For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கொரோனா பரவல்.. பலாப்பழ விற்பனை மந்தம்.. வியாபாரிகள், விவசாயிகள் கண்ணீர்

Google Oneindia Tamil News

தாராபுரம் : தாராபுரம் பகுதியில் பலாப்பழம் விற்பனை செய்யும் வியாபாரிகள் கொரோனா தொற்று காரணமாக விலை வீழ்ச்சியால் கவலை அடைந்துள்ளார்கள்.

Recommended Video

    கொரோனா பரவல்.. பலாப்பழ விற்பனை மந்தம்.. வியாபாரிகள், விவசாயிகள் கண்ணீர்

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் அதிக அளவில் சாலையோர நடைபாதை வியாபாரிகள் வணிகத்தில் ஈடுபட்டு வருகின்றனர் . கொரோனா தொற்று காரணமாக சாலையோர கடைகளை நகராட்சி நிர்வாகம் அரசு அறிவுறுத்தலின் பேரில் விதிகளுக்கு உட்பட்டு செயல்பட்டு வருகின்றனர்.

    கடலூர் ,புதுக்கோட்டை, பண்ருட்டி போன்ற இடங்களிலிருந்து பலாப்பழம் வரத்து அதிகரித்ததால் வியாபாரிகள் அதிக அளவில் பலாப்பழம் கொள்முதல் செய்து விற்று வருகின்றனர். இந்நிலையில் பலாப்பழம் கிலோ 15 ரூபாய்க்கு வாங்கி 19 ரூபாய்க்கு விற்கும் சூழ்நிலை நிலவி வருகிறது.

     "சமூக நீதி என்பதே கற்பனையா.. ஆணவ கொலை வழக்கு குற்றவாளிகள் விடுதலையா".. ரஞ்சித் வேதனை

    வேதனை

    வேதனை

    சராசரியாக கிலோ 40 ரூபாய்க்கு விற்க வேண்டிய பலாப்பழம் தற்போது கிலோ 10 ரூபாய்க்கு விற்கும் நிலைக்கு வியாபாரிகள் தள்ளப்பட்டதால் மிகுந்த வேதனையில் உள்ளனர். பொதுமக்களும் பலாப்பழத்தை வாங்க ஆர்வம் காட்டவில்லை. மேலும் பலாப்பழம் இரண்டு நாட்களில் அழுகிவிடும் என்பதால் இன்று இல்லாவிட்டால் என்றாவது விற்பனை ஆகிவிடும் என்றும் விட்டு வைக்க முடியவில்லை.

    பயன்பாடு

    பயன்பாடு

    இதனால் வியாபாரிகள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். கொரோனா நிவாரண நிதி ரூபாய் 1000 அரசு வழங்கியது இரண்டு நாள் செலவுக்கு மட்டுமே பயன்பட்டதாக வியாபாரிகள் கவலை தெரிவிக்கின்றனர். அரசு சாலையோர வியாபாரிகளுக்கு கூடுதல் நிவாரண நிதி மற்றும் சாலையோர கடைகளுக்கு இருக்கும் கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனர்.

    குடும்பம்

    குடும்பம்

    வியாபாரிகள், விவசாயிகள் ஏராளமானோர் கடனை வாங்கி வியாபாரத்திலும் விளைச்சல் செய்வதிலும் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த லாக்டவுனால் விற்பனை மந்த கதியில் உள்ளதால் அவர்களால் வாங்கிய கடனை செலுத்த முடியாமல் அவதி அடைகிறார்கள். வியாபாரிகள் தினக்கடன் வாங்கியுள்ளதால் அன்றாடம் வரும் வியாபாரத்தில் குடும்பம் நடத்தவே சரியாக உள்ளது.

    பலா விவசாயம்

    பலா விவசாயம்

    இதில் எப்படி கடன் கொடுப்பது என்கிறார்கள். இந்த பலா விவசாயத்தை நம்பியும் அதன் விற்பனையால் கிடைக்கும் பணத்தை நம்பியும் ஏராளமான விவசாயிகள் வீட்டு விசேஷங்களுக்கு ஏற்பாடு செய்துள்ளனர். ஆனால் தற்போது இந்த விற்பனை மந்தகதியால் அவர்களால் உணவு தேவையை பூர்த்தி செய்யவே முடியாத நிலை உள்ளதாக கண்ணீர் மல்க தெரிவிக்கிறார்கள். அரசு ஏதாவது நிவாரணம் வழங்கினால் ஓரளவுக்கு நஷ்டத்தை சரி கட்ட முடியும் என எதிர்பார்க்கிறார்கள்.

    English summary
    Jackfruit sales in Tiruppur district not heat up as Coronavirus intensifies. Farmers disappointed.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X