For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மதம் மாறியவர்களுக்கு இடஒதுக்கீடு கூடாது!

By Staff
Google Oneindia Tamil News

Nedumaran""ஆடு நனைகிறதே என ஓநாய் கண்ணீர் வடித்த கதையாக ஆர்.எஸ்.எஸ். இயக்கம் ஆதித் தமிழர் நிலை குறித்துப் பின்கண்டவாறு கண்ணீர் வடித்துள்ளது.

""மதம் மாறிய தலித்துகளுக்கு இடஒதுக்கீடு அளிக்கக்கூடாது. அவ்வாறு அளித்தால் தலித்களுக்குப் பெரும் பாதிப்பு ஏற்படும்.தலித்துகளுக்குக் கிடைக்க வேண்டிய பயன்கள் அனைத்தும் மதம் மாறிய தலித்துகளுக்குச் சென்றுவிடும். வெளிநாட்டிலிருந்துநிதியுதவி பெறும் மதப் பிரச்சார அமைப்புகள் தான் மத மாற்றத்திற்கு வழி வகுக்கின்றன. தலித்துகளை மதம் மாற்றும் வேலையில்ஈடுபடுகின்றன.

14-3-2005 அன்று மங்களூல் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் உயர் அதிகாரப் பிரதிநிதிகள் சபையின் தேசிய மாநாடுமேற்கண்ட தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கிறது.

சமுதாயத்தில் ஒரு பகுதியினர் தீண்டத் தகாதவர்களாக ஒதுக்கிவைக்கப்படுவதற்கு அடிப்படைக் காரணமானவர்கள் யாரோஅவர்கள்தான் இப்படிக் கண்ணீர் வடிக்கிறார்கள்.

வர்ணாசிரம தருமத்தையும் அதன் அடிப் படையில் உருவான சாதி வேறுபாடு களையும் கட்டிக் காத்து பார்ப்பன மேலாதிக்கத்தைநிலைநாட்டுவதைக் தனது தலையாய குறிக்கோளாகக் கொண்டிருக்கும் பார்ப்பன பாசிச இயக்கமான ஆர்.எஸ்.எஸ். இயக்கம்தலித்துகளுக்காகக் குடம் குடமாகக் கண்ணீர் வடிப்பது ஏன்?

தலித் அமைப்புகள் எதுவும் இந்தக் கோரிக்கையை எழுப்பவில்லை. மதம் மாறிய தலித்துகளுக்கு இடஒதுக்கீடு அளிப்பதுதங்களைப் பாதிக்கும் என எந்த தலித் அமைப்பும் கூறவில்லை. ஏனெனில் அவர்களுக்கு உண்மை தெரியும். மதம் மாறியதனால்மட்டும் தங்கள் சகோதர தலித்துகளின் சமுதாய நிலைப்பாட்டில் எத்தகைய மாற்றம் ஏற்பட்டுவிடவில்லை என்பதையும்அவர்களின் நிலையும் தங்களைப் போன்றதே என்பதையும் அவர்கள் அறிவார்கள்.

ஆனால் தலித்துகளே கேட்காத கோரிக்கையை அவர்களுக்காக ஆர்.எஸ்.எஸ். எழுப்புகிறது. ஆடுகளைக் குறித்து ஓநாய்கவலைப்படுகிறது.

இந்து மதத்தில் தீண்டத்தகாதவர்களாக ஒதுக்கிவைக்கப்பட்டுள்ள தலித்துகள் தங்கள் மீது சுமத்தப்படும் சக இழிவையும்,ஒடுக்குமுறையையும் எதிர்த்தே மதம் மாறுகிறார்கள் என்ற உண்மையைத் திரையிட்டு மறைக்க ஆர்.எஸ்.எஸ் முயலுகிறது.

தீண்டாமை என்னும் நோய்க்குக் காரணமான நச்சுக்கிருமியான மனுதர்ம கோட்பாடுகளை ஒழித்துக்கட்ட ஆர்.எஸ்.எஸ். முன்வரவில்லை. ஏனெனில் மனு தர்மத்தை இந்தியாவின் அரசியல் சட்டமாக்க வேண்டும் என அது கூறுகிறது.

