• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சுற்றுச் சூழல் . நாடாள்வோர். மீடியா. சுநாமீ!

By Staff
|

ஒவ்வொரு எழுத்துக்குப் பின்னாலும் நமது சமூகத்தின் மூன்று முக்கியமான பிரிவுகளும் அவற்றின் சீரழிவுகளும் அடங்கியிருக்கின்றன.

கடல் கொந்தளிப்பின் பேரழிவில் உயிரிழந்த ஆயிரக்கணக்கானோரிலும் வீடிழந்த லட்சக்கணக்கானோரிலும் பெரும்பாலோர் கடல் தொழிலாளிகளானமீனவர்கள்தான். பழவேற்காடு முதல் குமரி முனை வரை குப்பம் குப்பமாகக் காணாமல் போனது ஏன் ? உச்ச நீதிமன்றம் கடல் அலைப் பகுதியிலிருந்துஅரை கிலோ மீட்டர் வரை கரையில் எந்தக் கட்டடமும் கட்டக் கூடாது என்று அளித்த உத்தரவை மத்திய அரசும் மாநில அரசுகளும் துளியும்மதிக்காததே காரணம். பண முதலைகளின் கடலோர பங்களாக்களுக்காகவும் பணக்கார சுற்றுலாப்பயணிகளின் கேளிக்கைக்கான கடல்புரஓட்டல்களுக்காகவும் மீனவர் குப்பங்கள் எப்போதோ விழுங்கப்பட்டு விட்டன. அவர்கள் வாழ்ந்த இடங்களை விட்டு மேலும் கடலின் விளிம்புக்கருகேசென்று வசிக்கத் துரத்தப்பட்டார்கள்.

The scene in chennai Kasimedu

அப்படி நடந்திராமல் இருந்திருந்தால், இல்லாவிட்டால் தற்போது உயிர் சேதமும் பொருள் சேதமும் மிகக் கணிசமாகக் குறைந்திருக்கும்.

கல்பாக்கமும் கூடன்குளமும் சேது கால்வாயும் எப்படிப்பட்ட எதிர்கால ஆபத்துகள் என்பதை இந்த சுநாமீ உணர்த்தியிருக்கிறது. கதிர்வீச்சு பற்றிவழக்கமாக பொய்யும் அரை உண்மைகளும் மட்டுமே பேசும் அணு சக்தி உயர் அதிகாரிகளால் கூட, கல்பாக்க அணு உலைக்குள் கடல் புகுந்ததைமறைக்க முடியவில்லை. புதிதாகக் கட்டப்பட்டு வரும் உலையில் எதிர்காலத்தில் கதிரியக்கம் நடத்தப்பட வேண்டிய மையப்பகுதிக் கட்டுமானம் கூட கடல்தண்னீரில் மூழ்கியிருக்கிறது. கூடன்குளம் உலையிலிருந்து பல கிலோ மீட்டர் தூரம் கடலுக்கு வெட்டப்பட்டுள்ள கால்வாய் வழியே கடல் நீர் புகுந்துதான்வழியெங்கும் ஏழைகள் வாழ்க்கையை அழித்திருக்கிறது.

சேது கால்வாய் திட்டத்தை நிறைவேற்றுவது பற்றி இனியும் தீவிரம் காட்டுவோர் யாரானாலும், அவர்கள் மக்கள் விரோதிகள் என்றேவரலாற்றில் குறிக்கப்படுவார்கள். சேது கால்வாய் வெட்டப்பட வேண்டிய பகுதியின் இருபுறமும் சுநாமீ பேரழிவு செய்தது மட்டுமல்ல, கடலின் ஆழத்தில்சுநாமீயின் விளைவாக பல கணிசமான சுழிப்போக்கு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. மறு ஆய்வு செய்யாமல் கால்வாய் வெட்ட விரும்புகிறவன் நர மாமிசசுவையுடையவனாக மட்டுமே இருக்க முடியும். ஆயிரம் கோடி ரூபாய் செலவில் கடலுக்குள் வெட்டும் கால்வாயை ஒரு நொடியில் ஒரு சுநாமீயால் தூர்த்துவிடமுடியும்.

