கொழும்பில் இந்திய நிறுவனத்துக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை சீனாவிடம் தூக்கிக் கொடுத்த இலங்கை!

கொழும்பு காலி வீதியில் உள்ள டுப்ளிகேஷன் வீதியில் இந்திய நிறுவனம் ஒன்றுக்கு குறிப்பிட்ட அளவு நிலம் கொடுக்க தீர்மானிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக முதல்கட்ட நடவடிக்கைகள் முடிவடைந்திருந்தது. இலங்கையில் உள்ள இந்திய தூதரகமும் இலங்கை வெளிவிவகார அமைச்சகத்துக்கு உரிய நடைமுறைகளின்படி கடிதம் அனுப்பியிருந்தது.
இந்நிலையில் திடீரென சீனாவின் தேசிய விமான தொழில்நுட்ப இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நிறுனவத்துக்கு இந்த நிலம் ஒதுக்கப்பட்டுவிட்டதாக இலங்கை அரசு அறிவித்துவிட்டது. இதில் இந்தியா கடும் அதிருப்தி அடைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக டெல்லியில் உள்ள கொழும்பு தூதரிடம் இந்திய வெளிவிவகார அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. கொழும்பிலும் இந்திய தூதரக அதிகாரிகள் இது தொடர்பாக இலங்கை அதிகாரிகளிடம் தங்களது கோபத்தை வெளிப்படுத்தியிருக்கின்றனர்.
சர்ச்சைக்குரிய இந்த நிலத்தை வாங்குவதற்கு அமெரிக்க தூதரகமும் கூட முன்பு முனைப்பு காட்டியிருந்தது. ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்காக அமெரிக்கா அம்முடிவை கைவிட்டிருந்தது.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு!












Click it and Unblock the Notifications