For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆர்ட் கால-ரி

By Staff
Google Oneindia Tamil News

வானவில் தான் மனிதனுக்கு முதல் ஓவியம். ஆதிகால மனிதனுக்கு இந்த வர்ணஜாலம்மகிழ்ச்சியைத் கொடுத்தது.

அடுத்தடுத்து இயற்கையின் வண்ண அழகு செயற்கைக்கு வந்தபோது அதுவும் கூடமகிழ்ச்சிதான். ஒரே மாதியான இந்த அழகு ஓவியங்களைப் பார்த்து போர் அடித்துப்போகமல் இருக்க, மாடர்ன் ஆர்ட் கலை உருவானது.

இதை அடிப்படையாகக் கொண்டு, வானவில் 2000 என்ற ஓவியக் கண்காட்சிகோவையில் நடந்தது. 3 நாள் நடந்த இக் கண்காட்சிக்கு சித்ர கலா அகாடமி ஏற்பாடுசெய்திருந்தது.

இதில் இடம் பெற்றிருந்த ஓவியங்கள் பல கண்காட்சியிலேயே விற்றுத் தீர்ந்தது. இந்தக்கண்காட்சியில், ஜீவா என்பவரின் ஓவியங்கள் பார்வையாளர்களைக் கவர்ந்தன.

Lady Weaving-Artஅன்னையின் பிரார்த்தனை என்ற தலைப்பில் இடம் பெற்ற மதர் தெரசாவின் ஓவியம்அருமையாக இருந்தது. உலக மக்களின் நல வாழ்வுக்கு தினமும் பிரார்த்தனை செய்துவந்த அன்னையின் பிரார்த்தனை எப்படி இருக்கும் என்பதை ஓவியம் விளக்குகிறது.கருப்பு வெள்ளையில் இருந்தாலும், உணர்வுப் பூர்வமான இந்த ஓவியம், சற்றுவித்தியாசமானது தான்.

"கிளப் பேச்சுக் கேட்கவா என்ற வர்ணமயமான ஓவியத்தில் வண்ணங்களின் கலவைதான் அதிகம். திட்டுத் திட்டாக வண்ணங்களை பரப்பி, பிளேடினால் கீறி கோடுகளைஉண்டாக்கி உருவம் காட்டப்பட்டு உருவாக்கப்பட்டது தான் இந்த ஓவியம். கிளிக்கும்பெண்களுக்கும் என்னத் தொடர்பு?. இந்த கிளியின் பேச்சு ஒருவேளை காதலனின்தூதாக இருக்குமோ? நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள். "கிளிப் பேச்சு சரியானபிளேடு ஓவியம் தான்.

Modern Artமலையோரக் கிராமம் ஒன்றின் சூழலை சித்தரிக்கிறது இன்னொரு ஓவியம். இதுவும்ஜீவாவின் கைவரிசைதான். மலையில் கிடைக்கும் மூங்கில்களில் கூடை முடையும்பெண்ணின் வாழ்க்கையை விளக்குகிறது இந்த ஓவியம்.

கோவை சித்ர கலா அகாடமியின் தலைவராக உள்ள ஜீவாவின் ஓவியங்கள் பல்வேறுகண்காட்சிகளில் இடம் பெற்றுள்ளன.

கன்னியாகுமரியில் வள்ளுவருக்கு சிலை வைத்தபோது, நடந்த ஓவியக் கண்காட்சியில்133 ஓவியர்கள் தேர்வு பெற்றனர். இவர்களில் ஜீவாவும் ஒருவர்.

ஓவியங்கள் ஜீவாவிற்கு கைவந்த கலை. ஒரு உருவத்தையோ, மனிதர்களையோ,மலர்களையோ சில நிமிடங்களில் வரைந்து அசத்தக் கூடியவர். கண்காட்சிக்குவந்திருந்த ஒரு சிலரை அந்த இடத்திலேயே வரைந்து காண்பித்துஅமர்க்களப்படுத்தினார்.

வண்ணங்களில் ஜாலம் செய்வது பெரிதல்ல. பார்க்கும் விழிகளைக் கவர வேண்டும்.அதை ஜீவா செய்துள்ளார்.

வெல்டன் ஜீவா!

ஆர்ட் காலரியை அலங்கரித்த முந்தைய கட்டுரைகள்:

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X