"இந்தியா தான் எங்களுக்கு முக்கியம்.." பாகிஸ்தானை கழற்றிவிட்ட ரஷ்யா.. மிக முக்கிய அறிவிப்பு
மாஸ்கோ: அதிநவீன ஜெட் இன்ஜினை பாகிஸ்தானுக்கு ரஷ்யா வழங்கவுள்ளதாகத் தகவல் வெளியானது. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே மோதல் போக்கு இருக்கும் நிலையில், ரஷ்யாவின் இந்த முடிவு பேசுபொருளானது. இதற்கிடையே இந்தத் தகவலை ரஷ்யா திட்டவட்டமாக மறுத்துள்ளது. இந்தியா உடனான உறவே தங்களுக்கு முக்கியம் என்றும் இதுபோல தங்களுக்கு எந்தவொரு திட்டமும் இல்லை என்று ரஷ்யா கூறியுள்ளது.
கடந்த சில காலமாகவே புவிசார் அரசியலில் படுவேகமாக மாறி வருகிறது. ஒரு பக்கம் அமெரிக்கா இந்தியா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இன்னொரு பக்கம் அமெரிக்காவும் பாகிஸ்தான் நெருக்கம் காட்ட ஆரம்பித்துள்ளது. இதனால் இந்தியாவும் அதற்கேற்பத் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள ஆரம்பித்துள்ளது.

இந்தியா ரஷ்யா உறவு
இந்தியா ரஷ்யா இடையேயான உறவு பல காலமாகவே நீடித்து வருகிறது. அமெரிக்கா- இந்தியா உறவுக்கு முன்பிருந்தே இந்தியா ரஷ்யா உறவு சிறப்பாக இருந்துள்ளது. பல நேரங்களில் ஐநாவில் இந்தியாவுக்கு ஆதரவாக ரஷ்யா தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி, துணையாக நின்றுள்ளது. இதன் காரணமாகவே இந்தியாவும் கூட பல நேரங்களில் ரஷ்யாவுக்கு ஆதரவாக நிற்கிறது.
உக்ரைன் மோதல் விவகாரத்தில் கூட மோதலை முடிவுக்குக் கொண்டு வர பல முறை பிரதமர் மோடி வலியுறுத்தியிருந்தார். அதேநேரம் அந்த மோதல் விவகாரத்தில் பல நாடுகள் ரஷ்யாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்திருந்தது. ஆனால், பழைய நட்பின் காரணமாக இந்தியா நடுநிலையான நிலைப்பாட்டையே எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஜெட் இஞ்சின்
இதற்கிடையே பாகிஸ்தானுக்கு ரஷ்யா தனது ஜெட் விமானங்களை வழங்கவுள்ளதாகக் கடந்த சில நாட்களுக்கு முன்பு செய்திகள் வெளியானது. சீனாவிடம் இருந்து பாகிஸ்தான் வாங்கிய JF-17 தண்டர் பிளாக் III போர் விமானங்களுக்காக ரஷ்யா தனது RD-93MA இன்ஜின்களை வழங்குவதாகக் கடந்த சில நாட்களுக்கு முன்பு செய்திகள் வெளியானது. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் மோதல் போக்கு நிலவி வரும் இந்தச் சூழலில், ரஷ்யா பாகிஸ்தானுக்கு இன்ஜின் வழங்குவது சரியாக இருக்காது எனப் பலரும் கேள்வி எழுப்பினர்.
காங்கிரஸ் விமர்சனம்
குறிப்பாகக் காங்கிரஸ் கட்சி இதைக் கடுமையாக விமர்சித்து. மோடி அரசின் வெளியுறவுக் கொள்கைகள் முழுமையாகத் தோல்வி அடைந்துவிட்டதையே இது காட்டுவதாகவும் இது தொடர்பாக உரிய விளக்கம் கொடுக்கப்பட வேண்டும் என்றும் காங்கிரஸின் ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்திருந்தார்.. வெளியுறவு துறை ஜெய்சங்கர் இந்த விவகாரத்தில் நேரடியாகத் தலையிட்ட பிறகும் கூட இதைத் தடுக்க முடியவில்லை என்றும் இந்த நிலையில் தான் வெளியுறவுத் துறை இருப்பதாகவும் அவர் விமர்சித்திருந்தார்.
ரஷ்யா விளக்கம்
இதற்கிடையே இந்தச் செய்திகளை ரஷ்யா திட்டவட்டமாக மறுத்துள்ளது. பாகிஸ்தானுக்கு RD-93MA இன்ஜின்கள் வழங்குவது குறித்த செய்திகளை ரஷ்யா நிராகரித்துவிட்டதாகச் சர்வதேச ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இது தொடர்பாக ரஷ்ய வட்டாரங்கள், "அப்படியான எந்தவொரு திட்டமும் இல்லை.. ரஷ்யாவிற்கும் இந்தியாவிற்கும் இடையே நீண்ட நட்புறவு இருக்கிறது. அப்படியிருக்கும்போது இதுபோன்ற ஒரு முடிவை எடுக்க மாட்டோம்" என்று தெரிவித்தனர்.
இந்தியாவுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் பாகிஸ்தானுடன் ஒத்துழைக்க மாட்டோம் என்றும் ரஷ்யா கூறியுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையேயான உறவைச் சீர்குலைக்க யாரோ சிலர் திட்டமிட்டு இதுபோன்ற செயல்களைச் செய்வதாகவும் ரஷ்யா திட்டவட்டமாகக் கூறியுள்ளது.
-
இந்தியாவால் ஆடிப்போன சீனா... அமெரிக்காவுடன் இணைந்து மாஸ்டர் மூவ்.. உற்று பார்க்கும் உலக நாடுகள் -
மீண்டும் உயிர் பெறும் "இந்தியா.." மம்தா எடுக்கும் முயற்சி.. விஜய் உள்ளே.. ஸ்டாலின் வெளியே! -
இந்தியாவை முடக்க சீனாவின் நரித்தனம்.. பக்காவான பிளான் Bஐ இறக்கும் இந்தியா.. பிரம்மாண்ட அஸ்திரம்! -
எஸ்-400 ஏவுகணை அமைப்புகளை களமிறக்கும் இந்தியா.. ரஷ்யாவுடன் அவசர டீலிங்.. திடீர்ன்னு என்ன ஆனது? -
இரு துருவத்தில் பயணிக்கும் இந்தியா - அமெரிக்கா.. முதலீட்டாளர்களே இதையெல்லாம் நோட் பண்ணுங்கப்பா!! -
“இந்தியா என்னை 100% நம்பலாம்.. நான் மோடியின் மிகப்பெரிய ரசிகன்!” ஓபனாக பேசிய டிரம்ப்! -
காரை அடிக்கடி துடைத்தால் இப்படியொரு பிரச்சனை வருமாம்.. தெரியாம கூட இதை மட்டும் செய்ய வேண்டாம்! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது!












Click it and Unblock the Notifications