• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வேளாண்மையும் ஆறுகள் இணைப்பும்

By Staff
|
Rivers

தமிழர்களின் இன்றைய நிலையைப் படம் பிடித்துக் காட்டும் இரண்டு செய்திகளை இத்தலைப்பு கொண்டுள்ளது.வேளாண்மை - தமிழன் ஏமாந்த வரலாற்றையும், ஆறுகள் இணைப்பு # தமிழன் ஏமாற்றப்படுகின்ற வரலாற்றையும் கூறுகின்றன.

சங்க காலம் முதலே, தமிழர்களின் வாழ்விலும், நாட்டின் பொருளாதாரத்திலும் வேளாண்மை மையம் கொண்டிருப்பதைஇரப்போர் சுற்றம் புறப்போர் கொற்றம்உழவிடை விளைப் போர்என்ற சிலப்பதிகார வரிகள் தெரிவிக்கின்றன.

சங்ககாலத் தமிழ்ச் சமுதாயம் சமகாலத்திய பிற சமுதாயங்களை விட மேம்பட்டு விளங்கியமைக்குக் காரணம், அவர்களின் தொழில்நுட்பத்தின், மண்வளம், நீர்வளம் மற்றும் பருவ காலங்களுக்கேற்ப பயிர்களை சரியான உழவியல் தொழில் நுட்பத்துடன்பயிரிட்டனர்.

வேளாண்மை வளர்ச்சிக்குத் தண்ணீரே ஆதாரம். ஆனால் மழை பெய்யும் நாட்களைக் குறைவாகக் கொண்ட தமிழ் நாட்டில்,மழை நீரைச் சேமிக்க ஏரிகள், குளங்கள் அமைத்து, ஆற்றுக்கால், ஊற்றுக்கால் தோண்டி, அணைக்கட்டுக்கள் கட்டி சிறந்த பாசனவசதிகளை ஏற்படுத்திய தொழில்நுட்பம் இன்றளவும் ஏற்புடையனவாக இருப்பதே அவற்றின் சிறப்புக்குச் சான்று.

கல்வெட்டுச் செய்திகள் மூலம், சோழநாட்டின் நெல்விளைச்சலைக் கொண்டே சோழப் பேரரசர்கள் ஆட்சி நடத்தினர். போர்புரிந்தனர். உலகம் சுற்றினர். நெல் விளைச்சலில் தமிழர்கள் சிறந்து விளங்கினார்கள் என்பதே ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில்ஏக்கருக்கு 2 டன் விளைந்ததாக ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

தாய்லாந்து நாட்டில் உணவு உற்பத்தியை அதிகரிக்க தக்க ஆலோசனைகளைக் கூற 4 நெல் சாகுபடி மற்றும் பாசனவல்லுனர்களை ஐ.நா. நிறுவனம் 1948இல் அனுப்பியது. அதில் 3 பேர் தமிழர்கள். ஒருவர் வங்காளி. தாய்லாந்து மக்கள் நேரடிநெல் விதைப்பதை மட்டுமே அறிந்தவர்கள். நெல் அறுவடை செய்தபின் வைக்கோலை வயலில் எரித்து விடுவார்கள்.

இங்கிருந்து சென்ற வல்லுனர்கள், தமிழர்களின் வழக்கமான பசுந்தாள் பயிரிட்டு மடித்துவிடும் முறையையும், நாற்றங்கால்விதைத்து, பிறகு நாற்றைப் பிடுங்கி வயல் நடும் முறையையும் அறிமுகப்படுத்தினர். இந்த முறை சாகுபடியில் ஏக்கருக்கு 2டன் விளைந்த நிலங்களில், ஏக்கருக்கு 4 டன் விளைந்தது. தாய்லாந்து விவசாயிகள் இப்படி நெல் சாகுபடி செய்யும் முறைக்கு""மதராஸ் முறை சாகுபடி என்று பெயரிட்டனர்.

