• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆட்டோ..டோ...டோ

By Staff
|

சென்னை நகரவாசிகள் மற்ற மாநிலங்களுக்கு செல்லும் போது அதிசயமாகப்படும் செயல் ஆட்டோக்காரர்கள் மீட்டருக்குமேலாக காசு கேட்காதது. மற்ற ஊர்வாசிகள் சென்னை வந்தால் தோன்றும் செயல், ஆட்டோக்காரர்கள் மீட்டரேபோடாதது. போட்டாலும் மீட்டருக்கு மேலே போட்டுக் கொடுப்பா என்று கேட்பது. முன்பெல்லாம் ஆபீஸ் டூர் போய்விட்டுசென்னை திரும்பும்போது, சென்ட்ரலிலிருந்து வீட்டுக்கு செல்ல ஆடோ பிடிப்பது பிரம்மப்பிரயத்தனமாய் இருக்கும். கூசாமல் அருகில்இருக்கும் திருவல்லிக்கேணிக்கு 80 ரூபாய் கேட்டார் ஒரு ஆட்டோக்காரர்.

Autoஇந்தச் சிக்கல்களையெல்லாம் மீறி போக்குவரத்திற்கு ஆட்டோவையே நம்பி வாழும் (???) சென்னைவாசி நான். சமீபத்தில் என்நண்பன் நான் ஆட்டோவில் பயணிப்பவன் என்பதை அறிந்ததும் ." உலகத்திலேயே சிறந்த பேரம் பேசுபவனாய் நீ மாறியிருப்பாய் "என கமெண்ட் அடித்தான். நான் அப்படி மாறவில்லை. என்னைப் பொறுத்தவரை, மீட்டர் போட ஒப்புக் கொண்டு, மீட்டர்கில்க்ரிஸ்டின் கிரிக்கெட் ஸ்கோராக உயர்வதைப் பார்த்து, பல்ஸை அதிகரித்துக் கொள்வதில் அர்த்தமில்லை. ஏறும் முன்னேவாடகையை பேசிக் கொள்வது நல்லது.

எங்கே போகிறோம் என்ற வழியை யாரிடமாவது விசாரித்து வைத்துக் கொள்வதும் உசிதம். இல்லாவிடில் தெரிந்த மாதிரிநடிக்கவாவது தெரிய வேண்டும். தனது ஆட்டோவில் ஏறியவர் விவரம் தெரிந்தவரா? என்பதற்கு ஆட்டோக்காரர் ஒரு கேள்விகேட்பார். உதாரணத்திற்கு நுங்கம்பாக்கத்திலிருந்து நந்தனம் செல்ல, மவுண்ட் ரோட் வழியா போகலாமா சார்? என்பார்.வள்ளுவர் கோட்டம் வழியே போனால் தூரம் கம்மி. நீங்கள் சொல்லும் பதிலை வைத்து உங்களது ஜாதகத்தை கணித்துவிடுவார்கள்.

மீட்டருக்கு ஒத்துக் கொண்டீர்களென்றால் செல்ல வேண்டிய இடத்திற்கு எவ்வளவு அதிக தூரம் பயணம் செய்யமுடியுமோ அவ்வளவுபயணம் செய்யலாம். ஏறும் முன்னே பேரம் பேசிவிட்டால், குறுக்கு வழியில் எவ்வளவு சீக்கிரம் போக முடியுமோ அவ்வளவுசீக்கிரம் " குறுக்கு வலி" யுடன் போய்விடலாம். இதில் ஒரே அசெளகரியம், அண்ணாநகர் மூன்றாவது தெரு என்றால் தெருவில்நுழைந்தவுடன் நாம் இறங்குமிடம் வந்துவிட வேண்டுமென ஆட்டோக்காரர் எதிர்பார்ப்பார் . எங்க சார்? எங்க சார்? என்றுகேட்டுக் கொண்டே, பள்ளிக்கு கிளம்பும் எல். கே.ஜி குழந்தையாய் மெதுவாக ஆட்டோ ஊரும். "வாங்கின காசுக்கு சீக்கிரம்போய்யா" என எரிச்சல் வரும்.

சென்னையில் மட்டும் ஏனிந்த நிலைமை? மும்பை, பெங்களூரில் இந்நிலைமை இல்லை. இத்தனைக்கும் சென்னையில்தேவைக்கதிகமான ஆட்டோக்கள் ஓடுகின்றன. பொருளாதாரத் தத்துவத்தின் படி அதிகமான சப்ளை இருந்தால் விலை குறையும்.ஆனால் இங்கே இத்தத்துவம் செல்லுபடியாகவில்லை. சென்னையில் ஆட்டோ ஓட்டுநராக வேண்டுமென்றால் "பெர்மிட்" வாங்கவேண்டும். சென்னையில் அதிகாரப்பூர்வமாக 40,000 பெர்மிட்டுக்கள் அனுமதிக்கப் பட்டுள்ளன. ஆனால் ஒரு லட்சத்திற்கும்மேலாக ஆட்டோக்கள் ஓடுகிறது. இதற்கு காரணம் பெர்மிட்டுக்கள் கறுப்பு சந்தையில் விற்கப்படுவதுதான். சில ஆயிரங்கள்கொடுத்து வாங்கப்படும் பெர்மிட் 40 ஆயிரத்திற்கும் அதிகமான விலையில் விற்கப்படுகிறது. இந்தப் போலி பெர்மிட்டுக்களைவைத்து பலர் ஆட்டோக்களை வாங்கி ஓட்டுகிறார்கள். ஒரு பெர்மிட்டை வைத்தே பல ஆட்டோக்கள் ஓடுகின்றன.