இந்து மதத்திலிருந்து தலித்துகளும், மற்றும் மலைவாழ் மக்களும், பிற ஒடுக்கப்பட்ட மக்களும் மதம் மாறினால் இந்து மதத்தின்பெரும்பான்மை குறைந்து போகும். தங்களது ஆதிக்கப் பிடி தளர்ந்து போகும் என பார்ப்பனியம் கருதுகிறது.

பார்ப்பனர்கள் ஒரு போதும் மதம் மாறப் போவதில்லை. ஏனெனில் இந்து மத படி நிலையில் அவர்கள் மேலே இருக் கிறார்கள்.

பொருளாதாரரீதியில் பின் தங்கிய பார்ப்பனர்கள் கூட சமுதாயரீதியில் மேலாதிக்கம் கொண்டவர்களாக விளங்கும்போது மதம்மாறி அந்த மேலாதிக்கத்தை இழந்துவிட அவர்கள் விரும்புவதில்லை.

தலித்துகளும் மற்றவர்களும் மதம் மாறுவதைத் தடுக்க அவர்கள் தொடர்ந்து முயற்சி செய்தே வருகிறார்கள். ஆங்கிலேயஆட்சிக்காலத்தில் மத மாற்றத்தடைச் சட்டத்தைக் கொண்டு வருமாறு வற்புறுத்த முடியவில்லை.

எனவே சுதேச சமஸ்தானங்களை ஆண்டு.. வந்த இந்து மன்னர்களை அணுகி மதமாற்றத்தடைச் சட்டங்களைக் கொண்டு வருமாறுதூண்டி அந்த முயற்சியில் ஓரளவு வெற்றியும் பெற்றார்கள்.

கீழ்க்கண்டவாறு பல சுதேச மன்னர்கள் ஆண்ட பகுதிகளில் சட்டங்கள் கொண்டு வரப்பட்டன.

-ரெய்க்கார் சமஸ்தான மதமாற்றத் தடைச்சட்டம் - 1936
-பாட்னா மத சுதந்திரச் சட்டம் - 1942
-சர்குஜா சமஸ்தான மதமாற்றத் தடைச்சட்டம் - 1945
-உதய்ப்பூர் சமஸ்தான மதமாற்றத் தடைச்சட்டம் - 1946
-மற்றும் பீகானீர், ஜோத்பூர், காலகண்டி, கோடா சமஸ்தானங்களிலும் இத்தகைய சட்டங்கள் கொண்டு வரப்பட்டன.

சுதந்திர இந்தியாவிலும் இந்துத்வா சக்திகள் இத்தகைய சட்டங்களைக் கொண்டுவர இடைவிடாது முயற்சி செய்தன. 1954,1960ஆம் ஆண்டுகளில் மதமாற்றத் தடைச் சட்டங்களைக் கொண்டு வர நாடாளுமன்றத்தில் செய்யப்பட்ட முயற்சிகள்போதுமான ஆதரவு இன்மையால் தோல்வி அடைந்தன.

1979ம் ஆண்டில் கொண்டுவரத் திட்டமிடப்பட்ட மத சுதந்திரச் சட்டத்திற்கு சிறுபான்மையினர் ஆணையம் கடும் எதிர்ப்புத்தெவித்ததால் கைவிடப்பட்டது.

ஆனால் வேறு சில மாநிலங்களில் காங்கிரசுக்கட்சிக்குள்ளேயே இந்து பழமைவாதிகளின் கையோங்கி இருந்ததால் அங்கெல்லாம்மதமாற்றத்தடைச் சட்டங்கள் கொண்டுவரப்பட்டன.

1967ம் ஆண்டு ஒரிஸ்ஸாவிலும், 1968ஆம் ஆண்டு மத்திய பிரதேசத்திலும், 1978ம் ஆண்டு அருணாசலப் பிரதேசத்திலும்இத்தகைய சட்டங்கள் கொண்டு வரப்பட்டன.

2002ம் ஆண்டில் தமிழ்நாட்டில் முதலமைச்சர் ஜெயலலிதா மதமாற்றத் தடைச் சட்டத்தைக் கொண்டு வந்தார். இந்து மதத்தில்இருந்து பிற மதங்களுக்கு மாற்ற முயலுபவர்களையும், மதம் மாறுபவர்களையும் மிரட்டும் வகையில் இச்சட்டம் அமைந்தது.

