Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஓபிஎஸ் நீங்க "கவர்".. நத்தம் "மிட் ஆன்".. வளர்மதி நீங்க "சில்லி".. !

Subscribe to Oneindia Tamil

சென்னை: எப்படிப் பார்த்தாலும், என்ன செய்தாலும் அதில் ஒரு பக்தி, பவ்யம், ஒரு பயம்.. இதெல்லாம் இல்லாமல் அமைச்சர்களைக் கற்பனை செய்து பார்க்க முடியாது போல. வாட்ஸ் ஆப்பில் வந்த ஒரு படத்தைப் பார்த்தால் இப்படித்தான் நினைக்கத் தோன்றுகிறது.

உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி.. உச்சி மண்டை கிடுகிடுக்க டிவி பெட்டிகளில் போட்டிகளைப் பார்த்து வேட்டி நுனியைத் திருகியபடி ரசிகர் கூட்டம் டென்ஷனில். இப்படிப்பட்ட ரசிகர் கூட்டத்தை டென்ஷனிலிருந்து திசை திருப்பி, விக்கல் வரும் அளவுக்கு கிச்சுக்கிச்சுக் காட்டும் வகையில் உள்ளது இந்தப் படம்.

What a joke sirji?

அம்மா கிரிக்கெட் ஆட வந்தால் எப்படி இருக்கும் என்பதுதான் இந்த கற்பனையின் ஒன்லைன். இதை வைத்து பிரமாதமாக விளையாடியிருக்கிறார்கள் வாட்ஸ்ஆப் வாலாட்டிகள்.

"அம்மா" பிட்ச் நடுவே "எழுந்தருளியிருக்கிறார்". ஆங்காங்கே மைதானத்தில் பலர் படுத்துக் கிடக்கிறார்கள்... நெடுஞ்சாண் கிடையாக. யார் அது என்று உற்றுப் பார்த்தால் அமைச்சர் பெருமக்கள். மிட் ஆனில் ஒருவர், சில்லியில் சிலர்... லாங்ஆனில் நிறையப் பேர்.. பளிச் வேட்டி சட்டையில் கீழே படுத்து அம்மாவுக்கு மரியாதை செலுத்தியபடி "பீல்டி்ங்" செய்கிறார்கள்.

இவர்கள் இப்படி இருந்தாலும், கம்பியைப் பிடிக்காமலேயே நின்னுட்டு வருவார்ய்யா எங்கண்ணன் என்ற கதையாக அம்பரயாவது நச்சுன்னு நின்று தீர்ப்பளிப்பார் என்று பார்த்தால் அவரும் கூடச் சேர்ந்து ஸ்டம்புகளுக்குப் பக்கத்தில் உருண்டு கொண்டிருக்கிறார்....!

செம படம்.. அதை விட செமையான கற்பனை.. பார்த்து ரசிங்க!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+