ஆனால் தமிழ்நாட்டில் நிகழ்ந்தது வேறு. 1960களில் தமிழக வேளாண்மையில் பசுமைப் புரட்சி திணிக்கப்பட்டது. அமெரிக்கநாடாளுமன்றத்தில் பசுமைப் புரட்சியைப் பற்றி 1960களில் விவாதம் நடந்தது. சார்லஸ் எஸ். டென்னிசன் என்பவர்,""வியட்நாமின் போரினால் முடங்கிப் போன அமெரிக்க பொருளாதாரம், பசுமைப் புரட்சியினால் மீண்டும் உயிர் பெறும்.இரசாயன உரத் தொழிற்சாலைகளுக்கு புதிய உத்வேகம் பிறக்கும். ஆசியாவில் உணவு உற்பத்தியை அதிகரிப்பதால், ஆசியமக்கள் கம்யூனிச பாதைக்குச் செல்வதை தடுக்க முடியும். எனவே அமெரிக்க வெளியுறவுக் கொள்கையில் பசுமைப் புரட்சித்திட்டத்திற்கு மிக முக்கிய இடம் அளிக்க வேண்டும் என்று பேசினார். மிகத் தெளிவாக யாருக்காக பசுமைப் புரட்சி என்பதுபுரிகிறதா?

நமது வேளாண் மக்களுக்கு, இரசாயன உரம், உயர் விளைச்சல் இரக விதைகள் ஆகியவற்றின் மூலம் தற்போதைய உணவுஉற்பத்தியை அதிகரிக்க முடியும் என்று பசுமைப் புரட்சியாளர்கள் உறுதியளித்தனர். உண்மையில் ""உயர் விளைச்சல் இரகவிதைகள் என்று ஏமாற்றுப் பெயர் சூட்டப்பட்ட விதைகள் எப்போதும் எங்கும் அதிக விளைச்சல் தருபவை அல்ல. தட்பவெட்பசூழல் மற்றும் தேவையான நேரத்தில் தேவையான அளவு தண்ணீர் தரப்பட்டால் தான் விளைச்சல் அதிகரிக்கும். அதே நேரத்தில்இந்த இரகப் பயிர்கள் பூச்சி தாக்குதலுக்கு எளிதில் இலக்காகுபவை.

1960-80 வரையிலான பசுமைப் புரட்சி காலத்தில் உணவு உற்பத்தி 2 முதல் 3 மடங்கு அதிகரித்தது. எப்படி? இதேகாலக்கட்டத்தில் ஏராளமான நீர்ப்பாசனத் திட்டங்கள் உருவாக்கப்பட்டன. பாசனப் பரப்பு பன்மடங்கு விரிவடைந்தது. ஒருபோக நிலங்கள் இருபோக நிலங்களாக மாறின. இதன் காரணமாகவே மொத்த உணவு உற்பத்தி அதிகரித்தது.உயர் விளைச்சல் இரகங்களும், இரசாயன உரங்களும், வானம் பார்த்த நிலங்களில் பசுமைப் புரட்சியை ஏற்படுத்தவில்லை.தண்ணீர் மிக முக்கிய இடு பொருளானது. கால்வாயில் உரிய நேரத்தில் தண்ணீர் வரவில்லை என்றால், பயிர் விளைச்சல்பாதிக்கும். போட்ட முதல் கிடைக்காது. இந்த நிலைமையில் விவசாயிகள் பெருமளவில் கிணறுகள் தோண்டினர். அவர்களுக்குகடன் கொடுத்து கிணறுகள் வெட்டத் தூண்டப்பட்டது.

1960 இல் 4300 இறவை எந்திரங்கள் இருந்த தமிழ்நாட்டில் 2000இல் 16 இலட்சம் இறவை எந்திரங்கள் இறைக்க இறைக்கஊறுவதற்கு நிலத்தடி நீர் வற்றாத சுரங்கம் அல்ல. எனவே விவசாயிகள் தங்கள் கிணறு வற்றிப்போனதும், நிலத்தை விற்றனர்அல்லது நிலத்தடி நீரைக் காசு கொடுத்து வாங்கினார்கள். இப்படித் தவிக்கும் போது, தண்ணீர் கிடைக்க ஒரே வழி ""ஆறுகள்இணைப்பு என்று ஒரு கானல் நீர் காட்டப்படுகிறது.

