பாகிஸ்தானின் மோசமான நிலையை பாருங்க! 16 லட்சம் குழந்தை தொழிலாளர்கள்! ஷாக் தகவல்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பொருளாதார தொடர்ந்து பலவீனமடைந்து கொண்டே வருகிறது. அந்நாட்டு இன்னமும் வளர்ச்சி அடையாமல் இருக்க இது ஒரு முக்கிய காரணம். ஆனால் அதைவிட முக்கியமான காரணம் குழந்தை தொழிலாளர்கள்தான். சிந்து மாகாணத்தில் சுமார் 16 லட்சம் குழந்தை தொழிலாளர்கள் இருக்கின்றனர் என்று அதிர்ச்சியூட்டும் ஆய்வு தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிந்துவின் தொழிலாளர் நலத்துறை தலைமை இயக்குநர் சையத் முஹம்மது முர்தாசா அலி ஷா, குழந்தை தொழிலாளர்கள் குறித்து அதிர்ச்சி தகவல்களை தெரிவித்திருக்கிறார்.

அவர் கூறுகையில், "5 முதல் 17 வயது வரையிலான குழந்தைகளைப் பாதுகாக்க சட்டங்களை புதுப்பித்து அமல்படுத்த அரசு முயன்ற போதிலும், குழந்தை தொழிலாளர் ஒரு பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. யுனிசெஃப் மற்றும் புள்ளியியல் பணியகத்தின் தொழில்நுட்ப உதவியுடன் ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் தொழிலாளர் நலத்துறை நடத்திய கணக்கெடுப்பில், மாகாணத்தில் 1.6 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் குழந்தை தொழிலாளர்களாக இருக்கின்றனர் என்பது தெரிய வந்திருக்கிறது. இந்த குழந்தைகளின் எண்ணிக்கை மிகப்பெரியது. இங்குள்ள 5-17 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் மொத்த எண்ணிக்கையில் குழந்தை தொழிலாளர்கள் 10.3% ஆக உள்ளனர்.
மற்ற மாகாணங்களும் இப்போது குழந்தை தொழிலாளர்கள் குறித்த புதிய கணக்கெடுப்புகளை நடத்தி வருகின்றன. சிந்துவில், 8 லட்சம் குழந்தைகள், அபாயகரமான மற்றும் சுரண்டல் சூழ்நிலைகளில் வேலை செய்கிறார்கள். இது அதிக வேலை நேரம், தீவிர காலநிலை மற்றும் விவசாயம் மற்றும் தொழில்துறை துறைகளில் பாதுகாப்பான கருவிகள் இல்லாமல் இந்த குழந்தைகள் வேலை செய்கின்றனர். நாங்கள் நடத்திய ஆய்வில், வேலை செய்யும் குழந்தைகளில் 40.6% மட்டுமே பள்ளிக்குச் செல்கிறார்கள், வேலை செய்யாத குழந்தைகளில் 70.5% பள்ளிக்குச் செல்கிறார்கள் என்பது தெரிய வந்திருக்கிறது.
கம்பார் ஷாஹ்தட்கோட் மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர் விகிதம் 30.8% ஆகவும், அதைத் தொடர்ந்து தார்ப்பார்க்கர் 29%, டான்டோ முஹம்மது கான் 20.3% மற்றும் ஷிகார்பூர் 20.2% ஆகவும் இருக்கிறது. கராச்சியில் மிகக் குறைந்த விகிதமாக 2.38% பதிவாகியுள்ளது. சட்டங்களை புதுப்பித்தல், குழந்தை தொழிலாளரின் சட்டவிரோதத்தை மக்களுக்கு கற்பிக்க திட்டங்களை அதிகரிப்பது மற்றும் குழந்தைகளைப் பாதுகாக்க பணியிடங்களில் சோதனைகளை நடத்துவது போன்ற நடவடிக்கைகளை மாகாண அரசு மேற்கொண்டு வருகிறது.
முதலமைச்சர் சையத் முராத் அலி ஷா இந்த அச்சுறுத்தலை குறைக்க ஒரு சிறப்பு பணிக்குழுவையும் அமைத்துள்ளார். கணக்கெடுப்பின்படி, 1996 இல் 20.6% ஆக இருந்த குழந்தை தொழிலாளர் விகிதம், கிட்டத்தட்ட 50% குறைந்துள்ளது. குழந்தை தொழிலாளர்களுக்கு முக்கிய காரணம், வறுமைதான். எனவே ஏழ்மையில் வாடும் குடும்பங்களுக்கு உதவ, அரசு சமூக பாதுகாப்பு திட்டங்களை தொடங்கியுள்ளது" என்று கூறியிருக்கிறார்.
குழந்தை தொழிலாளர்கள் முறை முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டிய ஒன்று. அதை பாகிஸ்தான் சீக்கிரமாக செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியறுத்தியுள்ளனர்.
-
மிகப்பெரிய டவிஸ்ட்.. யுரேனியத்தை கைவிடும் ஈரான்.. அமெரிக்காவிடம் தாராளமாக விட்டுக் கொடுக்க முடிவு -
ஒரே நொடி.. மின்னல் வேகத்தில் வந்து மோதிய கார்! வெடித்து சிதறிய ரயில்.. பறிபோன 24 உயிர்கள்.. திக்திக் -
உடல் வெடித்து சிதறிய பாக்., ராணுவ வீரர்கள்..ரயிலில் தற்கொலைப்படை தாக்குதல்.. BLA–வின் ஷாக் பின்னணி -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
அஷ்டமத்து சனி ஓவர்! இனிதான் விஜய் ஆட்டம் ஆரம்பம்! ஆட்சியை இழக்கவும் தயங்க மாட்டார்! ஷெல்வி கணிப்பு -
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்!












Click it and Unblock the Notifications