இந்து சமுதாயக் கட்டமைப்பிற்குள் தலித்துகளை ஒடுக்கி வைக்கும் சட்டமாக இது விளங்கியது. இந்துத்வா சக்திகளுக்குஅளிக்கப்பட்ட மிகப்பெரிய பரிசாக இச்சட்டம் விளங்கியது.

சங்கப்பரிவார அமைப்புகள் ஜெயலலிதாவிற்குப் பாராட்டுகளை அள்ளிக் குவித்தனர். ஜெயலலிதாவை பின்பற்றி பிறமாநிலங்களிலும் இச்சட்டத்தைக் கொண்டு வருமாறு வற்புறுத்தினார்கள். இந்த கால கட்டத்தில் மத்திய ஆட்சியில் பா.ஜ.க.கூட்டணியில் தி.மு.க. இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

சில மாதங்களில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி மாறியது. அ.தி.மு.கவுடன் பா.ஜ.க. கூட்டணி சேர்ந்தது.ஆனால் நாடாளுமன்றத் தேர்தலில் அடைந்த படுதோல்விக்குப் பிறகு ஜெயலலிதா மதமாற்றத் தடைச் சட்டத்தைக் கைகழுவினார்.

கடந்த காலத்தில் தலித் மக்கள் இந்து மதத்திலிருந்து வெளியேறாமல் தடுக்க பலவகையான சட்டங்கள் கொண்டு வரப்பட்டன.மதம் மாறுபவர்களுக்குப் பரம்பரைச் சொத்தில் பங்கு இல்லை, பிற மதத்தைச் சேர்ந்த குழந்தைகளைத் தத்து எடுக்க முடியாது,வாரிசுரிமை மதம் மாறியவர்களுக்கு இல்லை போன்ற விதிகளை உள்ளடக்கிய கீழ்க்கண்ட சட்டங்கள் கொண்டு வரப்பட்டன.

- இந்து மைனர் மற்றும் காப்பாளர் சட்டம் - 1956
- இந்து தத்து எடுக்கும் சட்டம் - 1956
- இந்து வாரிசுரிமைச் சட்டம் - 1955
- இந்து திருமணச் சட்டம் - 1955
தலித் மக்களை இந்து மதப்பிடியில் தொடர்ந்து வைத்திருக்க இச்சட்டங்கள் உதவின. இதன்மூலம் பார்ப்பன மேல்சாதி ஆதிக்கம்தனது பிடியை மேலும் இறுக்கிக் கொண்டது.

1981ம் ஆண்டு நெல்லை மாவட்டம் மீனாட்சிபுரத்தில் ஆதிதிராவிட மக்கள் மதம் மாறியபோது மத்தியப் பிரதேசம், ஒரிசா,அருணாசலப் பிரதேச சட்டங்களை முன் மாதியாகக் கொண்டு மதமாற்றத் தடைச்சட்டத்தை கொண்டு வரும்படி மத்திய அரசின்உள்துறை மாநில அரசுகளுக்கு ஆலோசனை வழங்கியது.

மீனாட்சிபுரம் மதமாற்றத்திற்கு எதிராக அகில இந்திய அளவில் இந்துத்வா சக்திகள் பெரும் கூப்பாடு போட்டதன் விளைவாகபிரதமர் இந்திராவின் அரசு இவ்வாறு செய்தது.

சென்ற 20ஆம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் இந்து மதத்திலிருந்து வெளியேறுபவர்களைத் தடுக்க ஆரிய சமாஜம்பெருமுயற்சி செய்தது. இந்து மதத்தில் இருந்து தலித்துகள் மதம் மாறி முஸ்லிம்கள், கிறிஸ்துவர்களுடன் சேர்ந்தால் தங்களதுபெரும்பான்மை போய்விடும். இந்துப் பேரரசு அமைக்கும் கனவு சிதறிப்போகும் என ஆரிய சமாஜம் கருதியது.

இதற்காக ""சுத்தி இயக்கத்தைத் தொடங்கி மதம் மாறியவர்களை மறுமதமாற்றம் செய்து இந்து மதத்திற்குள் கொண்டு வந்துசேர்த்தது. இவ்வாறு வந்தவர்களை இந்து மதத்தில் எந்த சாதிப்பிரிவில் சேர்ப்பது என்ற கேள்வி எழுந்த போது சிக்கல் ஏற்பட்டது.