பசுமைப் புரட்சியில் ஏமாந்த தமிழன், இப்போது ஆறுகள் இணைந்தால் எல்லாப் பிரச்னைகளும் தீரும் என்று நம்புகிறான்.கங்கை#காவிரி இணைப்புத் திட்டத்தைப் பற்றி உண்மையான தகவல்களை யாரும் சொல்வதில்லை. தெரியாமலேயேஅதைப்பற்றிப் பேசுகிறோம் நம்புகிறோம்.

நமது நாட்டில் சில ஆண்டுகளுக்கு முன்னால், பட்டினிச் சாவுகள் நிகழ்ந்தன. அப்போது நமது அரசு சேமிப்புக் கிடங்குகளில்ஏராளமான தானியங்கள் இருந்தன. இதைக் குறித்து உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்குத் தொடரப்பட்டது.

""தானியக் கையிருப்பு விநியோகத்தைச் சீரமைத்து, ஆண்டுதோறும் தானியங்கள் கெட்டு வீணாகாமல் இருக்க, அவற்றைவறுமைக் கோட்டிற்குக் கீழ்நிலையில் உள்ளவர்களுக்கு விநியோகம் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.ஆண்டுகள் பல ஆகியும் ஒன்றும் நடக்கவில்லை. சில நாட்களுக்கு முன் தானிய இருப்பின் பெருமை ஒரு பக்கத்திலும்,பட்டினிச் சாவு மறு பக்கத்திலும் செய்தித்தாள்கள் தெரிவித்தன.

2002ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றம் நதிநீர் இணைப்பைப் பற்றி அனைத்து மாநில அரசுகளையும் கருத்துக் கோரியது. 2002அக்டோபர் 31ஆம் தேதி, நீதிபதிகள் "மத்திய அரசு, மாநில அரசு இரண்டைத் தவிர வேறு யாரும் கருத்து தெரிவிக்காததால்,அந்த அரசுகளுக்கு இத்திட்டத்தின் மீது எதிர்ப்பு இல்லை என்று கருதி, 10 ஆண்டுகளில் இந்திய ஆறுகள் இணைக்கப்படவேண்டும் என்று உத்தரவிட்டனர்.

டிசம்பர் 13ஆம் தேதி இந்திய நதிகள் இணைக்கப்படும் என்ற முடிவை மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. டிசம்பர்16ஆம் தேதி சுரேஷ் பிரபு தலைமையில் உயர்மட்ட செயற்குழு அமைக்கப்பட்டது.அக்குழு 2003 சனவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களில் 3 கூட்டங்கள் நடத்தியது. 3ஆவது கூட்டத்தில் 30 ஆறுகளை இணைக்கும்மாபெரும் திட்டத்தை அறிவித்தது. 5,60,000 கோடி செலவில் 31-12-2016க்குள் நிறைவேற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்திய வரலாற்றிலேயே நீதிமன்ற உத்தரவினை மிகத் துரிதமாக அரசு செயல்படுத்தியது இதுவேயாகும். இதனாலேயேஏராளமான சந்தேகங்கள் எழுகின்றன.

அதற்கான நிதியை எப்படித் திரட்டப்போகிறார்கள்? தனியார் முதலீடு வரவேற்கப்படும் என்று கூறப்படுகிறது. அதாவது நமதுஆறுகள் பன்னாட்டு வணிக நிறுவனங்களின் உரிமையாகப் போகின்றனவா?

முக்கியமான கங்கை, பிரம்மபுத்திரா ஆறுகள் பல நாடுகளுக்கு ஊடாகச் செல்பவை. அந்த நாடுகளின் கருத்துக்கோரப்பட்டதா? நேபாளம், சீனா, வங்காளதேசம் ஆகிய நாடுகள் எதிர்க்கின்றன. வங்காள தேசம் தனது எதிர்பை அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துவிட்டது.

