சீனா ₹6.7 லட்சம் கோடி இழப்பீடு தருமா? மொத்த ஆப்பிரிக்காவையும் திரும்பி பார்க்க வைத்த ஜாம்பியா மக்கள்
லூசாகா: ஆப்பிரிக்காவில் உள்ள பல்வேறு நாடுகளுக்கு சீனா கடன் கொடுத்து அந்த நாடுகளை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, வேண்டிய கனிமங்களை எடுத்துக்கொள்கிறது. அதேபோல் அந்த நாட்டில் தனது பொருட்களையும் விற்கிறது. அப்படித்தான் ஆப்பிரிக்காவின் ஜாம்பியாவில் சீன அரசாங்கத்திற்கு சொந்தமான சுரங்க நிறுவனம் ஒன்று அங்குள்ள பகுதியை குத்தகைக்கு எடுத்து சுரங்கம் தோண்டி வருகிறது. அந்த நிறுவனத்திற்கு எதிராக சுமார் ₹6.7 லட்சம் கோடி நஷ்டஈடு கோரி அந்த மக்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
ஏழை நாடுகளில் உள்ள வளங்களை அதிகப்படியான கடன் கொடுத்து தன் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் பணக்கார நாடுகள், தங்களுக்கு வேண்டியவரை அதிகாரத்தில் அமர வைத்து, அனைத்து வளங்களையும் தேவையான அளவிற்கு எடுத்துக்கொள்ளும். அப்படித்தான் சீனாவும் பல்வேறு நாளுக்கு கடன் கொடுப்பதுடன், உள்கட்டமைப்பு மேம்படுத்துவதாக கூறி, வேண்டிய அனைத்தையும் செய்து கொண்டு வருகிறது.

சீனா ஜாம்பியாவில் முதலீடு
அப்படித்தான் ஜாம்பியாவில் சுரங்கத் தொழிலிலும், உள்கட்டமைப்புத் திட்டங்களிலும் சீனா முதலீடுகள் செய்திருக்கிறது. சீனாவின் "பெல்ட் அண்ட் ரோடு" திட்டத்தின் ஒரு பகுதியாக, ஜாம்பியாவில் சாலைகள், பாலங்கள், ரயில் பாதைகள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்கள் போன்றவற்றை சீனா உருவாக்கி வருகிறது. ஏழை நாடான ஜாம்பியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு சீனா உதவி செய்வதாக பலர் நினைத்தாலும், ஜாம்பியாவை கடன் வலையில் சிக்க வைக்கக்கூடும் என்றே விமர்சனங்கள் உள்ளன. மேலும், சீன நிறுவனங்கள் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. அப்படி ஒரு விஷயம் தான் இப்போது பார்க்க போகிறோம்.
விவசாயிகள் வழக்கு
ஜாம்பியா நாட்டில் உள்ள விவசாயிகள் இரண்டு சீன நிறுவனங்கள் மீது $80 பில்லியன் (சுமார் ₹6.7 லட்சம் கோடி) நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடுத்திருக்கிறார்கள். இந்த வழக்கு ஜாம்பியா வரலாற்றிலேயே மிகப்பெரிய சுற்றுச்சூழல் வழக்கு ஆகும். பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள சுமார் 300,000 குடும்பங்கள் இந்த வழக்கில் வென்றால் பயனடைவார்கள் என்பதால் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம், ஜாம்பியாவின் தாமிரச் சுரங்கப் பகுதியில் (சீன நிறுவனம் நடத்திய வருகிறது) உள்ள ஒரு கழிவு அணை உடைந்தன் காரணமாக பல மில்லியன் லிட்டர் நச்சுத் தன்மையுடைய அமிலக் கழிவுகள் நீர்வழிகளில் கலந்துவிடட்து . இந்தக் கழிவுகளால் ஏராளமான மீன்கள் செத்தன, குடிநீர் மாசுபட்டது, விவசாயப் பயிர்கள் அழிந்து போய்விட்டது. மக்கள் சிறுநீரில் ரத்தம் வருவது, நெஞ்சு இறுக்கம் போன்ற உடல்நலப் பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறார்கள்.
மக்கள் வழக்கு
இதனால் கொதித்து போன அந்த பகுதி மக்கள், சீன அரசு நிறுவனங்களின் துணை நிறுவனங்களான சினோ மெட்டல்ஸ் லீச் ஜாம்பியா மற்றும் என்.எஃப்.சி ஆப்பிரிக்கா மைனிங் ஆகிய இரண்டு நிறுவனங்கள் மீது வழக்கு தொடர்ந்தனர். அவர்கள் தங்கள் மனுவில், அணை உடைந்ததற்கு பொறியியல் மற்றும் கட்டுமான குறைபாடுகள் பற்றியும், நிர்வாகச் சீர்கேடு பற்றியும் கூறியுள்ளனர்.
சீன நிறுவனம் பதில்
இதற்கு சம்பந்தப்பட்ட சினோ மெட்டல்ஸ் நிறுவனம் எதுவும் பதில் அளிக்கவில்லை. அதேநேரம் சீன நிறுவனம் கழிவுநீர் கலந்து பற்றி வெளியிட்ட பதிவில், சுமார் 50,000 கன மீட்டர் கழிவுகள் கசிந்தது என்றும், அது சில மணி நேரங்களிலேயே கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டோம் என்றும் கூறியது. ஆனால் அதனை ஏற்காத மக்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
அமெரிக்கா எச்சரிக்கை
இதனிடையே அமெரிக்கத் தூதரம் இதுபற்றி எச்சரிக்கையும் விடுத்தது. இதன்படி. அணை உடைந்த இடத்திலிருந்து காற்று வழியாகவும் நச்சுப் பொருட்கள் பரவ வாய்ப்பு இருப்பதாகக் கூறி, தமது ஊழியர்களை அந்தப் பகுதியிலிருந்து உடனடியாக வெளியேற உத்தரவிட்டது. இதனிடையே இதுபற்றி ஜாம்பியா அரசு அளித்த பதிலில், பாளர், சுகாதார அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்றும், "அச்சப்படத் தேவையில்லை" என்றும் கூறியது.
80 பில்லியன் டாலர் இழப்பீடு கேட்டு வழக்கு
எனினும் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், "சுற்றுச்சூழல் சீரமைப்பு மற்றும் முழு இழப்பீட்டிற்காக" $80 பில்லியனை ஜாம்பியா அரசு நிர்வகிக்கும் கணக்கில் செலுத்த வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி உதவி வழங்குவதற்காக $20 மில்லியன் அவசரகால நிதியை அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். அதாவது சுமார் 7 லட்சம் கோடி அளவிற்கு இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளனர்.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்!












Click it and Unblock the Notifications