சென்னை ஆட்டோக்களில் பெரும்பாலானவை வாடகை வண்டிகள். பல ஆட்டோக்கள் வக்கீல்களுக்கும்,போலிஸ்காரர்களுக்கும் சொந்தமானவை. இவர்களது வண்டிகளை வாடகைக்கு எடுத்து ஓட்டும் டிரைவர்கள் சட்ட திட்டங்களைமதிப்பதில்லை. வாடகை- வண்டியைப் பொறுத்து ஒரு நாளைக்கு 100 முதல் 120 ரூபாய் வரை. பெட்ரோல் செலவு எல்லாம் சேர்த்து ஒருநாளைக்கு 200 ரூபாய் சம்பாதிக்க குறைந்தது 400 ரூபாயாவது போணியாக வேண்டும். போதாக்குறைக்கு போலீஸ்காரர்கள் தரும்இன்னல்கள் வேறு. அனைத்து டாக்குமெண்டுகள் இருந்தாலும் தன்னுடைய "கலெக்க்ஷன்" டார்கெட்டை மீட் செய்ய கேஸ் புக்செய்வார்கள் போலீஸ்காரர்கள். இவ்வாறான பல தொழில் முறை சிக்கல்களும் இருக்கிறது ஆட்டோக்காரர்களுக்கு.

இவற்றையெல்லாம் மீறி தேவையான அளவு வருமானத்தை நேர்மையாகவே சம்பாதிக்க முடியும் என்பதை எனக்குத் தெரிந்த சிலஆட்டோக்காரர்கள் ஒப்புக் கொண்டுள்ளார்கள். இதற்கு ஆட்டோ சொந்த ஆட்டோவாக இருக்க வேண்டியது அவசியம்.இவர்களுக்கு நிதி வசதி செய்ய வங்கிகள் முன் வருவதில்லை. மார்வாடிகள் தரும் அதிக வட்டி கடன்கள் மூலமாகத்தான் ஆட்டோவாங்குகிறார்கள். வட்டி கட்டாவிட்டால் ஆட்டோ பிடுங்கப்படும்.இதைத் தவிர பிட்னெஸ் சர்டிபிக்கேட் வாங்க வருடத்திற்குபத்தாயிரம் ரூபாயாவது செலவழிக்க வேண்டியிருக்கும்.

என்னைப் பொறுத்த வரை பூனைக்கு யார் மணி கட்டுவது ? என்ற ரீதியில் ஆட்டோப் பிரச்சனை போய்க் கொண்டிருக்கிறது. கால்டாக்சிகள் வந்த பின் ஆட்டோக்காரர்களின் அராஜகம் சிறிதளவு குறைந்திருக்கிறது. இருந்தபோதிலும் ஆட்டோக்காரர்கள்என்றாலே ரவுடிகள் என்ற பிம்பத்தை முழுவதுமாக கலைக்க முடியவில்லை. கசப்பான நிஜம் என்னவென்றால் 20 சதவீதஆட்டோக்காரர்களே இவ்வாறான ரவுடிகளாக இருக்கிறார்கள். மற்றவர்கள் சம்பாத்தியத்திற்கு சிரமப்படும்சாமான்யர்களே.

அரசாங்கம் ஏற்கனவே இருக்கும் சட்ட திட்டங்களை முறையாக அமுல்படுத்தினாலே போதும் ஆட்டோ வாடகைபிரச்சனைகளுக்கு முடிவு கட்ட முடியும். ஆனால் அரசாங்கம் முன் வராது. அது வரை " இரக்கமுள்ள் மனசுக்காரன்டா" என்றுரஜினி பாடிவிட்டதால் மட்டும் ஆட்டோக்காரர்களைப் பற்றிய எண்ணம் மாறப் போவதில்லை.

- ராஜ்குமார்(poetkaraikudiraj@yahoo.com)

இவரது முந்தைய படைப்பு:

1.பொறிகலங்கிப் போன பொறியியல் கல்வி

2.மற்றுமொரு நிஜம்

3.நான் பார்த்த மோசமான படங்கள்

4.பல்லிடை அவல்

5.சாதீய ஆதிக்கங்கள்6.வளர்ச்சி

7.ஆழ்துளை கிணறுகள்

8.உயர்திணை

படைப்புகளை அனுப்ப:

கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: feedback@thatstamil.com

படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும். 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X