தமிழ்நாடு, அரியானா இரண்டு மாநிலங்கள் மட்டுமே இத்திட்டத்தை வரவேற்றுள்ளன. மற்ற மாநிலங்கள் எதிர்க்கின்றன. கங்கைஆற்று வடிமுகத்தில் ஆண்டுக்கு ஒருவருக்குக் கிடைக்கும் தண்ணீர் 1450 கன மீட்டர். அளவு கோள்படி இது தண்ணீர்ப்பற்றாக்குறை ஆற்றுப்படுகை. அப்படுகையில் உள்ள மக்களுக்கு தேவையான 1700 கன மீட்டர் கிடைப்பதில்லை.அவர்களுடைய தேவையைப் பூர்த்தி செய்யாமல் அங்கிருந்து எப்படி தண்ணீரைத் திருப்ப முடியும்?

இதே போல் தான் ஒரிசாவின் தேவையைப் பூர்த்தி செய்யாமல் மகாநதியை திருப்ப முடியாது. தொழில்நுட்ப ரீதியாகவும்ஏராளமான கேள்விகளுக்கு பதில் இல்லை. வெள்ளத்தைத் தடுப்பதற்காக இத்திட்டம் என்பது அபத்தம். பிரம்மபுத்திராவில்வினாடிக்கு 14 இலட்சம் கன அடிகள் வெள்ளம் வரும். இணைப்புக் கால்வாயின் கொள்ளளவு வினாடிக்கு 50,000 கன அடிமட்டுமே, மீதம் உள்ள தண்ணீர் வெள்ளமாகவே இருக்கும்.

நீர்த்தேக்கங்கள் அமைப்பதனால் ஏற்படும் விளைவுகள் பற்றி ஆய்வுகள் செய்யப்படவில்லை. கால்வாய் செல்லும் பாதையும்ஆய்வு செய்யப்படவில்லை. முறையான ஆய்வு செய்யவே பல ஆண்டுகள் பிடிக்கும். அதன் பிறகு கட்டுமானப் பணிகள்,எப்படி 2016இல் இத்திட்டம் முடியும்?

இத்திட்டத்தால் தமிழ்நாட்டுக்கு 273 டி.எம்.சி கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இந்த 273 டி.எம்.சிக்காக எத்தனை கோடியைதமிழகம் கொடுக்க வேண்டுமோ?

நகர்ப்புறங்களில் வீடுகள் கட்டவோ அல்லது பள்ளிகள், மருத்துவமனைகள், பேருந்து நிலையம் கட்டவோ ஏரிகளும், ஏரிகள்சார்ந்த இடங்களும் ஆக்கிரமிக்கப்படுகின்றன. யாரும் கேட்காத காரணத்தால் தனிப்பட்டவர்களும் ஆக்கிரமிக்கின்றனர்.இவ்வகையில் நீர் நிலைகள் எண்ணிக்கையில் குறைந்து வருகின்றன. இவை தடுக்கப்பட வேண்டும்.

முன் யோசனையற்ற கட்டுமானப்பணிகளால் நீரோட்ட வழிகள் அடைக்கப்பட்டு தண்ணீர் திசை திருப்பி விடப்படுவதால்மீதமிருக்கும் நீர் நிலைகளுக்கு நீர் வரத்து பாதிக்கப்படுகின்றது. நமது தமிழ்நாட்டில் உள்ள ஏரிகளின் மொத்தக் கொள்ளவு 230டி.எம்.சி. ஏரிகளை மீண்டும் உயிரோட்டமுள்ளதாகச் செய்தாலே நமது தண்ணீர் பிரச்னைத் தீரும்.

ஆண்டுக்கு 500 கோடி வீதம் செலவு செய்து 10 ஆண்டுகளில் அனைத்து ஏரிகளையும் புணரமைத்து, மழை நீரை போதுமானஅளவு சேமிக்கும்படி செய்ய முடியும். விளைச்சலை அதிகரிப்பதன் மூலம், சிக்கன நீர் பயன்பாட்டின் மூலம், உணவுஉற்பத்தியை அதிகரித்து, மீதமாகின்ற தண்ணீரைப் பிற தேவைகளுக்குப் பயன்படுத்தலாம்.

இத்தனைக்கும் பிறகும் ஆறுகள் இணைப்போம் என்று ஏமாறப் போகிறீர்களா?

படைப்புகளை அனுப்ப:

கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ak.khan@greynium.com

படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும். 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X