மதம் மாறுவதற்கு முன்பு இந்து மதத்தில் எந்த சாதியில் அவர்கள் இருந்தார்களோ அந்த சாதியில் மட்டுமே அவர்களைச் சேர்க்கமுடியும் என பார்ப்பன பண்டிதர்கள் வரையறுத்தனர்.

மதம் மாறியவர்கள் இதை ஏற்கவில்லை. எனவே மீண்டும் இந்து மதத்திற்குத் திரும்பி சாதி இழிவுகளைச் சுமக்க மறுத்தனர்.எனவே ஆரிய சமாஜத்தின் ""சுத்தி இயக்கம் படுதோல்வி அடைந்தது.

ஆரிய சமாஜம் ஆற்றிவந்த பணியினைச் சங்கப்பரிவாரங்கள் தொடர் ந்து நடத்தி வந்தன. மறுமத மாற்றத்திற்கான அவர்களதுமுயற்சிகள் வெற்றி பெறவில்லை. அதனால் ஆத்திரமடைந்தவர்கள் மதம் மாறிய தலித்துகளுக்கு இட ஒதுக்கீடு அளிப்பதைத்தடைசெய்தால் மதமாற்றத்தைத் தடுத்துவிடடியும் என நினைக்கிறார்கள்.

இந்து சமுதாயத்தில் தலித் மக்களுக்கு எதிராக நடைபெறும் வன்கொடுமைகள் இன்னமும் தொடர்வதற்கு எதிராக ஆர்.எஸ்.எஸ்.அல்லது இந்துத்வா சக்திகள் எதுவும் செய்ய முன் வரவில்லை.

21ஆம் நூற்றாண்டில் அறிவியல் யுகம் நோக்கி உலகம் விரைந்து கொண்டிருக்கும் காலக்கட்டத்தில் தமிழ்நாட்டில் திண்ணியம்என்னும் சிற்றூல் தாழ்த்தப்பட்ட மகனை மலம் தின்ன வைத்த கொடுமை, திண்டுக்கல் அருகே மற்றொருவரை மூத்திரம் குடிக்கவைத்த அட்டூழியம் ஆகியவை காட்டுவது என்ன?

இந்தக் கொடுமைகளை அனுமதிக்கும் ஒரு மதத்திலிருந்து கொடுமைகளுக்கு ஆளானவர்கள் வெளியேறினால் அது நீதியின்பாற்பட்டதே, இத்தகைய நடை நாற்றம் பிடித்த, சாதி ஆணவத்தை தன்னுள்ளே கொண்டிருக்கும் ஒரு மதத்தில் இருந்துவெளியேறியவர்களைப் பழி வாங்கும் போக்கிலேயே இந்துத்வா சக்திகள் நடந்து கொள்கின்றன.

தலித்துகளுக்கு எதிராக இழைக்கப்படும் வன்கொடுமைகளைத் தடுத்து நிறுத்தவோ, குறைந்தபட்சம் கண்டிக்கவோ இந்துமடாதிபதிகளோ, சங்கப்பரிவாரத்தின் தலைவர்களோ முன் வரவில்லை. ஆனால் மதமாற்றத்திற்கு எதிரான கூப்பாடு போடமட்டும் இவர்கள் தயங்குவதில்லை.

இந்து மதத்திலிருந்து தலித்துகள் வெளியேறுவதைத் தடுக்க சட்டங்களால் முடியவில்லை என்பதையறிந்தபோது சட்டரீதியானசலுகைகளைப் பறிப்பதன் மூலம் மதம் மாறிய தலித்துகளைப் பழிவாங்கத் திட்டமிடுகிறார்கள். இந்த முயற்சியிலும் இவர்கள்வெல்லப்போவது இல்லை.

(இதற்கிடையே மதம் மாறிய தலித்துகளுக்கும் இட ஒதுக்கீட்டின் சலுகைகள் கிடைக்க வேண்டும் என்று கோரி தாக்கல்செய்யப்பட்ட பொது நல மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இதற்கு பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு இன்று (மார்ச் 11, 2005)நோட்டீஸ் அனுப்பியுள்ளது)

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X