Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Rishabam Rasi Palan: ரிஷப ராசிக்கு வீசும் அதிர்ஷ்டக் காற்று.. தொட்டது துலங்கும் யோகம்

Subscribe to Oneindia Tamil

ஜனவரி மாத பலன்: 2026 ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் நுழைந்துவிட்டோம். இந்த ஜனவரி மாதத்தில் மேஷம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், தொழில் எப்படி இருக்கும், பணவரவு இருக்குமா, பிரச்சனைகள் தீருமா என்பது குறித்து பார்க்கலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குச் செல்வது வழக்கம். இந்த கிரக மாற்றமானது மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். 2026 புத்தாண்டில் பல்வேறு கிரக மாற்றங்கள் நடைபெறவுள்ளன. அந்த வகையில், இந்த ஜனவரி மாதத்தில் மேஷம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

Rishabam lucku zodiac signs

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத நன்மைகள் நடக்கக்கூடிய அமைப்பு உள்ளது. மாதத்தில் 10 நாட்களாவது குருவின் பார்வையில் இருக்கிறார். முதல் 15 நாட்களுக்கு 8 ஆம் இடத்தில் 3 முதல் 4 கிரகங்கள் கூடியிருக்கும் நிலைமையில் 9 ஆம் இடத்துக்கு சுக்கிரன் செல்கிறார். மாதத்தின் இரண்டாம் பகுதியில் சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் ஆகிய கிரகங்கள் வலிமையாக இருக்கின்றன.

தொட்டது துலங்கும்

9 ஆம் பாவம் நல்லவிதமாக செயல்பட்டாலே தொட்டது துலங்கக்கூடிய அமைப்பு ஏற்படும். வயதிற்கேற்ப நல்ல பலன்கள் கிடைக்கும். இந்த ஆண்டு உங்களுக்கு அமோகமாக இருக்கும். தடைபட்டுக் கொண்டே இருந்த விஷயங்கள் எல்லாம் இனி அற்புதமாக நடிக்கும். பெண்களுக்கு வேலை, கல்வி சார்ந்த விஷயங்கள் அனைத்தும் நன்றாக இருக்கும். மாணவர்களுக்கு இந்த மாதத்தில் இருந்தே நல்ல படிப்பிற்கான அஸ்திவாரம் அமையும்

பயணங்கள்

ஆன்மீக எண்ணங்கள், தொடர்புகள் அதிகரிக்கும். கோவில், குளங்களை சுற்றிப் பார்க்க வேண்டும், காசி, கயா, புனித தீர்த்த தலங்கள், மகான்கள் இடங்களுக்குச் செல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் வந்து சேரும். தானம், தர்மம் செய்யக்கூடிய அளவுக்கு உயர்நிலை வருமானம் வந்து சேரும். ஜனவரி மாதம் உங்களை கைவிடாத மாதமாக இருக்கும்.

வேலை, தொழில்

பொருளாதார முன்னேற்றம் நன்றாக இருக்கும். வேலை, தொழில் தொடர்பான விஷயங்கள் நன்றாக இருக்கும். அலுவலகத்தில் அமைதி ஏற்படும். வெற்றிகள் கிடைக்கக்கூடிய தன்மைகள் உள்ளது. 8,9,10,11 ஆம் இடங்களில் வரிசையாக கிரகங்கள் இருப்பதால் எல்லா விஷயங்களையும் சமாளிக்கும் அமைப்பு ஏற்படும். அம்மாவுக்கு உடல்நலக் குறைவு, கணவன், மனைவி உறவு கசப்பாக இருந்த தன்மை, கோர்ட், கேஸ், பங்காளி சண்டை, சொத்துகளை அனுபவிக்க முடியாத சூழ்நிலை போன்ற அனைத்து அமைப்புகளும் நீங்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+