நாடாள்வோரின் அத்தனை கோர முகங்களையும் இந்த சுநாமீ இன்னொரு முறை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. மத்தியில் ஆட்சி செய்யும் தி.மு.கவும் ,மாநிலத்தில் ஆளும் அ.தி.மு.கவும் இந்த இயற்கைப் பேரழிவின்போதும் தங்கள் பிண அரசியலை மும்முரமாக நடத்துகின்றன. ஆயிரக்கணக்கானோர்இறந்திருக்கும் வேளையில் ஒரு தலைவர் இறந்து விட்டாரா இல்லையா என்ற சர்ச்சையை மீடியா விவாதிக்க வேண்டிய விஷயமாக மாற்றும் கேவலஆற்றல் இந்தக் கட்சிகளுக்கு மட்டுமே உரியது.

கோடிக்கனக்கான ரூபாய்களை இப்போது நிவாரண நிதிக்கு அள்ளித் தரும் இந்தக் கட்சிகளுக்கு இந்தப் பணம் முதலில் எப்படி சேர்ந்தது என்று நாம் யோசிக்கவேண்டும். தெருவெல்லாம் தேவைக்கு மேல் கார் ஓடும் விதத்தில் கார் கம்பெனிகள் கடை விரிக்க லைசன்ஸ் வழங்கிவிட்டு நெரிசலைக் குறைக்க பாலம்கட்டுவது, குடிநீரை கோலா கம்பெனிகள் உறிஞ்சிக் கொள்ள அனுமதி அளிப்பது, நதிகளை இணைக்க திட்டம் போடுவது, கடலிலே கால்வாய் வெட்டக்கற்பனை செய்வது என்று இவர்கள் போட்ட, போடும் திட்டங்களெல்லாம் சூழலைக் கெடுத்து மாசுபடுத்தி, அதில் தற்காலிக லாபம் சம்பாதிக்கும்காண்ட்டிராக்டர்களிடம் பங்கு பெறும் திட்டங்கள்தானே. பகலிலெல்லாம் கந்து வட்டி வாங்கிவிட்டு மாலையில் அன்னதானம் செய்யும் வர்த்தகரின்மனப்பான்மையிலேயே இந்த அரசியல் கட்சிகளும் இயங்குகின்றன.

The scene in Coastal area

நாடாளுவோர் பட்டியலில் இருப்போர் அரசியல் கட்சிகள் மட்டுமல்ல. அதிகார வர்க்கமும்தான். பல மாவட்டங்களில் கலெக்டர்களையும் காணவில்லைஎன்ற கூக்குரல் எழுந்திருக்கிறது. தங்கள் ஒரு நாள் ஊதியத்தை நிவாரணப் பணிக்கு அளிக்கிறோம் என்று ஊழியர் சங்கங்கள் அறிவிக்கிறபோதுதான்அவர்கள் தினசரி 5 கோடி ரூபாயை சம்பளமாகப் பெற்று வந்திருக்கிறார்கள் என்ற அதிர்ச்சித் தகவல் அன்றாடம் ஐம்பது ரூபாய்க்கு அல்லாடும்மீனவருக்குத் தெரிகிறது. தினசரி மக்கள் பணத்திலிருந்து செலவழிக்கும் இந்த 5 கோடி ரூபாய்க்கு விஸ்வாசமாக பதிலுக்கு மக்களுக்கு இதுவரை என்னசெய்திருக்கிறார்கள் என்ற சுயவிமர்சனம் இப்போதேனும் தேவை. இப்போதும் கூட நிவாரணத் தொகைகளும் பொருட்களும் எத்தனை சதவிகிதம் அசல்பாதிக்கப்பட்டவர்களுக்குப் போய் சேரும் என்று நினைத்துப் பார்க்கையில் சுநாமீக் கடலை விட அதிகமாக மனம் கொந்தளிக்கிறது.

இத்தனை பெரும் துயரம் நடக்கும்போது மீடியா எப்படி நடந்து கொள்கிறது என்பது வேதனையாக இருக்கிறது. ஒரு தமிழ் டி.வி சேனல் கூட தன் கேளிக்கைஒளிபரப்புகளை, அசட்டு சினிமா காமெடிகளை, காமாந்தகார பாடல் காட்சிகளை, தினசரி அழுகையில் காசு பார்க்கும் தொடர்களை ஒரு நாள் துக்கமாகக்கூட நிறுத்திக் கொள்ளவில்லை. மீடியா, குறிப்பாக டி.வி மீடியா, முதல் 12 மணி நேரம் செய்திகளை தெரிவிப்பதில் பொறுப்புணர்ச்சியே காட்டவில்லை. பெசண்ட்நகரிலும், திருவான்மியூரிலும் கடல் புகுந்தது என்று அறிவித்தால், சிவகங்கையிலிருக்கும் உறவினர்களும் நண்பர்களும் பதைத்துப் போய் தொலைபேச முயற்சித்ததில்தொலைபேசி அமைப்பே நிலைகுலைந்தது. இப்பகுதியில் பெசண்ட் நகர் ஊர் குப்பமும், கொட்டிவாக்கம் குப்பமும் மட்டுமே முழுமையாக அழிக்கப்பட்டன.அவர்களின் உறவினர்கள் தொலைபேசிகளை நாடும் நிலையில் இல்லை.

