Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Rasi Palan This Week: ஆட்டத்தை ஆரம்பிக்கும் மீனம் ராசி.. குறிவெச்சு அடிக்கப் போறீங்க

Subscribe to Oneindia Tamil

வார ராசி பலன்: டிசம்பர் 29 ஆம் தேதி முதல் ஜனவரி 4 ஆம் தேதி வரையிலான மார்கழி 7 முதல் 13 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மீனம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

meenam-rasi-palan-what-kind-of-benefits-that-meenam-signs-will-get-from-dec-28-to-jan-4

தற்போது கார்த்திகை மாதம் முடிந்து இந்த மாதம் மார்கழி பிறந்துள்ளது. மார்கழி மாதம் பீடை மாதம் என்பார்கள். ஆனால், அப்படியல்ல மிகவும் உத்தமமான மாதமாகும். மார்கழி மாதத்தில் தினமும் பிரம்ம முகூர்த்தத்தில் அகல்விளக்கு ஏற்றி வருவது உங்களுக்கு அற்புதமான நன்மைகளைத் தரும். அந்த வகையில், டிசம்பர் 29 ஆம் தேதி முதல் ஜனவரி 4 ஆம் தேதி வரையிலான மார்கழி 7 முதல் 13 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மீனம் ராசி பலன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.

மீனம்

மீனம் ராசிக்காரர்களுக்கு உத்தியோகம், வியாபாரம், தொழில், படிப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களில் இருந்த வந்த தடைகள் பரிபூரணமாக நீங்கும். உங்களுடைய பழைய உற்சாகம் திரும்பி வரும் அற்புதமான காலகட்டமாக இருக்கும். இழுபறியாக இருந்த நிலைமைகள் எல்லாம் படிப்படியாக மாறும். தடைபட்டுக் கொண்டே இருந்த காரியங்கள் அனைத்தும் உடனடியாக நடக்கும் அற்புதமான காலகட்டமாக இருக்கும்.

யோகம் கொட்டும்

யோக பலத்தை அதிகளவில் பெறக்கூடிய அற்புதமான காலகட்டமாக இருக்கும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். திட்டமிட்டு செய்யும் காரியங்களில் ஏற்றம் ஏற்படும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். தொட்டது துலங்கக்கூடிய நேரமாக இருக்கும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு என அனைத்து விஷயங்களிலும் ஏற்றம் உண்டாகும்.

அனுகூலம்

ரத்த பந்த உறவுகளில் ஏற்றம் ஏற்படும். உறவுகளின் ஆரோக்கியத்தில் சிறிது கவனமாக இருப்பது நல்லது. தாயிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. இணக்காமகப் பேசுவது நல்லது. உணர்ச்சிவசப்படுவதைத் தவிர்க்க வேண்டும். ஜென்மசனி இருப்பதால் வயிறு சம்பந்தப்பட்ட விஷயங்களில் அதீத கவனமாக இருக்க வேண்டும்.

ஆரோக்கியம்

தொற்றுநோய் தொடர்பான பிரச்சனைகள், சளி, காய்ச்சல் தொடர்பான விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது, சோம்பல் அதிகளவில் ஏற்படும் என்பதால் கொழுப்பில்லாத உணவுகளை எடுப்பது நல்லது. உணவு விஷயத்தில் அக்கறை செலுத்துவது உங்களுக்கு ஏற்றத்தை ஏற்படுத்தும். பால் பொருள்கள் பயன்படுத்துவதை தவிர்ப்பது மிகவும் நன்மையைத் தரும்.

தை பிறந்தால் வழி பிறக்கும்

உத்தியோகம், வியாபாரம், தொழில், படிப்பு என எந்த விஷயத்திலும் நல்லவை நடக்கவில்லை என்று நினைப்பவர்களுக்கு தை மாத தொடக்கம் முதலே அற்புதமான காலகட்டமாக இருக்கும். எல்லா விதத்திலும் ஏற்றத்தைப் பெறும் வகையில் கிரகங்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கின்றன. தவறாமல் உடற்பயிற்சியை மேற்கொள்வது சிறந்த பரிகாரமாக இருக்கும்.

பாதிப்புகள் நீங்கும்

உத்தியோகத்தில் இருந்து வந்த பாதிப்புகள் அனைத்தும் பரிபூரணமாக நீங்கும். ஆரோக்கியத்தில் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. நீண்டநாட்களாக இருந்து வந்த உடல் ஆரோக்கிய குறைபாடுகளை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடையும் வாய்ப்பு ஏற்படும். வேற்று மொழி பேசும் மனிதர்களால் உங்களுக்கு கட்டாயமாக ஆதாயம் ஏற்படும்.

வழிபாடு

கோயில் திருப்பணிகளை செய்து முடிக்கும் யோகம் ஏற்படும். நவக்கிரகத்தில் இருக்கும் குரு வழிபாடு உங்களுக்கு ஏற்றத்தைக் கொடுக்கும். இஷ்ட தெய்வ வழிபாடு, குலதெய்வ வழிபாடு முன்னேற்றத்தைக் கொடுக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+