Rasi Palan This Week: கன்னி ராசிக்கு கூரையை பிச்சுகிட்டு கொட்டும் அதிர்ஷ்டம்.. பேச்சில்தான் கண்டமே
வார ராசி பலன்: நவம்பர் 10 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரையிலான ஐப்பசி 24 முதல் ஐப்பசி 30 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கன்னி ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

சூரிய பகவான் துலாம் ராசியில் நீச்சமாக இருக்கக்கூடிய மாதமே ஐப்பசி. நவம்பர் 10 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரையிலான ஐப்பசி மாதத்தில் மழை, வெள்ளம், புயல் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. அரசியல்வாதிகள், பெரும் புகழ்மிக்கவர்கள், தொழிலதிபர்கள், உலகத் தலைவர்கள், பிரதமர்கள், ராணுவத் தளபதிகள், முப்படைத் தளபதிகள் உள்ளிட்டோர் கவனமாக இருக்க வேண்டிய காலகட்டம்.
அந்த வகையில், நவம்பர் 10 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரையிலான ஐப்பசி 24 முதல் ஐப்பசி 30 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கன்னி ராசி பலன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு யோகத்தை அதிகளவில் பெறும் காலகட்டமாக இருக்கும். காது, மூக்கு, தொண்டை, சைனஸ் தொடர்பான பிரச்சனைகள், பற்கள் தொடர்பான பிரச்சனைகளில் மிக கவனமாக இருக்க வேண்டும். வார்த்தைகளில் இனிமையைக் கடைப்பிடிப்பது நல்லது. திருமணத்தில் இருந்து வந்த தடைகள் நீங்கும். துணைக்கும், உங்களுக்கும் இருந்து வந்த மனத் தாங்கல்கள் நீங்கும்.
தடைகள் நீங்கும்
பெருமாள் வழிபாடு முன்னேற்றத்தைக் கொடுக்கும். சிறிய அலர்ஜிகள் கூட பெரிய தொந்தரவுகளை ஏற்படுத்தும். வாக்குவாதத்தில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. தேவையில்லாத பதட்டங்களைத் தவிர்ப்பது நல்லது. அசையும், அசையா பொருள்கள் சேர்க்கை உண்டாகும். பிள்ளைகள் விஷயத்தில் இருந்து வந்த படிப்புத் தடை, உத்தியோகத் தடை, தொழில் தடை, வியாபாரத் தடை போன்ற அனைத்து தடைகளும் பரிபூரணமாக நீங்கும்.
யோகம் கொட்டும்
நீண்ட நாட்களாக இருந்து வந்த மனத் தாங்கல்கள் நீங்கும். யோக பலத்தை அதிகளவில் பெறும் யோகம் ஏற்படும். தொழில் ரீதியாக மாற்றம் ஏற்படும். சுப காரியங்கள் அனைத்தும் கைகூடும். இழுபறியாக இருந்த விஷயங்கள் எல்லாம் இனி அடுத்தடுத்து நிறைவேறும். கணவன், மனைவி சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், வழக்குகள் போன்றவை பனிபோல விலகும்.
வார்த்தைகளில் கவனம்
வார்த்தைகளில் மட்டும் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். தொழில், உத்தியோகம், படிப்பு, வியாபாரம் தொடர்பான விஷயங்களில் நல்ல முன்னேற்றம் ஏற்படக் கூடிய அமைப்பு ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். தடைகள் அனைத்தும் தவிடு பொடியாகும் காலகட்டம். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். மனக் கசப்புகள் மன பாரங்கள் நீங்கி தெளிவடைவீர்கள்.
தொட்டது துலங்கும்
இதுவரை எந்த காரியங்களை செய்தாலும், அதில் ஏதாவதொரு தடைகளைச் சந்தித்து வந்திருப்பீர்கள். இனி அதுபோன்ற நிலைமைகள் மாறும். தொட்டது துலங்கும் யோகம் ஏற்படும். யாரிடம் பேசினாலும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து இனிமையாகப் பேசுவது நல்லது. இல்லையெனில் பெரிய பாதிப்புகளைச் சந்திக்கும் சூழல் ஏற்படும்.
-
Rasi Palan This Week: தனுசு ராசிக்கு வரப்போகும் சிக்கல்.. இந்த விஷயங்களில் எல்லாம் ரொம்ப கவனம் -
Rasi Palan This Week: விருச்சிகம் ராசியை வச்சு செய்யும் கிரகங்கள்.. வரும் 7 நாட்கள் ரொம்ப கவனம் -
Rasi Palan This Week: துலாம் ராசிக்கு அள்ளிக் கொடுக்கும் குரு.. ஒரு விஷயத்தில் ரொம்ப கவனம் -
Rasi Palan This Week: கன்னி ராசிக்கு கால் வைக்கும் இடமெல்லாம் கண்டம்.. ரொம்ப கவனம் -
Rasi Palan This Week: சிம்ம ராசிக்கு காத்திருக்கும் பேராபத்து.. கண்டத்திற்கு மேல் கண்டம் -
Rasi Palan This Week: கடக ராசிக்கு 15 நாட்களில் அடிக்கப் போகும் ஜாக்பாட்.. தொட்டதெல்லாம் துலங்கும் -
Rasi Palan This Week: மிதுன ராசிக்கு வெற்றியை குவிக்கும் நேரம்.. வேலையில் மட்டும் ரொம்ப கவனம் -
Rasi Palan This Week: ரிஷபம் ராசிக்கு பணம் கொட்டப் போகுது.. புது வேலை கன்ஃபார்ம் -
Rasi Palan This Week: மேஷம் ராசிக்கு இந்த வாரம் எப்படி இருக்கும்.. முழு பலன்கள் விவரம் இதோ -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல்












Click it and Unblock the Notifications