 bodies being buried togetherபத்திரமாக வீட்டில் உட்கார்ந்து அசட்டு டிவி நிகழ்ச்சிகளையும் இடையிடையே சுநாமீ காட்சிகளையும் பார்த்துக் கொண்டிருந்த வால்மீகி நகர், காமராஜ் நகர்,திருவள்ளுவர் நகர், பத்திரிகையாளர் காலனியினர் பாதிக்கப்படவில்லை. ஆனால் அவர்களின் உறவினர்கள்தான் தொலைபேசி அமைப்பையே நிலைகுலைத்தனர்.எழுபதுகளில் நான் நிருபராகப் பணியாற்றிய சமயங்களில் வெள்ளம், புயல் பாதிப்பில் ஒரு பகுதி பாதிக்கப்பட்டால், அதே பகுதியில் எந்தெந்த தெருக்கள்தப்பின என்று பெயரிட்டு எழுதுவது பத்திரிகைத் துறையின் தொழில் கடமையாக இருந்தது. வானொலியும் இந்த தர்மத்தை அன்று பின்பற்றியது. இன்றுமீடியா பரபரப்பை தவிர வேறெந்த அக்கறையும் கொள்வது அபூர்வமாக கிட்டும் வரமாகிவிட்டது. கலைஞர் கைதானபோது பத்து நிமிடத்துக்கொருமுறை அதை ஒளிபரப்பிய சன் டிவி, காலை முதல் மாலை வரை அவர் மரணச் செய்தி வதந்தி- போலீஸ் விஷமம் என்று சொல்லியதே தவிர, அவரைக்காட்டவில்லை. இரவில் காட்சியாகக் காட்டிய அவரைக் காலையிலேயே காட்டியிருந்தால் நாள் முழுக்க வளர்க்கப்பட்ட வதந்தியும் பொதுமக்கள்அலைக்கழிப்பும் தவிர்க்கப்பட்டிருக்கும்.

கடலின் சுநாமீகள் எப்போதேனும்தான் மக்களை அழிக்கின்றன. நம் சமூகத்தின் நிரந்தர சுனாமீகளான அரசியல் வாதிகளும் மீடியாவும் அன்றாடம் நம்சிந்தனைக் கடலோரத்தை அரித்துக் கொண்டிருக்கின்றன. இதற்கு தேவையான early warning system நம்மிடமே உண்டு என்பதுதான் ஒரேஆறுதல். அதுதான் நமது பகுத்தறிவு.

- ஞாநி(dheemtharikida@hotmail.com)

இவரது முந்தைய படைப்பு:

1. சபாஷ் ஜெ!

2. சங்கராச்சாரி-யார்?

3. சங்கர மடத்தை ஏன் காப்பாற்ற வேண்டும்?

4. மறதி அல்லது வெட்கங்கெட்டவர்கள்

5. ஜயேந்திரர் : மனித உரிமை, மீடியா பிரச்சினைகள்

6. ராஜ் டி.வி Vs தயாநிதி மாறன் : உள் நோக்கம் ?

7. எம்.எஸ்க்கு அஞ்சலி

ஞாநியை ஆசிரியராகக் கொண்ட தீம்தரிகிட இப்போது மாதமிருமுறையாக வெளிவருகிறது. சந்தா செலுத்த மற்றும் தொடர்பு கொள்ள விரும்பும் நண்பர்கள்பின்வரும் முகவரியில் முயலலாம்.

ஞானபாநு பதிப்பகம், 22, பத்திரிகையாளர் குடியிருப்பு, சென்னை - 600 041. தொலைபேசி: 91-44-24512446.

படைப்புகளை அனுப்ப:

கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ak.khan@greynium.com

படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more