கமலா சுரய்யா!
சர்ச்சைக்குரிய பிரபல எழுத்தாளர் கமலா சுரய்யாவின் வாழ்க்கை வரலாறுதிரைப்படமாகியுள்ளது.
மலையாள இலக்கிய உலகில், பெண்ணியல் எழுத்தாளர்களில் முதன்மையானஇடத்தைப் பெற்றிருப்பவர் டாக்டர் கமலா தாஸ். மாதவிக்குட்டி என்ற புனை பெயரில்மலையாளம் மற்றும் ஆங்கிலத்தில் எண்ணற்ற நூல்களை எழுதியுள்ளார்.
மனதில் பட்டதை அப்படியே எழுத்தில் வடித்து விடும் வழக்கம் கொண்டவர்என்பதால் பல முறை இவரது எழுத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.
என்ட கதா என்ற மலையாள நூல்தான் கமலாவை இலக்கிய உலகில் தனித்துவம்மிக்கவராக வெளிப்படுத்திய நூலாகும். தனது வாழ்க்கை வரலாற்றை இதில்பிரதிபலித்துள்ளார் கமலா.
தனது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை ஒளிவுமறைவில்லாமல் இதில்தெரிவித்துள்ளார் அவர். 1932ம் ஆண்டு கேரள மாநிலம் புன்னையூர்குளம் என்ற கிராமத்தில் பிறந்தவர் கமலா.இவரது தந்தை வி.எம். நிாயர், சர்வதேச நிதியத்தின் தலைவராக பணியாற்றியவர்.தனது எழுத்தாற்றலால் மலையாள இலக்கிய உலகில் தனி இடம் பிடித்துள்ள கமலா,ஆங்கிலத்திலும் புலமை பெற்றவர். மலையாள எழுத்துக்களைப் போலவே அவரது ஆங்கிலப் படைப்புகளும் சமஅளவிலான வரவேற்பையும், விமர்சனங்களையும் சம்பாதித்துள்ளன.கமலா சுரய்யா சில வருடங்களுக்கு முன்பு இஸ்லாம் மதத்திற்கு மாறினார். இதுவும் கூட அவரது எழுத்துக்களைப் போலவே பரபரப்பையும், சர்ச்சையையும்ஏற்படுத்தின. மதம் மாறிய பின்னர் தனது பெயரை கமலா சுரய்யா என்று மாற்றிக்கொண்டார். சமீபத்தில் லோக் சேவா அறக்கட்டளை என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்றைத்தொடங்கினார் கமலா. கைவிடப்பட்ட தாய்மார்களுக்கு இந்த அறக்கட்டளை புகலிடம்அளிக்கிறது. மேலும் மதச்சார்பின்மையை பிரசாரம் செய்யவும் இந்த அறக்கட்டைளமூலம் முயன்று வருகிறார் கமலா.
|
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?
என்ட கதா என்ற மலையாள நூல்தான் கமலாவை இலக்கிய உலகில் தனித்துவம்மிக்கவராக வெளிப்படுத்திய நூலாகும். தனது வாழ்க்கை வரலாற்றை இதில்பிரதிபலித்துள்ளார் கமலா.
மலையாளத்தில் உருவான அவரது படைப்புகளில் என்டே கதா, மதிலுகள், தனுப்பு,மனசி, பால்ய கால ஸ்மரனகள், மனோமி, வீண்டும் சில கதைகள், என்டே பாதகள்ஆகியவை பெரும் வரவேற்பையும், விமர்சனங்களையும் சந்தித்தவை.












Click it and Unblock the Notifications