இந்தியா யார் தலையீட்டையும் ஏற்கல.. பாகிஸ்தான் அமைச்சர் பகிர்ந்த டாப் சீக்ரெட்.. டிரம்புக்கு நோஸ்கட்!
இஸ்லாமாபாத்: இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் அமெரிக்காவின் தலையீட்டை இந்தியா ஏற்கவில்லை என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் முகம்மது இஷார் தாக் முதல் முறையாக வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார். இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போரை நான் தான் நிறுத்தினேன் என்று டிரம்ப் தொடர்ந்து கூறி வந்த நிலையில், பாகிஸ்தான் இந்த விவகாரத்தில் உண்மையை போட்டு உடைத்துள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் இடையேயான மோதலை நான் தான் தலையிட்டு நிறுத்தினேன் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார். புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை அழிக்க இந்தியா "ஆபரேஷன் சிந்தூர்" நடவடிக்கையை எடுத்தது.

டிரம்ப் சொல்வது உண்மை இல்லை
இந்தியாவின் அதிரடி தாக்குதலால் அரண்டு போன பாகிஸ்தான், சண்டை நிறுத்தம் செய்யுமாறு இந்தியாவிடம் கேட்டுக்கொண்டது. இதையடுத்து இருநாடுகளுக்கும் சண்டை நிறுத்தம் ஏற்பட்டது. இதில் எந்த ஒரு மூன்றாம் தரப்பு நாடும் தலையிடவில்லை. அப்படியான தலையீட்டையும் ஏற்க மாட்டோம் என்பதே இந்தியாவின் நிலைப்பாடாக உள்ளது.
ஆனால் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், வர்த்தகத்தை காட்டி இரண்டு அணு ஆயுத நாடுகளுக்கு இடையேயான மோதலை நிறுத்தியதாக தம்பட்டம் அடித்து வருகிறார். இந்த நிலையில்தான் டிரம்ப் கூறியதில் உண்மையில்லை என்பதை காட்டும் விதமாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் தாரின் கருத்து அமைந்துள்ளது. பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் தார், இது தொடர்பாக செய்தி சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
இந்தியா ஒருபோதும் ஏற்றுக்கொண்டது இல்லை
"அமெரிக்க வெளியுறவு செயலர் ரூபியோ வாயிலாக எனக்கு மே 11 காலை 8.17 மணிக்கு போர் நிறுத்தம் குறித்த தகவல் வந்தது. இந்தியாவுக்கும் உங்களுக்கும் தனித்த இடத்தில் விரைவில் ஒரு பேச்சுவார்த்தை இருக்கும் என்று எனக்கு சொல்லப்பட்டது. ஆனால், ஜூலை 25 ஆம் தேதி அமெரிக்க வெளியுறவு செயலர் ரூபியோவை நான் சந்தித்து பேசினேன்.
அப்போது, இந்த விவகாரம் (இந்தியா - பாகிஸ்தான்) இரு தரப்பு நாடுகளுக்கு இடையேயானது என்று இந்தியா கூறிவிட்டது" என ரூபியோ கூறினார். மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் செய்வதை இந்தியா ஒருபோதும் ஏற்றுக்கொண்டது இல்லை. இந்தியாவுடன் பாகிஸ்தான் பேச்சுவார்த்தை நடத்த தயாராகவே இருந்தது. ஆனால், இந்தியா இதற்கு உரிய பதிலை அளிக்கவில்லை.
திரும்பத் திரும்ப கூறும் டிரம்ப்
பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் தயாராகவே உள்ளது. இந்தியா பேச்சுவார்த்தைக்கு விரும்பவில்லை என்றால், நாங்கள் கட்டாயப்படுத்த முடியாது" என்றார். "இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போரை நானே முடிவுக்கு கொண்டு வந்தேன்" என டிரம்ப் திரும்பத் திரும்ப கூறி வரும் நிலையில், தற்போது பாகிஸ்தான் அமைச்சரே "இந்தியா இந்த விவகாரத்தில் மூன்றாம் தரப்பு தலையீட்டை ஏற்றுக்கொள்ளவில்லை" என்று கூறியிருப்பது, சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
பாகிஸ்தான் கோரிக்கையை ஏற்றே
முன்னதாக, கடந்த 10 ஆம் தேதி அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது சமூக வலைதளத்தில் "இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டது" என்று அறிவித்தார். இந்தியாவும் பாகிஸ்தானும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் முன்பே டிரம்ப் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. எனினும், இந்தியா துவக்கத்திலிருந்தே இதனை மறுத்து வந்தது.
டிரம்ப் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டது குறித்து, சிறிது நேரத்தில் அன்றைய தினமே பதிலளித்த இந்திய வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி, "பாகிஸ்தான் விடுத்த கோரிக்கையை ஏற்றே, இரு நாடுகளும் தாக்குதலை நிறுத்திவைத்துள்ளன" என்று கூறினார்.
-
“இந்தியா என்னை 100% நம்பலாம்.. நான் மோடியின் மிகப்பெரிய ரசிகன்!” ஓபனாக பேசிய டிரம்ப்! -
பாகிஸ்தான் கூட டிரம்ப்பை மதிக்கல.. அமெரிக்காவை சீண்டும் ஷெரீப் அரசு.. இனி தான் இருக்கு சம்பவம்! -
சமாதான பேச்சுவார்த்தைக்கு நடுவே வேலையை காட்டிய டிரம்ப்.. ஈரானுக்கு எதிராக அமெரிக்கா திடீர் தாக்குதல் -
அடங்க மறுக்கும் ஈரான்.. 2.O தாக்குதலுக்கு ரெடியாகிறதா அமெரிக்கா! டிரம்பின் திட்டம் இதுதான்! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம்












Click it and Unblock the Notifications