• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

சிறார்களின் நரகங்கள்!

By Staff
|

சிறுவர்கள் வசிக்கவே முடியாத நாடாக சூடான் மாறி வருவதாக ஐ.நா.தெரிவித்துள்ளது.

ஐ.நா. சபையின் யுனிசெப் அமைப்பு உலக நாடுகளில் சிறுவர்களின் நிலை குறித்தகருத்தாய்வு ஒன்றை நடத்தியது. இதில் உலகிலேயே சூடான் நாட்டில்தான் சிறுவர்கள்மிகவும் அபாயகரமான வாழ்க்கை வாழ்ந்து கொணடிருப்பதாக தெரிய வந்துள்ளது.

Sudan Childrenசூடான் தவிர உகாண்டா, காங்கோ ஆகிய ஆப்பிரிக்க நாடுகளிலும் சிறுவர்களின்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக தெரிய வந்துள்ளது.

வறுமை, பட்டினி உள்ளிட்ட காரணங்களால் அங்கு லட்சக்கணக்கான சிறுவர்,சிறுமியர் இறந்து கொண்டிருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்த மூன்று ஆப்பிரிக்க நாடுகளிலும் சிறுவர்களின் நிலை மிக மோசமாகஇருப்பதற்கு அங்கு நடந்து வரும் உள்நாட்டுப் போர்களே முக்கிய காரணம்.

சூடானின் டர்ஃபர் பகுதியில் கடந்த 3 வருடமாக உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது.இதனால் கிட்டத்தட்ட 11 லட்சம் சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Uganda Childrens சண்டையில் ஈடுபட்டு வரும் குழுக்கள் தங்களது போரில் சிறுவர்களையும்பயன்படுத்துகிறார்கள். சண்டை போடவோ அல்லது செக்ஸ் அடிமையாகவோ சிறுவர்,சிறுமியரை அவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

அவர்களுக்கு சரியாண உணவு தராமல் கொடுமைக்குள்ளாக்கி வருகின்றனர். இதனால்பட்டினிச் சாவுகள் கணக்கில் இல்லாமல் நடந்து வருகின்றன.

கருத்தாய்வின் ஒரு பகுதியாக ஹாலிவுட் நடிகையும், யுனிசெப் நிறுவனத்தின்நல்லெண்ணத் தூதருமான மியா ஃபாரோ, டர்ஃபர் பகுதியில் உள்ள முாம்களுக்குச்சென்று அங்குள்ளவர்களை சந்தித்துப் பேசினார். அங்கு கிட்டத்தட்ட 25 லட்சம் பேர்அகதிகளாக தங்கியுள்ளனர்.

Darfur Childrenஅங்குள்ள ஒவ்வொருவரின் குடும்பங்களும் சிதறிப் போய் விட்டன. கிராமங்கள்எல்லாம் எரிக்கப்பட்டுவிட்டன. முகாம்களில் தங்கியுள்ள பெண்கள், சிறுமிகள்தொடர்ந்து கற்பழிப்புகளுக்கு ஆளாகி வருகின்றனர் என்கிறார் மியா.

சூடான் நாட்டில் சிறுவர்களால் வசிக்கவே முடியாத அளவுக்கு நிலைமைமுற்றியுள்ளது.

சூடானைப் போல உகாண்டா, காங்கோ, சோமாலியா, பாலஸ்தீனம், ஆப்கானிஸ்தான்,செச்னியா, மியான்மர் ஆகிய நாடுகளிலும் சிறுவர்கள் நிலை படு மோசமாக உள்ளது.

Sudan Childrensஉகாண்டா ராணுவம்தான் சிறுவர்களை மிகவும் மோசமாக நடத்தி வருகிறது.சிறுவர்களை போர்க் களங்களில் பயன்படுத்துவதோடு அவர்கள் உடல் ரீதியாகவும்,மனரீதியாகவும் துன்புறுத்தப்படுகிறார்கள்.

போர்களில் பயன்படுத்துவதற்கும், தங்களது காம இச்சைகளை தீர்த்துக் கொள்ளவும்கிட்டத்தட்ட 25,000 சிறுவர்களை இவர்கள் பிடித்து வைத்துள்ளனர்.

தினமும் சராசரியாக 1,200 சிறுவர்கள் உயிரிழந்தும் வருவதுதான் கொடுமையிலும்கொடுமை.

Uganda Childrenகாங்கோ நாட்டு நிலைமை இன்னும் மோசம். பசியாலும், பட்டினியாலும் இங்குஆயிரக்கணக்கான சிறுவர்கள் தினசரி உயிரிழந்து வருகின்றனர்.

40 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த மாத இறுதியில் காங்கோவில் சுதந்திரமானமுறையில தேர்தல் நடைபெறவுள்ளது. ஆனால் அது எந்த அளவுக்கு சுதந்திரமானதாகஇருக்கும் என்பதை உறுதியாக கூற முடியாத அளவுக்கு நிலைமை உள்ளது.

பெண்களையும், சிறுமிகளையும் ராணுவத்தினரும், பல போர்க் குழுக்களும் தங்களதுகாம இச்சைக்குப் பலியாக்கி வருகின்றனர். கற்பழிப்புகள் வெகு சாதாரணமாகநடக்கின்றன. யாராலும் இதைத் தடுத்து நிறுத்த முடியாத அளவுக்கு நிலைமைகட்டுப்பாடின்றி போய்க் கொண்டிருக்கிறது.

Congo Childrens ஈராக்கில் உள்ள சிறுவர்களின் மனதில் அமெரிக்க ராணுவ வீரர்கள் குறித்தும்,உள்ளூரில் உள்ள தீவிரவாதக் குழுக்கள் குறித்தும் பெரும் பீதி நிலவுகிறது. எப்போதுஎன்ன நடக்கும் என்ற பீதியிலேயே அங்குள்ள பெண்களும், சிறுமிகளும் வாழ்ந்துவருகிறார்கள்.

பாலஸ்தீனத்தில் நீண்ட காலமாக நடந்து வரும் சண்டைகளால் அங்குள்ள சிறுவர்கள்மனரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

சோமாலியா, ஆப்கானிஸ்தானிலும் இதே நிலைதான். இங்குள்ள சிறுவர்கள் ஐந்துவயது வரை வாழ்ந்தால் அது பெரிய விஷயமாக கருதப்படுகிறது.

Congo Childrens சரியான மருத்துவ வசதி இல்லாமலும், சுகாதாரமான உணவு இல்லாமலும்ஆயிரக்கணக்கானோர் இறந்து வருகின்றனர்.

இந்தியாவில் இதுபோன்ற கொடூரமான நிலை இல்லை என்றாலும் கூட சிறு வயதில்வேலைபார்ப்போரின் எண்ணிக்கை அதிகம் உள்ளது.

கிட்டத்தட்ட 2 கோடி சிறுவர், சிறுமியர் சிறார் தொழிலாளர்களாக உள்ளனர். உலகஅளவில் சிறுவர்களின் நிலை மோசமாக உள்ள நாடுகளில் இந்தியா 6வது இடத்தில்உள்ளது குறிப்பிடத்தக்கது.

Indian Childrens உலகிலேயே அதிக அளவில் சிறார் தொழிலாளர்களைக் கொண்ட நாடாக இந்தியாதிகழ்கிறது. பள்ளிப் படிப்பை முடிக்காதவர்கள் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது.

மியான்மரில் ஆட்சிப் பொறுப்பில் உள்ள ராணுவம், சிறுவர்களை ராணுவத்தில்சேர்த்து அவர்களை ஆயுதம் ஏந்த வைத்துள்ளது. இதனால் அவர்கள் கல்வி அறிவுஇல்லாமலேயே வளரும் அபயாகரமான சூழ்நிலையில் உள்ளனர்.

இவ்வாறு யுனிசெப் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X