அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்.. ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம்.. நெறிமுறைகளை வெளியிட்ட மத்திய அரசு!
மத்திய அரசு ஊழியர்களுக்கான ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒப்புதல் அளித்திருந்த நிலையில், தற்போது குடியரசு தினத்தை முன்னிட்டு ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கான நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. இந்த ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் ஏப்ரல் மாதம் முதல் அமலுக்கு வரவுள்ளது.
2003ஆம் ஆண்டு பழைய ஓய்வூதிய திட்டம் முடிவுக்கு வந்த நிலையில், 2004ஆம் ஆண்டு முதல் புதிய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த நிலையில் 21 ஆண்டுகளுக்கு பின் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. ஏற்கனவே இந்த ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கு கடந்த ஆகஸ்ட் மாதம் மத்திய அரசு ஒப்புதல் அளித்த நிலையில், தற்போது குடியரசு தினத்தை முன்னிட்டு ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கான நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

புதிய ஓய்வூதிய திட்டத்தில் பணியாளர்கள் மற்றும் நிறுவனங்கள், ஓய்வூதிய நிதிக்கு பங்களிப்பு செய்வார்கள். அதில் இருந்து தான் ஓய்வூதியம் நிர்ணயம் செய்யப்படும். ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திலும் இதே பாணி பின்பற்றப்பட்டாலும், இதில் அரசு ஊழியர்களின் சேவை காலம் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தின் மூலமாக குறைந்தபட்சம் 50 சதவிகித ஓய்வூதியத்திற்கு உத்தரவாதம் கிடைத்துள்ளது.
அதேபோல் 10 ஆண்டுகளுக்கு மேல் சேவை செய்த அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரம் ஓய்வூதியமாக கிடைக்கும். அதேபோல் ஓய்வு பெற்ற ஊழியர் மறைந்துவிட்டால், அவரின் அதிகாரப்பூர்வ கணவன்/மனைவி-க்கு 60 சதவிகிதம் ஓய்வூதியம் கிடைக்கும். அதேபோல் ஊழியர் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பணவீக்கத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இதனால் விலைவாசி உயர்வுக்கு ஏற்ப ஓய்வூதியம் அதிகரிக்கப்படும்.
அதுமட்டுமல்லாமல் பணியை ராஜினாமா செய்துவிட்டு சென்றால், பனிக்கொடையுடன் கூடிய குறிப்பிட்ட அளவிற்கான ரொக்கம் கிடைக்கும். அவருக்கு ஓய்வூதியம் கிடைக்காது. அதேபோல், குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் பணி செய்த அரசு ஊழியர்கள், கடைசி 12 மாதங்கள் பெற்ற சராசரி ஊதியத்தின் அடிப்படையில் 50 சதவிகிதம் அளவிற்கு ஓய்வூதியம் அளிக்கப்படும்.
புதிய ஓய்வூதியத் திட்டத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஊழியர்களும், ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் வருவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மத்திய அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் என்ற இரு வாய்ப்புகள் அளிக்கப்படும். அந்த வாய்ப்பில், ஒன்றை தேர்வு செய்ய வேண்டும். ஒருமுறை தேர்வு செய்த பின்னர், அதனை மாற்ற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications