணிப்பு
சென்னை: டிட்வா புயலால் ஏற்படும் மழை எப்போது சென்னையை நோக்கி வருகிறது? என்பது குறித்தும் சென்னைக்கு எப்போது கனமழை பெய்யும் என்பது குறித்தும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் கூறியிருப்பதாவது: டிட்வா புயல் வழித்தடத்தில் எந்த மாற்றமும் இல்லை. தமிழக கடற்கரைக்கு இணையாக coastal bypass rider போல் நகர்ந்து வருகிறது. டெல்டா மாவட்டம் - நாகை மாவட்டம் வரை கனமழை பெய்து வருகிறது. நாகை மாவட்டத்தில் இன்று காலை 3.30 மணி வரை 100 மி.மீ. மழை பெய்துள்ளது.

இது இன்று காலை 8.30 மணிக்கு நிச்சயம் 150 முதல் 175 மி.மீ. வரை தாண்டியிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மழை மெதுவாக கடலூரை நோக்கி வருகிறது. அங்கிருந்து புதுச்சேரிக்கும் பின்னர் சென்னைக்கு இன்று இரவும் வருகிறது.
நாளை ஞாயிற்றுக்கிழமை சென்னைக்கு மிகவும் சிறப்பான நாளாகும். நல்ல மழை வெளுக்கும். டிட்வா புயல் கடலில் கரையவில்லை. அது சென்னைக்கு அருகே 30ஆம் தேதி வருகிறது. நாகை மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் 135 மி.மீ மழையும் கோடியக்கரையில் 92.8 மி.மீ. மழையும் வேளாங்கண்ணியில் 88.8 மி.மீ. மழையும் பெய்துள்ளது. இவ்வாறு தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சென்னை வானிலை மைய இயக்குநர் செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப் பகுதிகளில் நிலவிய 'டித்வா' புயல், இலங்கை கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், இலங்கை திரிகோண மலையிலிருந்து தென்மேற்கே சுமார் 40 கிமீ தொலைவிலும், இலங்கை மட்டக்களப்பிலிருந்து வடமேற்கே 100 கிமீ தொலைவிலும், சென்னையிலிருந்து தெற்கே 530 கிமீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
இது, வடமேற்கு திசையில் நகர்ந்து, இலங்கை கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளை கடந்து, 30-ம் தேதி அதிகாலை, தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், வட தமிழகம் - புதுச்சேரி மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு அருகே நிலவக்கூடும்.
இதன் காரணமாக வட தமிழகத்தில் நாளை (நவ.29), நாளை மறுநாளும் பெரும்பாலான இடங்களிலும், தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும், டிச.1 முதல் 4-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழகத்தில் நவ.29ஆம் தேதி டெல்டா மற்றும் அதனை ஒட்டிய கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், பலத்த தரை காற்று, அதிகபட்சமாக மணிக்கு 90 கிமீ வேகத்தில் வீசக்கூடும். இதர கடலோர மாவட்டங்களில் பலத்த தரைக்காற்று அதிகபட்சமாக மணிக்கு 75 கிமீ வேகத்தில் வீசக்கூடும்.
மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும். புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.
30-ம் தேதி தென் தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் பலத்த தரைக்காற்று அதிகபட்சமாக மணிக்கு 75 கிமீ வேகத்தில் வீசக்கூடும். இதர வட தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் பலத்த தரைக்காற்று அதிகபட்சமாக மணிக்கு 80 கிமீ வேகத்தில் வீசக்கூடும்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications