• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

துபாய் ஈமான் அமைப்பின் மீலாத் பேச்சு போட்டிகள்

By Staff
|

துபாய்: துபாயில், இந்திய முஸ்லீம் சங்கத்தின் (ஈமான்) சார்பில் இன்று பேச்சுப் போட்டிகள் நடைபெறவுள்ளன.

அமீரகத்தின் வணிகத் தலைநகராக விளங்கும் துபாயில் கால் நூற்றாண்டுக்கும் அதிகமாக கல்வி மற்றும் சமூக மேம்பாட்டுப் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ள இந்திய முஸ்லிம் அசோஷியேஷன் (ஈமான்) வருடந்தோறும் மீலாத் பெருவிழாவை முன்னிட்டு பேச்சுப் போட்டிகளை நடத்தி வருகிறது.

இதுகுறித்த விவரங்களை ஈமான் பொதுச்செயலாளர் குத்தாலம் ஏ.லியாக்கத் அலி வெளியிட்டுள்ளார். அதன் விவரம்:

29ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 4.00 மணிக்கு துபாய் தேரா லூத்தா பள்ளிவாசலில் (தமிழ் உணவகம் அருகில்) நடைபெற இருக்கிறது. ஆலிம் பெருமக்களுக்கான பேச்சுப் போட்டி நடைபெறும்.

உலக வாழ்வில் பெருமானாரின் இறுதி நாட்கள், இன்றைக்கும் பொருந்துகிற இறுதித் தூதரின் சொற்கள், மஹ்ஷர் வெளியில் மாநபியின் ஷபாஅத், அரபகம் அண்ணலாரின் வருகைக்கு முன்னரும், பின்னரும் ஆகிய தலைப்புகளில் ஏதேனும் ஒன்றில் பேசுவதற்கு தயார் நிலையில் வர வேண்டும்.

இப்போட்டியில் வெற்றி பெறுவோருக்கு எமிரேட்ஸ் விமான நிறுவனம் வழங்கும் துபாய்- சென்னை- துபாய் இலவச விமானப் பயணம், ஈடிஏ அஸ்கான் நிறுவனம் வழங்கும் திர்ஹம் 500 பரிசுக்கூப்பன்,

லேண்ட் மார்க் ஹோட்டல் வழங்கும் நான்கு கிராம் தங்க நாணயம், அல் ஹஸீனா தங்க நகை மாளிகை வழங்கும் திர்ஹம் 200 பரிசுக் கூப்பன், அல் மஸ்ரிக் இண்டர்நேஷனல் வழங்கும் ஜெனார்ட் கைக்கடிகாரம் ஆகியவை வழங்கப்படும்.

புனித குர்ஆன் மனனப் போட்டி:

மார்ச் 7ம் தேதி, வெள்ளிக்கிழமை மாலை 4.00 மணிக்கு அஸர் தொழுகைக்குப் பின்னர் துபாய் தேரா லூத்தா பள்ளிவாசலில் (தமிழ் உணவகம் அருகில்) நடைபெற இருக்கிறது.

புனித குர்ஆனை மனனம் செய்த ஹாபிழ்களுக்கான மனனப் போட்டியில் நாற்பது வயதிற்கு உட்பட்ட ஹாபிழ்கள் இவ்வரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இப்போட்டி இவ்வருடம் முதல் நடத்தப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது. இப்போட்டிக்கு விண்ணப்பிக்க இறுதிநாள் 29.02.2008.

இப்போட்டியில் வெற்றி பெறுவோருக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் வழங்கும் துபாய்- சென்னை- துபாய் இலவச விமானப் பயணம், ரஷாதி ஹஜ் சர்வீஸ் வழங்கும் இலவச புனித உம்ரா பயணம், துபாய் இந்தியா சில்க் ஹவுஸ் வழங்கும் திர்ஹம் 500 பரிசுக் கூப்பன், அல் ஹஸீனா தங்க நகை மாளிகை வழங்கும் திர்ஹம் 200 பரிசுக் கூப்பன், அல் மஸ்ரிக் இண்டர்நேஷனல் வழங்கும் ஜெனார்ட் கைக்கடிகாரம் ஆகியவை வழங்கப்படும்.

பொதுமக்கள், மாணவ, மாணவியருக்கான பேச்சுப் போட்டி

மார்ச் 14ம் தேதி, வெள்ளிக்கிழமை மாலை 4.00 மணிக்கு அஸர் தொழுகைக்குப் பின்னர் துபாய் அஸ்கான் சமுதாயக் கூடத்தில் (அல்முதினா லூலூ செண்டர் பின்புறம்) நடைபெற இருக்கிறது.

அகிலத்தின் அருட்கொடை அண்ணல் (ஸல்) அவர்கள், வேந்தர் நபிகளின் வருகை பற்றி வேதங்களின் முன்னறிவிப்பு, சான்றோர்கள் பார்வையில் (ஸல்), உத்தம நபியும், உண்மைத் தோழர்களும், பயணம் வகுத்த பாதை (ஹிஜ்ரத்) ஆகிய தலைப்புகளில் பொதுமக்கள் பேசலாம்.

இப்போட்டியில் அனைத்து சமுதாய மக்களும் ஜாதி, மத, இன வேறுபாடின்றி பங்கேற்கலாம்.

அண்ணலார் (ஸல்) ஓர் அழகிய முன்மாதிரி எனும் தலைப்பில் இல்லறம், வணிகம், வீரம், ஆட்சிமுறை, நட்பு, வணக்கம், பொறுமை, எளிமை, நேர்மை, விஞ்ஞானம் ஆகிய ஏதேனும் ஒன்றில் மாணவ, மாணவியர் பேசலாம்.

இப்போட்டிக்கு விண்ணப்பிக்க இறுதிநாள் 10.03.2008:

இப்போட்டியில் வெற்றி பெறுவோருக்கு இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் வழங்கும் ஷார்ஜா- திருச்சி- ஷார்ஜா இலவச விமானப் பயணம், ஈடிஏ அஸ்கான் நிறுவனம் வழங்கும் திர்ஹம் 500 பரிசுக்கூப்பன், லேண்ட் மார்க் ஹோட்டல் வழங்கும் நான்கு கிராம் தங்க நாணயம், அல் ஹஸீனா தங்க நகை மாளிகை வழங்கும் திர்ஹம் 200 பரிசுக் கூப்பன், அல் மஸ்ரிக் இண்டர்நேஷனல் வழங்கும் ஜெனார்ட் கைக்கடிகாரம் ஆகியவை வழங்கப்படும்.

போட்டி குறித்த மேலதிக விபரங்களுக்கு விழாக்குழு செயலாளர் காயல் யஹ்யா முஹ்ய்யத்தீன் 050 58 53 888, ஜமாஅத் ஒருங்கிணைப்பாளர் கீழக்கரை ஹமீது யாசின் 050 2533712, ஈமான் அலுவலகம் 04 2661415 தொலைநகல் 04 2664142 ஆகிய இலக்கங்களில் தொடர்பு கொள்ளலாம்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X